செவ்வாய், 12 மே, 2015

திருமண வாழ்க்கை எனக்கு சிறப்பாக அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?



 கேள்வி :

எனது முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவை சந்தித்து பலவருடங்கள் ஓடிவிட்டது, பெற்றோரின் நிர்பந்தம் காரணமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், இரண்டாவதாக அமையும் திருமண வாழ்க்கை எனக்கு வெற்றியை தருமா? இரண்டாவதாக வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?

பதில் :

 பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், அந்த ஜாதகருக்கு திருமண பொருத்தம் காணும் பொழுது மிகவும் சிறப்பு கவனம் எடுத்து வாழ்க்கை துணைவரை அமைத்து தருவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை கரையேற்றும், மேலும் திருமண வாழ்க்கை பிரிவை தாராமல், தாம்பத்தியத்தில் ஒற்றுமையும், நல்ல இணக்கமும் கருத்து வேறுபாடற்ற இல்லற வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், ஜாதகரின் திருமண வயது வந்தவுடன் ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், ஒருவேளை நடைமுறையில் பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு திருமணம் தடை ஏற்ப்படும் அல்லது பொருத்தம் அற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமண வாழ்க்கை கசந்து, ஜாதகரை மணமுறிவை நோக்கி விரைவில் அழைத்து செல்லும், எனவே ஜாதகர் திருமணம் செய்யும் முன் தனது ஜாதக வலிமையை பற்றிய தெளிவும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவும் சிறந்த ஜோதிடரின் வழிகாட்டுதலின் பெயரில் பெறுவது அவசியம்.

இனி பதிவின் ஆரம்பத்தில் வினவபட்ட கேள்விக்கு உண்டான பதிலை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !



லக்கினம் : தனுசு 
ராசி : துலாம் 
நடசத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு தனுசு லக்கினம், சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானமான 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தியில் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது, திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து, விகாரத்து பெற்றனர், ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது விதியின் வலிமையை ஜாதகிக்கு தெள்ள  தெளிவாக உணர்த்தியது.

இனி அடுத்து நடப்பதை பற்றி சிந்திப்போம், ஜாதகியின் கேள்வி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? 

நிச்சயம் வெகு சிறப்பாக அமையும் ஏனெனில் ஜாதகின் சுய ஜாதக அமைப்பின் படி, இரண்டாவது திருமண வாழ்க்கையை பற்றி தெரிவிக்கும் 9ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான அமைப்பாக கருதலாம், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு இரண்டாவது திருமண வாழ்க்கையின் மூலம் சிறப்பான கணவனை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை நிச்சயம் பெறுவார், தற்பொழுது நடைமுறையில் உள்ள சனி திசை புதன் புத்தி ஜாதகிக்கு 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலனை தருவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமான துலாம் ராசியாக 11ம் பாவகம் அமைவதும், சர காற்று தத்துவ நிலையில் செயல்படும் தன்மையை பெற்ற துலாம் ராசி, 11ம் பாவகமாக ஜாதகிக்கு நின்று யோக பலனை வாரி வழங்குவதும் சிறப்பனாதாக கருதலாம்.

எனவே ஜாதகி தாமதம் செய்யாமல் சிறந்த வாழ்க்கை துணையை தேடி ( இயற்கையாகவே நல்ல மணமகன் அமைவார் ) இரண்டாவது திருமணம் மூலம் 100% விகித யோக வாழ்க்கையை பெறலாம், இதில் எவ்வித தடைகளும் இல்லை, மேலும் ஜாதகி இரண்டாவது திருமணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெறுவார், குறிப்பாக தொழில் மற்றும் ஜீவன மேன்மை ஜாதகிக்கு நிச்சயம் உண்டாகும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக