வெள்ளி, 8 மே, 2015

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்க படும் பொழுது ஜாதகர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விஷயங்கள்!



ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானமாக கருதப்படும் 6,8,12ம் வீடுகளில், 8ம் வீடு ஆயுள் பாவகமாக வருகின்றது, பாரம்பரிய ஜோதிடத்தில் 6,8,12ம் வீடுகள் பாதிப்படைவதும்,வலிமை பெறுவதும் மிகுந்த இன்னல்களையே வழங்கும் என்பது பொதுவான கருத்து, இது முற்றிலும் தவறானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலன்களை வழங்கும் தன்மை உண்டு, ஒவ்வொரு பாவகமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், ஒவ்வொரு பாவகமும் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

குறிப்பாக, ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்குவார், தனது உடலையும் மனதையும் பாதுகாக்க இயலாமல் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் இன்னல்களை தருவார், இதை போன்றே 12 பாவக வழியில் இருந்து ஒவ்வொருவரும் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகின்றனர்.

நாம் இந்த பதிவில் சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து எவ்வித இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் 8ம் பாவகம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடனோ, அல்லது தொடர்பு பெற கூடாத வீடுகளுடனோ தொடர்பை  பெற்றால், ஜாதகர் ஆயுள் பாவகமான 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், நடைமுறையிலோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கபட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று திசாபுத்திகள் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் நெருப்பில் இட்ட புழுபோல தவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஆயுள் பாவகம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது, ஜாதகரின் ஆயுளுக்கு பங்கம் அல்லது கண்டம் ஏற்ப்படும் என்றுதான், பெரும்பாலும் இது நடைமுறையில் ஒத்து வருவதில்லை, ஜாதகரின் ஆயுள் பாவகம் எந்த தத்துவத்தில் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பு, மாறாக 8ம் பாவக வழியில் இருந்து வேறு சில இன்னல்களும் வரக்கூடும், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமான இழப்பை முதலாவதாக சொல்லாம், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக அளவு இன்னல்களையும், கருத்து வேறுபாடு காரணமாக மன வாழ்க்கையில் பிரிவும், கணவன் மனை வழியில் இருந்து, தாங்க இயலாத வண்ணம் வரும் துன்பங்களையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்கிறது, மேலும் எதிர்பாராத திடீர் செலவுகள், விபத்துகளை தவிர்க்க இயலாது, மற்றவர்களை நம்பி செய்யும் பணம் மற்றும் பொருள் முதலீடுகள் திடீர் இழப்பை சந்திக்கும், ஜாதகர் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூரிலோ இருப்பின் எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க படும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு தனது கூட்டாளி வழியில் இருந்து எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகரின் சிந்தனை திறனும், செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்க படும், இதனால் உடல் நிலையும் மன நிலையம் வெகுவாக பதிக்கப்படும், உடல் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும், உடல் நிலை வெகுவாக பாதித்து உருமாற்றம் பெரும் சூழ்நிலைக்கும் ஜாதகர் தள்ளபடுவார், மேலும் மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் ஒப்பந்த கையெழுத்து செய்து கொடுத்திருந்தால் அதன் வழியில் ஜாதகர் கடுமையான இன்னல்களையும், பொருள் இழப்பையும் சந்திக்கும் சூழ்நிலையை பெற கூடும், தனது நண்பர்களுடனும் உறவுகளுடனும் சுமுகமான போக்கை கடைபிடிக்காமல், கருத்து வேறுபாடு காரணமாக பல இன்னல்களை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஆயுள் பாவகமான 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கவனமாக இருப்பது நலம், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமானம் மற்றும் வருமான இழப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னேற்றம் அற்ற நிலை ஆகியவற்றை மிக தெளிவாக குறிப்பிடுவது ஆயுள் பாவகமே, மேலும் வாழ்க்கை துணையின் பேச்சு மற்றும் ஆதரவு போன்ற விஷயங்களையும் ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும், மாறாக அவசர கதியில் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பின் ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு வரும் வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் தவிர்க்க இயலாது.

மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் ஜாதகருக்கு இழப்பை தரக்கூடும் என்பதால், முதலீடு செய்யும் முன் அதிக கவனத்துடன் இருப்பது நலம், தனது முடிவில் உறுதியாக மற்றும் பிடிவாதமாக நில்லாமல் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகளையும், எதிர்பாராத விபத்துகளையும் தவிர்க்க இயலும், விபத்தின் மூலம் வரும் துன்பங்களையும், வீண் விரையங்களையும் தவிர்க்க ஜாதகர் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அனைத்து விஷயங்களிலும் நடந்துகொள்வதும், அதிக கவனமுடனும் பொறுமையுடனும், அறிவில் விழிப்பு நிலையுடன் இருப்பது நலம் தரும்.

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் தனது பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், உடல் நிலையில் சிறு சிறு தொந்தரவுகளை தர தவறுவதில்லை, மேலும் காய தழும்புகள் உடலில் நிச்சயம் உண்டாகும், சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரண சிகிச்சை மேற்கொள்ளும் தன்மையை தருகிறது, மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு, பெரிய அளவில் வாழ்க்கை துணை வழியில் இருந்து வீண் செலவுகளை தர தவறுவது இல்லை, வாழ்க்கை துணைக்கு இது நல்ல நிலை என்ற போதிலும், ஜாதகரின் வங்கி கணக்கில் வறட்ச்சி என்ற நிலையே  எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்த போதும் ஆயுள் பாவகம் ஒன்று மட்டும் பாதிக்க பட்டதால் ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறும் இன்னல்கள் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக