ஞாயிறு, 21 ஜூன், 2015

லக்கினதிபதியின் திசை ஜாதகருக்கு நன்மையை மட்டுமே தருமா ?



சுய ஜாதகத்தில் லக்கினாதிபதி எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர் தனது திசையில் நன்மையை மட்டுமே தருவார் என்ற கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவே
" ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் எந்த பாவகத்திர்க்கு அதிபதி என்றாலும் சரி தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறாரோ, அந்த பாவக பலனை தங்கு தடையின்றி 100 % செய்வார் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இதில் லக்கினாதிபதி,கேந்திராதிபதி, கோனாதிபதி என்ற விதி விளக்கு கிடையாது, இதை சரியான உதாரண ஜாதகம் கொண்டு காண்பது, தெளிவை தரும்.


லக்கினம் : மகரம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்
 
ஜாதகருக்கு அடுத்து வரும் திசை சனி திசை ( 04/08/2016 முதல் 04/08/2035 வரை ) இந்த ஜாதகருக்கு லக்கினம் மற்றும் இரண்டாம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவாதல், சனிபகவானின் திசை ஜாதகருக்கு மிகுந்த யோகத்தையும் தான வரவையும் ஏற்ப்படுத்தும் என்பதாக பலன் சொல்லபட்டு இருக்கிறது, பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பாவகத்திர்க்கு அதிபதியை நிர்ணயம் செய்யும் பொழுது, அந்த ராசிக்கு அதிபதியை பாவக அதிபதியாக நிர்ணயம் செய்வது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும், மேலும் இது சரியான பலனை நிர்ணயம் செய்ய உதவாது, இந்த ஜாதகருக்கு  லக்கினத்திற்கு அதிபதி சனி அல்ல குரு என்பதே ஜாதக கணிதம் அறிந்த  அனைவருக்கும் தெளிவாக புரியும்.

மேலும் ஜாதகருக்கு சனி திசை வழங்கும் பலன்களை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், சனிபகவான் ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர எதுவாக உள்ளது, பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர  நீர்ராசியாக அமைவதும், கால புருஷ அமைப்பிற்கு 8ம் ராசியாக   அமைவதும் ஜாதகர் சனி திசையில் எதிர்கொள்ள இருக்கும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும் காட்டுகிறது, மேலும் ஜாதகர் மனதளவில்  அதிக போராட்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே ஜாதகர் எதிர்வர இருக்கும் சனி  திசையை மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது மட்டும்   உறுதி, லக்கினாதிபதி திசை தனக்கு நன்மை தரும் என்று ஜாதகர் கவனம் இன்றி இருப்பின் ஜாதகருக்கு வரும் இழப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கும்  என்பது மட்டும் நிச்சயம்.

பொதுவாக சுய ஜாதகத்தில்  நடைபெறும் திசை புத்திகள், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் எதிர்காலத்தை ஜாதகர் மிக தெளிவாக மிக எளிதாக எதிர்கொள்ள இயலூம், மாறாக நடைபெறும் திசை புத்தி எந்த பாவக பலனை வழங்குகிறது என்ற விஷயம் தெரியாத பொழுது , ஜாதகர் உண்மைக்கு புறம்பான ஆலோசனைகளின் பேரில் மிக பெரிய  பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட கூடும், மேற்கண்ட ஜாதகத்தில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையிலும், 2ம் பாவக அதிபதி என்ற முறையிலும், லக்கினத்திற்கு 8ல்  மறைவு நிலையில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு லக்கினத்திற்கு அதிபதியாக வருவதால் மிகுந்த நன்மையை செய்வார் என்று  கணிப்பது மிக மிக தவறு, மேலும் சனி பாகாவன் திசை ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது நிச்சயம் நன்மையை தர  வாய்ப்பில்லை.

 எனவே ஜாதகர் 6,9,11ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது மட்டும் ஊறுதி, ஆக மேற்கண்ட வீடுகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகர் தன்னை தற்காத்து கொள்வது மிகுந்த  நலன்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடன்,நோய் மற்றும்  எதிரிகள் தொந்தரவு, 9ம் பாவக வழியில் இருந்து தனது நர்ப்பெயருக்கு களங்கம், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது, அறிவு திறன் மங்குதல், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைதல், பிற்போக்கு எண்ணங்கள், நம்பிக்கை இல்லாமல் செயல்படுதல் என்ற வகையில் பலன்களை தரக்கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக