ஞாயிறு, 21 ஜூன், 2015

திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும் ஜாதகர் தீமையான பலன்களையே அனுபவிப்பது ஏன் ?

 
 ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்திய போதும் ஜாதகரால் யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலை ஏன் ஏற்ப்படுகிறது? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேலும் கிழ்கண்ட உதாரண ஜாதகம் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற இயலும்.


லக்கினம் : மகரம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,2,3,6,7,12ம் வீடுகள் களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 02/12/2014 முதல் 02/12/2021 வரை )ஏற்றுநடத்தும் பாவக பலன்கள் 
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ஜீவன ரீதியான யோக பலனை தந்துகொண்டு இருப்பது மிகவும் சிறப்பான நிலையாக கருதலாம், மேலும் ஜாதகருக்கு ஜீவன ஸ்தனமானது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ அமைப்பிலும் அமைவதாலும், ஜாதகருக்கு நிலையான தனது மனதில் நினைத்த எண்ணங்களுக்கு ஏற்ப, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், எண்ணத்தின் வலிமைக்கு ஏற்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும், தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆனால் ஜாதகருக்கு நடப்பது முற்றிலும் முரண்பட்ட  வாழ்க்கையாக இருப்பது கவனிக்க தக்கது, நிறைய கடன் சுமை, வாழ்க்கை துணை வழியில்  இருந்து இன்னல்கள் மற்றும் பிறிவு என நடைபெறும் திசைக்கு ஏற்ற யோக பலன்கள் நடைபெறாமல், மிகுந்த இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை தந்துள்ளது, சுய ஜாதகத்திற்கு ஒத்து வாராத முரண்பட்ட பலன்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக இதை போன்ற ஜாதக அமைப்பில் ஜாதகத்தில் பலன்கான முற்படும் பொழுது, ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று அழைக்க பெரும் 5ம் பாவக நிலையை கருத்தில் கொண்டு பலன் காணுவதே  ஜாதகருக்கு  தெளிவான பலன்களை 100% சொல்ல இயலும், இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 200% இன்னல்களை தரும், மேலும் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மிகவும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதும் , ஜாதகரால் ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து எவ்வித யோக பலனை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு காரணமாக அமைவது, பூர்வ புண்ணியம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகர்  தனது பூவீகத்தில் குடியிருந்து கொண்டு தனது ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வதுமே என்றால் அது மிகையில்லை.

ஒரு ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள வலிமைக்கு ஏற்ப யோக பலன்களை அனுபவிப்பது எப்படி ? என்பதை ஜாதகரின் லக்கினமும், பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் 5ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருப்பது, ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், மேலும் லக்கினமும், பூர்வ புண்ணியமும் ஜாதகரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவுத்திறனையும் வெளிபடுத்தும் பாவகம் என்பதால், இந்த பாவக நலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  ஜாதகர் தனக்கு வரும் நல்ல நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என உதறும் சூழ்நிலையை தரும் , எனவே சுய ஜாதகத்தில் யோக பலன்கள் தரும் திசா புத்திகள் நடைபெற்றாலும், அதானால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் விளையாது, துன்பமே மிச்சும்.

மேற்கண்ட ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது ஜீவனத்தை மேற்கொண்டால் ஜாதகர் தனது ஜீவன ஸ்தான பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் சிந்தனை திறனும், அறிவு ஆற்றலும் பன்மடங்கு விருத்தியை வாரி வழங்கி, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், பெரும்பாலும் 5ம் பாவகம் வலிமை குன்றிய ஜாதகர்கள், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் போவதற்கு இதுவே காரணம் என்பது ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக