வியாழன், 14 ஏப்ரல், 2016

திசா சந்திப்பும், ஏகதிசை நடப்பும் தம்பதியர் வாழ்க்கையில் பிரிவை தருமா?

 
 
திருமண பொருத்ததில் அதிமுக்கியமான பொருத்தமாக கருதபடுவது, ஏக திசை நடப்பு எனும் திசா சந்திப்பு என்றால் அது மிகையில்லை, அதாவது வரணுக்கும் வதுவுக்கும் தற்பொழுதோ, எதிர்காலத்திலோ ஏக திசை நடைமுறைக்கு வருமாயின், தம்பதியரின் வாழ்க்கையில் புயல் அடிக்கும், திருமண வாழ்க்கை மன முறிவை நோக்கி இழுத்து செல்லும், எந்த ஒரு விஷயத்தாலும் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலையை தடுத்து நிறுத்தி விட முடியாது, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திசா சந்திப்பு எனும் ஏக திசை நடப்பு இல்லாமல் பார்த்து கொள்வது தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு நிலையை தாராது, ஏனெனில் தம்பதியருக்கு எதிர்வரும் காலங்களில் குரு திசை, மற்றும் சனி திசை ஏக காலத்தில் நடைபெறும் என்பதால், குரு திசையில் தம்பதியருக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது, சனிதிசை மிகுந்த தீமையை செய்யும் என்பதால், சனி திசையில் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டு நிச்சயம் பிரிவை தரும், சனி பகவானின் திசை என்றாலே தீமையைதான் செய்யும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை, எங்களது தலை சிறந்த ஜாதகத்தின் கணிப்பை மீறி திருமண செய்தால், அதற்க்கு பிறகு வரும் இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

என்று பொருத்தம் பார்க்க சென்ற உங்களை மிரட்டினால், துண்டை காணம் துணிய காணம் என்று ஓட்டம் பிடிப்பீர்களா? மாட்டீர்களா ? இவர்களது ஜாதக பொறுத்த கணிதத்தில் கல்லை கொண்டுதான் அடிக்க வேண்டும், மேற்கண்ட வாதத்திற்கு உற்பட்ட வது வரனின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே ! இவர்களின் கூற்படி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் ஏக திசை நடைபெறும் காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரிவை தருமா? குரு,சனி திசை தம்பதியருக்கு இன்னல்களை தருமா? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :

லக்கினம்: சிம்மம்
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

வது ஜாதகம் 


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

வரனின் ஜாதகத்தில் தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, வதுவின் ஜாதகத்தில் தற்பொழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது,

இருவருக்கும் நடைபெறும் திசை தரும் பலன்கள் பற்றி சிந்திப்போம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்புகளையும், சிறந்த பேச்சு திறமையையும்,  இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து பதவியில்  வெற்றி, பதவி உயர்வு, அதிகாரிகள் உதவி, சொந்த முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், நல்ல உடல் நிலை, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை  விரைவில் அடைதல், வசதிமிக்க உத்தியோகம், திடீர் பதவி உயர்வு, வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் என்ற  வகையில் யோகத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் சூல்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறி நன்மையை செய்யும், நல்ல அயன சயன சுகத்தை தரும், திடீர் பதவி உயர்வு, தொழில் துறையில் திடீர்  முன்னேற்றம், மன நிம்மதியான வாழ்க்கை என்ற வகையில் குரு திசை ஜாதகருக்கு யோகத்தை  தரும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு தசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கம் மூலம் பெயரும் புகழும் கிடைத்தல், நல்ல வாழ்க்கை துணை கிடைத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, சமூகத்தில் பெயரும் புகழும் கிடைத்தல் என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து நல்ல சுக  போகங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கை மற்றும் வண்டி வாகன  யோகத்தையும் ஸ்திரமாக வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் முன்னேற்றங்களையும், கெளரவம் குறையாத யோக வாழ்க்கையையும், ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும்,  நிலையான பதவியையும், தொழில் துறையில் நல்ல  முன்னேற்றத்தையும் தரும், எனவே வரன் வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை வரன் வதுவுக்கு தரும் பலாபலன்கள் :

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகர் சனி திசை காலங்களில் பதவியில் வெற்றி, செய்யும் தொழில் அபிவிருத்தி, திடீர் முன்னேற்றம், தான் செய்யும்  காரியங்களில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் அகலும் தன்மை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், மக்கள் செல்வாக்கும், ஆதரவும் ஜாதகிக்கு மிகுந்த பெயரையும் புகழையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணையுடன் இணைபிரியா யோக வாழ்க்கையை சனி மஹா திசை வாரி வழங்கும் .

இதுவே மேற்கண்ட 2 ஜாதகத்தில், குரு,சனி மகா திசை வழங்கும் பலாபலன்கள் ஆகும், இந்த உண்மைக்கு மாறாக பதிவின் ஆரம்பத்தில் மற்றவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் தேவையற்ற வீண் மன பயத்தையே தரும் என்பதை "ஜோதிடதீபம்" வரன்,வதுவின் உறவுகளுக்கு தெளிவு படுத்தியது.

நவ கிரகங்கள் தனது திசை புத்தி காலங்களில் தரும் பலாபலன்கள்  பற்றிய தெளிவு இல்லாத பொழுதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்ப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, சுப கிரகங்களின் திசாபுத்திகள் அனைத்தும் நன்மையை செய்துவிடுவதில்லை, அசுப கிரகங்களின் திசை புத்திகள் அனைத்தும் தீமையை செய்யும் என்பதும் முற்றிலும் தவறனா கருத்தாகவே உள்ளது, நவகிரகங்களின் திசா புத்திகள் அனைத்தும், சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே தமது திசை புத்திகளில் யோக அவயோக பலன்களை தருகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% விகிதம் ஜாதகருக்கு யோக பலன்களே நடைபெறும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நடைபெறும் திசை புத்திகள் சுப கிரகத்தின் திசாபுத்திகள் என்றாலும், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக