திங்கள், 21 ஜூலை, 2014

மிதுன லக்கினம் - லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுன ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

மிதுனம் கால புருஷ தத்துவத்திற்கு 3ம் ராசியாகவும் உபய காற்று தத்துவ ராசியாகவும் அமைவதால் ஜாதகரின் அறிவாற்றல் சிறந்து விளங்கும், ஜாதகர் தனது சகோதர வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை பெறுபவர் என்பது உறுதியாகிறது, எடுக்கும் முயற்சிகளில் எவ்வித இடையூறும் இன்றி பல வெற்றிகளை குவிப்பார்கள், தன்னம்பிக்கையான மன நிலை ஜாதகருக்கு பிறவியிலேயே அமைந்திருக்கும், எவ்வித சந்தர்ப்பத்தையும் மிகவும் சிறப்பாக கையாளும் வல்லமை பெற்றவர்கள்.

 மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் சிறப்பாக விளங்கும் துறைகள் என்று எடுத்து கொண்டால், கல்வி துறை மற்றும் வியாபாரம் மற்றும் தொழில் துறை இது சார்ந்த தொழில்களில் ஜாதகர் பன்மடங்கு யோகங்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவார், ஜாதகர் செய்யும் சிறு வியாபாரமும் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெரும், ஜாதகர் அணுகும் வியாபார நுணக்கங்கள் எவராலும் கண்டுபிடிக்க இயலாது, தனிப்பட்ட விதத்தில் ஜாதகரின் தொழில் ரகசியங்கள் அமைந்திருக்கும்.

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மன நிலை மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் வித்தையை பிறவியிலேயே கற்று உணர்ந்திருப்பார், குறிப்பாக யோகம் , தியானம் போன்ற விஷயங்கள் ஜாதகருக்கு இயற்கையாகவே சித்திக்கும், எவ்வித சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் வாழும் சிறந்த மனிதர்கள் என்றால் அது மிகையில்லை, தன்னை சார்ந்தவர்களின் வழ்க்கையிலூம் முன்னேற்றம் காண விரும்பும் மன நிலையை இயற்கையிலேயே பெற்றிருப்பர்கள், இதன் மூலம் இவர்களின் முன்னேற்றமும் அமைந்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினம் மிக வலிமையாக அமையும் பொழுது, சூது லாட்டரி, குதிரை பந்தையம், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தையங்களில் வெற்றி என்ற அமைப்பில் மிகுந்த யோகத்தை தரும், எதிர்பாராத வகையில் லாபத்தை வாரி வழங்கும், வட்டி தொழில், கமிஷன் தொழில் ஆகியவற்றில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருமானம் காணும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தன்னிடம் உள்ள செல்வத்தை பன்மடங்கு பெருக்கும் வித்தை அறிந்தவர்கள், பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளும் மன நிலையை தரும்.

மிதுன லக்கினம் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகரின் கற்பனை ஆற்றலும், சிந்தனை ஆற்றலும் பன்மடங்கு வேலை செய்யும், சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் மனிதகுலம் சிறப்பாக வாழ தேவையான அறிய பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, இவர்கள் கண்டுபிடித்த சில பொருட்கள் மனிதர்களின் உயிரை காக்கும் வல்லமை கொண்டவை, மேலும் பல சிரமமான வேலைகளை மிக எளிதாக செய்யும் பல கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு கொடுத்தவர்களும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களே.

  எந்த ஒரு சூழ்நிலையிலும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களை ஏமாற்ற இயலாது, மேலும் அது போன்ற சந்தர்பங்களை மிக எளிதாக கையாண்டு தவிர்த்துவிடும் தன்மை கொண்டவர்கள், இவர்கள் ஒருவரை ஏமாற்ற முடிவு செய்துவிட்டால் அதை தடுக்க கடவுள் வந்தாலும் இயலாது, இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெற்று 7ம் பாவகம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது மட்டுமே நடைமுறைக்கு வரும்.

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் பாவகமாக வரும் மிதுனத்தை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜோதிடம் மற்றும் கணிதம் மிகவும் சிறப்பாக வரும், உடல் வலிமையை விட ஜாதகருக்கு மன வலிமையையும் அறிவாற்றலுமே சிறந்து விளங்கும், பல சதிவேலைகளின் மர்மங்களை இவர்கள் மிக எளிதில் கண்டுணர்ந்து தடுத்தது நிறுத்தும் வல்லமை பெற்றவர்கள், வியாபர துறையிலே கொடிகட்டி பறக்கும் பல அன்பர்கள் இந்த மிதுன லக்கினம் வலிமை பெற்றவர்களே என்றால் அது மிகையில்லை.

மிதுன ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மிதுன  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மிதுன லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக