திங்கள், 22 ஜூன், 2015

சுய ஜாதகத்தில் திருமண யோக நிலையும், குருபலமும், நடைபெறும் திசை வழங்கும் பலன்களும்!


 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில், சுய ஜாதகத்தில் குருபலம் பெறுவது அவசியமானதாக பெரும்பாலான ஜோதிடர்கள் கருதுகின்றனர், அதாவது சுய ஜாதகத்தில் ராசிக்கு குருபகவான் 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடிவரும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு, குருபகவான் ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பதும், சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் வழங்கும் பலன்களை கருத்தில் கொள்ள தேவையில்லை என்பது போன்ற மாய தோற்றம் உள்ளது, இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்ர்களே !




லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

 மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு  ( 21/03/2001 முதல் 22/03/2019 வரை ) ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவகம் சர ராசி என்றமுறையில் 100% அவயோக பலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, மேலும் இந்த ஜாதகருக்கு ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் குருபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் 1முறைக்கு மேல் கோட்சார சஞ்சாரம் செய்துவிட்டார், அதாவது குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்துவிட்டார், ஜாதகருக்கும் வயது 35 ஆகிவிட்டது, ஆனால் திருமணம் மட்டும் கைகூடி வரவில்லை, மேலும் சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் யோகத்தை செய்பவர் என்ற நிலைவேறு உள்ளது, ஆக இந்த ஜாதகருக்கு குரு பலம் பலன் தர இயலாமைக்கு காரணம் ஏன் ? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே.

பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகங்கள் வழங்கும்  பலாபலன்கள் என்ற விஷயங்களை கருத்தில் கொண்டால் மட்டுமே ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் நடைமுறை பலன்களை துல்லியமாக கூற இயலும் அன்பர்களே! மாறாக சந்திரனை அடிப்படையாக கொண்டு கோட்சார கிரக நிலைகளின் பலன்களை காண முற்படும் பொழுது, சுய  ஜாதகத்திற்கு உண்டான பலன்களை நிச்சயம் தெளிவாக கூற இயலாது என்பது மட்டும் உறதி, மேலும் முரண்பட்ட பலன்களையே ஜாதகருக்கு சொல்லவேண்டி வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதக பலன்களை ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை எவ்வித யோக பலன்களையும் வழங்கவில்லை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை ராகு திசை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் குரு புத்தியை தவிர நடைபெற்ற அனைத்து புத்திகளும் ஜாதகருக்கு 12ம் பாவக பலனையே ஏற்று நடத்தியிருக்கிறது.

 மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் புத்தியும் ( 08/10/2012 முதல் 09/10/2015 வரை ) 12ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையே வாரி வழங்குவது கவலைக்கு உரிய விஷயமாகவே படுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% அவயோக பலன்களை தருவது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் பாவகம் மட்டும் 30% வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது, திருமண வாழ்க்கை அமையும் காலம் எது ? என்ற கேள்விக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி திருமண வாழ்க்கையை அமைத்து தரும் என்பது பதில், ஏனெனில் அடுத்து வரும் சூரியன் புத்தி சுய  ஜாதக   ரீதியாக 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் இந்த வாய்ப்பை நிச்சயம் வழங்கும், ஜாதகர்  விழிப்புணர்வுடன் செயல்பட்டு திருமண வாழ்க்கையை அமைத்து கொள்வது சால சிறந்தது.

இந்த ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குரு பகவான், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் ஒன்னே கால் சுற்று வந்து விட்டார், இந்த கால கட்டங்களில் ராசிக்கு குரு பகவான் 6 முறைக்கு மேல் குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்த போதிலும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை அற்ற காரணத்தினாலும், நடைபெறும் ராகு திசை விரைய ஸ்தான பலனை தந்தாலும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறவில்லை, ராகு திசையில் ஜாதகருக்கு வந்த சில திருமண வாய்ப்புகளை ஜாதகரே தவிர்த்தது ஜாதகரின் குடும்ப ஸ்தானம் வலிமை அற்ற தன்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

எனவே சுய ஜாதகத்தில் 2,7 ம் பாவகங்கள் வலிமை அற்று இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு எவ்வித குரு பலமும் வாழ்க்கையில் திருமணத்தை அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், குரு பலம் இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்கும் இடமில்லை அன்பர்களே!

ஆக திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கோட்சார கிரகங்களின் பலன்கள் அல்ல சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பது உறுதி, மேலும் சந்திரனை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு ஜாதக பலன் காண முற்படுவது கணிப்பாகவே அமையுமோ அன்றி சுய ஜாதக கணிதமாக அமைய வாய்ப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை,  ஜாதக கணிதம் மூலம் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது ஜாதக ரீதியான தெளிவான பலன்களை 100% துல்லியமாக காண இயலும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக