ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 3




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

சிம்ம லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது சிம்ம லக்கினத்திற்கு ராகு 2ம் பாவகத்திலும், கேது 8ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 சிம்ம லக்கினத்திற்கு 2ல் சஞ்சாரம் செய்யும் ராகு சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இனிவரும் 18 மாதங்கள் தொழில் ரீதியான வருமான வாய்ப்புகள் வந்து குவியும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், வாக்கு பலிதம் உண்டாகும், சொன்ன வாக்கை காப்பாற்றும் நிலை உண்டாகும், சிலருக்கு திடீரென திருமணம் அமைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை கிட்டும், இவரின் பேச்சுக்கு யாவரும் கட்டுபடுவார்கள், ராகு மண் தத்துவத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த 18 மாதங்கள், பொருள் வரவு வண்டி வாகன யோகம், வீடு கட்டும் யோகம், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை ராகு பகவான்  வாரி வழங்குகிறார்.

 சிம்ம லக்கினத்திற்கு 8ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்மலக்கினதாருக்கு மன நிம்மதியை வலுவாக பதம் பார்க்க கூடும், தேவையில்லாத கவலை, அலைச்சல், பயனில்லாத காரியங்களை செய்து அதன் மூலம் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஏற்ப்படுத்துவார், தன்னம்பிக்கை குறையும், எந்த ஒரு விஷயத்திலும் அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் வெகுவாக மனோ ரீதியான பாதிப்பிற்கு உட்படுத்துவார், எனவே இனி கேது மீனத்தில் சஞ்சாரம் செய்யும் 18 மாதங்களும் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், மற்றவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது, மன நிம்மதிக்கு நன்மை பயக்கும், போதை வஸ்துக்களை தவிர்ப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்  திடீர் இழப்பு தவிர்க்கலாம்.

கன்னி லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கன்னி லக்கினத்திற்கு ராகு 1ம் பாவகத்திலும், கேது 7ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கன்னி லக்கினத்திற்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு மிகுந்த யோகத்தை இனி வரும் 18 மாதங்களுக்கு வாரி வழங்குகிறார் என்பதில் ஐயம் இல்லை, மேலும் சிறப்பான உடல் நலம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குகிறார், வெளியூர் மற்றும் வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை இனி வரும் காலங்களில் கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் தடையின்றி பெறுவார்கள், மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு இது உகந்த காலமாக கருதலாம், உடல் நலம் வெகு விரைவில் குணம் பெரும், வங்கி கடன் பெறுவதற்கும், கடன் பெற்று தொழில் துவங்க சரியான காலம் இது மேலும் மற்றவர்களின் உதவி எதிர்பாராமல் தேடிவரும் என்பது குறிப்பிட தக்கது பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும் நேரம் என்றால் அது மிகை இல்லை.

 கன்னி லக்கினத்திற்கு களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் வாழ்க்கை துணை வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், தேவையற்ற விஷயங்களுக்கு வீண் பிடிவாத தன்மையை அதிகமாக தரக்கூடும், முடிந்து போன விஷயங்களுக்காக சச்சரவில் ஈடுபட்டு மன நிம்மதியை வெகுவாக கெடுத்து கொள்ளும் தன்மையை தர கூடும், இருப்பினும் சிறந்த புண்ணிய திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் கிட்டும், சிறந்த ஆன்மீக அன்பர்களின் நட்புறவும், ஆன்மீக பெரியோர்களின் நல்லாசியும் கிடைக்கும், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் சில தோல்விகளை சந்திக்க வேண்டி வரும், எனவே கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் களத்திற ஸ்தான அமைப்பில் இருந்து சற்று கவனமாக இருப்பது நலம் தரும்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் சிம்ம லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கன்னி லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக