சனி, 2 ஏப்ரல், 2016

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், மணமுறிவை தருமா?


சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் பாவகங்கலான குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது, ஒருவேளை பாதிக்க பட்டால் சம்பந்த பட்ட ஜாதகர் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதிக்க படுவது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை தரும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகியின் இல்லற
வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களையும், எதிர்பாராத இழப்புகளையும் கடுமையாக வாரி வழங்கும்.

 ஜாதகி சமுதாயத்திற்கு உற்படாத, கட்டுபடாத முரண்பட்ட வாழ்க்கை முறையையும் வழங்கி விடும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்தும் அதிக அளவில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கும், நடைபெறும் திசா புத்தியும் சாதகமாக அமையாவிடில், சம்பந்தப்பட்ட ஜாதகியின் வாழ்க்கை நரக வாழ்க்கைக்கு இணையான பலன்களை தர ஆரம்பித்துவிடும், இயற்கையாகவே குடும்ப கௌரவம் என்பது பெண்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே அமைவதால், பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்கபடுவது, ஜாதகிக்கு குடும்பம், சமுதாயம் மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, மேலும் ஜாதகியின் வாழ்க்கை பலரின் விமர்சனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிக அளவில் சம்பந்த பட்ட ஜாதகியின் வாழ்க்கை துணையான கணவரையே வெகுவாக பாதிக்கும், பாதிப்பின் தன்மை உணர்வதற்கு பாதக ஸ்தானம் சர, ஸ்திர, உபய இயக்க நிலையையும், நெருப்பு,நிலம்,காற்று மற்றும் நீர் தத்துவ ராசிகளின் தொடர்பை தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சுவாதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், உயிர் உடலாகிய லக்கினம் ஜாதகிக்கு தொடர்பு பெறுவது திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகம், எனவே அடிப்படையிலேயே ஜாதகிக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே சிதைத்துகொள்ளும் தன்மையையும், பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவில்லாமல் தனது போக்கிற்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகி செய்யும் காரியங்கள் யாரும் அறியாவண்ணம் ரகசியமாக அமைந்தது, வழிகாட்டுதல்கள் இல்லாத வாழ்க்கை முறை ஜாதகியின் குணநலன்களை வெகுவாக பாதித்தது, ஜாதகிக்கு லக்கினம் பாதிக்க படுவது,உடல்,மனம் மற்றும் வாழ்க்கை முறையை வெகுவாக பாதித்தது, இந்நிலை தற்பொழுதும் தொடர்வது ஜாதகிக்கு உகந்ததல்ல.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பேச்சு மற்றும் வாக்குவாதம் ஜாதகிக்கு பேரிழப்பை வழங்கியது, இதன் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருததக்கது, ஜாதகியின் வருமான நிலை தொடர்ந்து கேள்வி குறியாக இருப்பது பொருளாத பின்னடைவை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் திருமணம் நடை பெற்றும் குடும்ப வாழ்க்கை என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையாத சூழ்நிலையே நிலவுகிறது, பல எதிர்ப்புகளை தனது வாக்குவாதத்தின் மூலம் ஜாதகி உருவாக்கி கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது, குடும்ப வாழ்க்கையில் ஜாதகிக்கு ஆர்வம் இல்லாத தன்மையும், தேவையில்லாத வாக்குவாதமும் எதிர்பாராத இழப்புகளை ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருப்பது 2ம் பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பல்ல.

மேற்கண்ட பாவக வலிமை அற்ற நிலைக்கு, சிகரம் வைத்தார் போல் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, பாதக ஸ்தான பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து திருமணம் ஆனா சில நாட்களிலேயே வழங்க துவங்கியது ஜாதகியின் கணவருக்கு, திருமணதிற்கு முன்பு நல்ல வேலையில் ஜாதகியின் கணவர் கைநிறைவான வருமானத்துடன் இருந்தார், திருமணம் ஆனா 10 நாட்களிலேயே ஜாதகருக்கு வேலை பறிபோனது மட்டும் இன்றி, இதுவரை அவருக்கு ஒரு சிறு வேலை வாய்ப்பும் அமையவில்லை, ஜாதகர் வீணாக அலைந்தது மட்டுமே பலனாக கிடைத்தது, தனது மனைவி வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை ஜாதகர் பெற்றார், ஜீவன வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, வருமானம் முற்றிலும் நின்றது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவியது, மேலும் இதுவரை சிறப்பாக இருந்த, ஜாதகரின் சுய கௌரவமும், அந்தஸ்தும் வெகுவாக  பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது ( இதற்க்கு காரணமாக ஜாதகரின் சுய ஜாதக நிலையும் காரணமாக அமைந்தது கவனிக்க தக்க அம்சமாகும் ) திருமணதிற்கு முன்பு ஜீவன வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும், திருமணதிற்கு பிறகு ஜாதகரின் சூழ்நிலை நேரெதிராக மாறி ஜீவன வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்து ஜாதகரை திக்குமுக்காட வைத்து கொண்டு இருக்கிறது, தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் திசா புத்திகள் ஜாதகிக்கு சாதகமாக இருப்பது, ஜாதகியின் இல்லறவாழ்க்கையில் பிரிவை தர  வாய்ப்பில்லை என்ற போதிலும், களத்திர பாவக வழியிலான 200% விகித இன்னல்களை ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் தங்கு தடையின்றி தரும் என்பது கவலைக்கு உரியதாகும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகியின் கணவருக்கு நன்மைகளை தாராது, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படும்பொழுது, தம்பதியரின் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்க படும், திருமண பந்தம் விவாகரத்தில் முடியவும் வாய்ப்புள்ளது, எனவே திருமணதிற்கு முன்பே வாழ்க்கை துணையை ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை உணர்ந்து  தேர்வு செய்வது சிறந்த இல்லற வாழ்க்கையை  அமைத்து தரும், அதற்க்கு முன் தமது ஜாதகத்தில் 2,7ம் பாவக  வலிமையை பற்றி  தெளிவாக தெரிந்து வைத்திருப்பது, தமது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்க சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

 வரனின் ஜாதகதிலோ, வதுவின் ஜாதகதிலோ 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், இனிமையான இல்லறம் அமைய வாய்ப்புண்டு, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கபடுவதும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், இல்லற வாழ்க்கையில் மன கசப்பையும், பிரிவு என்ற நிலையையும் நிச்சயம் தரும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால, 200% விகித இன்னல்களை இருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது மாற்ற இயலாத ஜாதக நிலையாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. வணக்கம்.1 முதல் 12 வரை உள்ள பாவங்கள் தீய பாவங்களான 3,6,8,12 மற்றும் பாதக ஸ்தனத்துடன் சம்மந்தம் பெறும் போது அந்தந்த பாவக வழியில் இருக்கும் தீமையை குறைக்க எந்த வகையான வழிபாடு பரிகாரம் பலன் தரும் என கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி

    பதிலளிநீக்கு