திங்கள், 12 மார்ச், 2018

ராகு 3 6 9 11 ல் ( மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் ) இருந்தால் யோக பலன்களை வாரி வழங்குமா ?


ஐயா ...வணக்கம்!

1--10--1967 காலை 10: 30 மணி திண்டுக்கல் ...இந்த ஜாதகருக்கு ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன.இதை ஆய்வு ஜாதகமாக தாங்கள் எடுத்து கொள்ளலாம் ..ஜோதிடஅடிப்படை விதிகள் இந்த ஜாதகத்திற்கு பொருந்தவில்லை...உங்கள் கருத்து என்ன ....

ஐயா தற்போது ராகுதிசை குரு புத்தி நடக்கிறது ...
ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம் மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால் யோகம் இந்த ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம் ...ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் .....இதில் எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லை .... இப்போது நிலமை இந்த ஜாதகருக்கு மிக மோசம்......எப்போது யோகம் வேலை செய்யும் ....ஐயா

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது நவகிரகங்கள் ஓர் பாவகத்திலோ அல்லது ராசியிலோ அமர்ந்து இருப்பதால் வருவது அல்ல, ஜெனன நேரத்தில் கிரகங்களின் ஆளுமையின் அடிப்படையில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் பெரும் தொடர்பின் அடிப்படையில் அமைவதாகும், பெரும்பாலும் நாம் ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு பலன் காண்கின்றோம், இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதுடன், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை என்ன ? என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள இயலாது, கிழ்கண்ட ஜாதகருக்கு ராசியில் ராகு மேஷத்தில் அமர்ந்து இருப்பதால் 6ல் ராகு அமர்ந்து இருப்பதாக கருதிக்கொண்டு கேள்வி எழுப்பி இருக்கின்றார் அது தவிர உப கேள்விகளும் உண்டு, இதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம்  இந்த ஜாதகத்திற்கு பலன் தர மறுப்பதேன் ?

கிரகங்கள் ஓர் ராசியில் அமர்ந்தாலே யோகத்தை தரும் என்று கருதுவது ஜாதக கணிதத்திற்க்கு புறம்பானது, ( ராகு கேது கிரகங்களுக்கு விதி விளக்கு உண்டு  என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை  பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 6ல் ராகு அமர்ந்து இருக்கின்றார் என்பதே முற்றிலும் தவறானது, ஜாதகரின் 6ம் பாவகம் மேஷ ராசியில் 18:59:40 பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசியில் 45:57:51 பாகையில் முடிவடைகிறது, ராகு மேஷ ராசியில் 05:27:27 பாகையில் அமர்ந்து இருப்பதால், மேஷ ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மையானது, அடிப்படையில் ராகு 6ல் அமர்ந்து இருக்கின்றார் என்பதே தவறானதா அமைந்து விடுகிறது.

அடுத்து மேஷத்தில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% சதவிகித பாதிப்பை தரும் அமைப்பில் காணப்படுகிறார், எனவே ராகு ஜாதகருக்கு 5ம் பாவகத்தை 100% விகிதம் கெடுத்து விடுகிறார் என்பதால், ஜாதகரின் பூர்வீகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது, சமயோசித அறிவு திறன் செயல்பட மறுக்கும், அறிவார்ந்த செயல்திறன் வெகுவாக குறைவதுடன், ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகவும், ஜாதகரின் விளைவு  அறியாத செயல்கள் யாவும் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பது ராகு 5ல் அமர்ந்து பாதிப்பிற்க்கு ஆளாக்குவதால் ஏற்படும் இன்னல்கள், சுய ஜாதகத்தில் ராகு தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பதுடன் சுய ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம்

குரு 9ம் பாவகத்தில் அமர்ந்து தனது 9ம் பார்வையை 5ம் பாவகத்தை வசீகரித்த போதிலும், 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை தனது கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொள்வதால் குரு பகவானின் பார்வைக்கும் வலிமை அற்று போகிறது, பொதுவாக குரு பார்வை நல்லது என்ற போதிலும், பார்க்கும் பாவகம் கேந்திரமா கோணமா என்பதில் வித்தியாசம் உண்டு, கோண பாவகங்களுக்கும், சம பாவகங்களுக்கும் குரு வின் பார்வை யோகத்தை நல்கும், இருப்பினும் கோண சம பாவகங்களில் ராகு அல்லது கேது தனது ஆளுமையை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் பொழுது குரு பகவானின் பார்வையும் பலன் தாராது, அனைத்து கிரகங்களையும் சாயாகிரகங்கள் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம்

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் உண்டாகும் என்பது ஓர் கட்டுக்கதையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையே ஓர் ஜாதகருக்கு சுபயோகங்களையும், அவயோகங்களையும் நல்குகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நம்பி, வாழ்க்கையில் இன்னலுறுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது, மேலும் நவகிரகங்கள் ஒருவருக்கு நன்மையையும், ஒருவருக்கு தீமையும் வழங்காது, அவரவர் சுய ஜாதக வலிமையே ஜாதகருக்கான நன்மை தீமை பலாபலன்களை நிர்ணயம் செய்யும் என்ற உண்மையை உணர்ந்து நமது சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெற்று வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லையே இது ஏன் ?

அடிப்படியில் சுய ஜாதகம் வலிமை இன்றி காணப்படுவதே இதற்க்கு காரணம் குறிப்பாக ஜாதகருக்கு 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் பெரும் பகுதி சிம்ம ராசியில் அமைந்து இருப்பதும் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை 1,3,9ம் பாவக  வழியில் இருந்து வாரி வழங்கும்.

ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன இது ஏன் ?

ராகு தனது திசையில் வலிமை அற்ற 11ம் பாவக பலனை சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து வாரி வழங்குவதும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷம் மற்றும் ரிஷப ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும், ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் குரு புத்தி மட்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, சிறந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண உதவும், ராசிகளில் கிரகங்கள் அமர்ந்து இருப்பதை கருத்தில்கொண்டு அவை நன்மை செய்யும், தீமை செய்யும் என்று பலன் கூறுவது சுய ஜாதக கணிதம் ( பாவக கணிதம் மற்றும் தொடர்பு  ) என்னவென்றே தெரியாமல் பிதற்றும் வாய் ஜாலம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக