செவ்வாய், 17 டிசம்பர், 2024

மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் மிதுனராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 மிதுன ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் மிதுன ராசியினருக்கு ஜீவன சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 தனது வர்க்க கிரகமான சனி பகவான் மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சரிக்கு காலம் தொழில் யோகத்தை சிறப்பாக வழங்கும் காலமாக அமையும், தனது தகுதி திறமைக்கான வேலை வாய்ப்பு, சுய தொழில் அல்லது கூட்டு தொழில் நிச்சயம் அமையும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பமும் கைகூடி வரும், சமூகத்தில் தங்களது கவுரவம் மற்றும் அந்தஸ்த்து அதிகரிக்கும், அரசியல் ரீதியான வெற்றிகள், பதவிகள் தேடிவரும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள், எதிலும் முதன்மை முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சாதகமாக மாறுதல், அரசுத்துறை சார்ந்த பணி அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள், தனது பெற்றோர்கள் ஆண்கள் தமது தந்தை, பெண்கள் தமது தாய் வழியிலான சுபயோகங்களை உதவிகளை சிறப்பாக பெறுவீர்கள்.

 தங்களது நீண்டகால ஆசைகள் லட்சியங்கள் கைகூடி வரும், வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்களை தகர்த்தெறிந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், எதிலும் வெற்றி, வருமான வாய்ப்புகள், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு வரும் யோகம், வங்கிகளில் இருந்து வரும் பொருளாதர உதவிகள், புதிய தொழில் துவங்க சந்தர்ப்பங்கள், தங்களது புத்திசாலித்தனமும் நுண்ணறிவு திறனும் தங்களை மேம்பட்ட ஒரு மாமனிதனாக பரிணமிக்க செய்யும் ஓர் அற்புதமான காலம் இது அன்பர்களே, நீண்ட கால லட்ச்சியமான சொந்த வீடு கனவு இந்த நேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும், இதுவரை தங்களை ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு மதிப்புமிக்க மாமனிதனாக விளங்கும் யோகத்தை சனிபகவான் ஜீவன ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து வழங்குவார், இனிவரும் இரண்டைரை ஆண்டுகள் தங்களின் தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெரும் வருமானம் தன்னிறைவாக வந்து சேரும், நிலையான தொழில் யோகம் உண்டு.

 தனது 6ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு வீரியஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு அதீத தைரியத்தையும், விடாமுயற்சியையும், வீரியம்மிக்க செயல்திறனையும் தொடர்ந்து வழங்குவார், பொதுவாக நவகிரகங்கள் 3,11ம் வீடுகளை வசீகரித்தாலும், சஞ்சாரம் செய்தாலும் சுபயோக பலன்களையே நல்குவார்கள், அந்த வகையில் சனிபகவான் தங்களது 3ம் வீட்டை வசீகரிப்பது கலைகளில் தேர்ச்சியை தரும், விளையாட்டுகளில் மிகபெரிய வெற்றியை தரும், சாதனைபுரியும் யோகம் உண்டு, அரசு துறை வேலைவாய்ப்பை பெறுவதற்கு சரியான நேரம் இதுவே ஆகும், குறிப்பாக மிதுன ராசி பெண்களுக்கு இந்த அமைப்பு வெகு விரைவாக கைகூடி வரும், மாணவமணிகள் கல்வியில் பலசாதனைகளை புரியும் அற்புத நேரமிது, தயக்கம் யாவும் நீங்கி, அறிவில் தெளிவும், கல்வியில் ஞானமும், எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் யோகமும் உண்டாகும், கடின உழைப்பை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவீர்கள், அதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்கும், சிறு வியாபாரிகள் மிகபெரிய அளவிலான வளர்ச்சியை பெறுவீர்கள், தன்னம்பிக்கை சரியான விஷயங்களை புரிந்துகொள்ளும் யோகம், தகவல் தொழில் நுட்பம், இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் எதிர்பாராத வெற்றிகளை பெறுவீர்கள், இளைய சகோதர உதவிகள் வந்து சேரும், ஏஜென்சி, பயணசீட்டு, தரகு, போக்குவரத்து தொழில்களில் மிகப்பெரிய தனசேர்க்கை வந்து சேரும்.

 தனது 7ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், தங்களின் குணநலன்களில் சிறப்பான முன்னேற்றம் வந்து சேரும், பொது வெளியில் நீங்கள் செய்யும் காரியங்கள் பாராட்டுதல்களையும் கவுரவத்தையும் தரும், சிறந்த நிர்வாகத்திறமையை வெளிப்படுத்துவீர்கள், தங்களது தாய் வழி சொத்துக்கள் கிடைக்க பெறுவீர்கள், பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் சீர் கிடைக்கும், விவசாயம் பண்ணை தொழில் அமைப்புகளில் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்க பெறுவீர்கள், முதல் தரமான சொகுசு வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது, குறிப்பாக ஆடை ஆபரணம் வீட்டிற்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கும் யோகம், திட்டமிட்டு ஓர் காரியத்தை வெற்றிகரமாக செய்து முன்னேற்றம் பெரும் தன்மை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, கடின உழைப்பின் மூலம்  தங்களுக்கான தொழிலை விரிவுபடுத்தும் யோகம், மனக்கவலை நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும், மிதுன ராசி பெண்களுக்கு திருமண யோகமும், சிறந்த புத்திரபாக்கியமும் கிடைக்கப்பெறுவீர்கள், உடல்ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும், வாகன யோகம் புதிய வீடு சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடிவரும், எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி தங்களுக்கு மிகுந்த மனமகிழ்வை தரும்.

 தனது 10ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், கணவன் மனைவி உறவு நிலைகளில் திடீர் பிணக்குகளை தரக்கூடும் என்பதனால், வாழ்க்கை துணையுடன் சற்று இணக்கமான சூழலை கடைபிடிப்பது நலம் தரும், வீண் வாக்குவாதம் பிரிவினையை தரக்கூடும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் இன்னல்கள் அதிகரிக்கும், வீண் அவப்பெயர் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும், குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் மற்றும் பெரியமனிதர்களிடம் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வது நலம் தரும், குறிப்பாக அரசுத்துறை அதிகாரிகளிடம் நேர்த்தியாக நடந்துகொள்வது சிறப்பை தரும், சட்டசிக்கல்களை தவிர்க்க தங்களது நடவடிக்கைகளில் சத்தியத்தை கடைபிடிப்பது நலம் தரும், உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் இருப்பது உங்களுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், காதல் திருமணம் விருப்ப திருமணம் போன்ற விஷயங்களில் அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் மிகபெரிய சிரமங்களையே உருவாக்கும், தனிமையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறான முடிவாகவே அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், கூட்டாளிகள், நண்பர்கள் வாழ்க்கை துணை பொதுமக்கள் வழியில் இருந்து அதீத நெருக்கடிகளையும், போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையே தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழல் உருவாக கூடும், பேச்சில் நிதானம் தேவை, வெளிநாடு பயணம் செய்வோர் உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது நலம் தரும், உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட இன்னல்கள் உண்டாகும், சரியான மருத்துவ சிகிச்சை தங்களுக்கு தீர்வை தரும்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696

புதன், 11 டிசம்பர், 2024

ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் 
ரிஷபராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 ரிஷப ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் ரிஷபராசியினருக்கு அதிர்ஷ்ட சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 தனது வர்க்க கிரகமான சனி பகவான் ரிஷப ராசிக்கு 11ல் சஞ்சரிக்கு காலம் ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த யோக காலமாக அமையும் என்றால் அது மிகையாகாது, பொதுவாக நவகிரகங்கள் வீரிய ஸ்தானம் எனும் 3ம் வீட்டில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலமும், லாப ஸ்தானமான 11ம் வீட்டில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலமும் சம்பந்தப்பட்ட ராசியினருக்கு முழு அளவில் நன்மைகளை மட்டுமே தருவார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை, அந்த வகையில் ரிஷப ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் யோகாதிபதி சனி பகவான் தங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை தன்னிறைவாக வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை, தங்களது மூத்த சகோதர சகோதரிகள் வழியிலான பிணக்குகள் நீங்கி சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டு, நீடித்த அதிர்ஷ்டத்தை பன்மடங்கு வாரி வழங்கும், முயற்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றிதரும், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பில் யோகம், புதிய சந்தர்ப்பங்கள், வெளிநாடுகளில் வேலை அல்லது தொழில் புரியும் யோகம், திருப்தியான மனநிலை, முதலீடுகள் வழியிலான சுபயோகங்கள் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கை துணை நண்பர்கள், கூட்டாளிகள், பெரியமனிதர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகபெரிய நன்மைகளும் லாபமும் வந்து சேரும்.

 அரசியலில் வெற்றி உயர்பதவி நிச்சயம் உண்டு என்பதால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மை அடையுங்கள், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக முயற்சியில் இறங்குவது அவசியம், மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதை விட்டு விட்டு சுயமாக சுய மரியாதையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காண இதுவே சரியான நேரம், மனதில் உள்ள தயக்கம் மற்றும் பயம் நீங்கி துணிச்சலாக சில முடிவுகளை மேற்கொள்ளும் நேரமிது அன்பர்களே, உங்களின் வாழ்க்கையை சீரமைத்து கொள்ள சனிபகவான் தொடர்ந்து உங்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருப்பார் என்பது கவனிக்க தக்கது, நீங்கள் மேற்க்கொள்ளும் சிறு முயற்சியும் அபரிவிதமான சுபயோகத்தை தரும்.

தனது 6ம் பார்வையால் ரிஷபராசி அன்பர்களுக்கு சுகஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு நல்ல குணநலன்களை மேம்படுத்துவார், தாயாருக்கு சிறு உடல் உபாதைகளை தந்த போதிலும், இடம் பொருள், வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை போன்ற சுபயோகங்களை அதிக அளவில் வாரி வழங்குவார், கல்வியில் வெற்றி கலைகளில் தேர்ச்சி, சிறந்த நிர்வாகதிறமை மூலம் உயர்பதவிகளை அடைவது, முற்போக்கு எண்ணங்கள், முயற்சிக்கான வெற்றிகள், தொழில் அபிவிருத்தி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், நவீன தொழில் கருவிகளை வாங்கும் யோகம், செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம், பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம், புதிய சொகுசு வாகனங்கள் வாங்கும் அமைப்பு, தெளிவான சிந்தனை சிறப்பாக முடிவெடுக்கும் தன்மை, நிலையான செயல்பாடுகளை முன்னெடுப்பதால் வரும் சுபயோகங்கள், அரசு பதவி அல்லது அரசு வேலைவாய்ப்பை வெற்றிகொள்ளுதல், புதிய வீடு வாங்கும் யோகம் அல்லது கட்டுவதற்கான சந்தர்ப்பம், நீண்டகால லட்சியங்களை மிக சிறப்பாக வெற்றிகொள்ளுதல், ஆன்மீக பயணங்கள் அல்லது சுற்றுலா செல்லுதல், வீட்டிற்கு தேவையான அனைத்து ஆடம்பர பொருட்களையும் சுவீகரிக்கும் தன்மை, கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், தகுதி திறைமைக்கான அங்கீகாரம், இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்களை சமாளித்து கடன் இல்லாத வாழ்வை பெறுவது என ஓர் அற்புதமான நன்மைகளை சனி பகவான் தங்களுக்கு இந்த நேரத்தில் சிறப்பாக  வாரி வழங்குகிறார்.

தனது 7ம் பார்வையால் ரிஷபராசி அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் இதுவரை புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதியருக்கு  யோக நிறைந்த நல்ல வாரிசை வழங்குவார், மற்றவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிய இளம் தம்பதியருக்கு ஒரு சிறப்பான கவுரவமும் அந்தஸ்த்தும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வந்து சேரும், நீங்கள் நினைத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றிதரும் நேரமிது, கலைத்துறையில் சாதனை புரியும் யோகம் உண்டு, இதுவரை சரியான வாய்ப்பு இல்லாமல் போராடிக்கொண்டு இருந்த ரிஷப ராசியினருக்கு இனிவரும் காலம் அற்புதம் நிறைந்ததாக அமையும், மாணவர்கள் கல்வியில் அபரிவிதமான வெற்றிகளை பெறுவார்கள், விரும்பிய கல்வியை தேர்வு செய்து கற்றுக்கொள்ளும் யோகம் உண்டு, மனதில் பயம் நீங்கும், இளம்வயதில் உள்ள ரிஷப ராசியினருக்கு காதல் கைகூடும், இதுவரை தடைபட்ட திருமணம் கைகூடும், எதிர்ப்புகள் நீங்கி தங்களை ஓர் சாதனையாளராக பரிணமிக்க வைக்கும் வல்லமையை சனிபகவான் தருவது கவனிக்கத்தக்கது, எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், வெற்றியை மட்டுமே சுவீகரிக்கும் யோகத்தையும் பின்வரும் காலங்களில் ரிஷப ராசியினர் நிச்சயம் உணர்வார்கள்.

தனது 10ம் பார்வையால் ரிஷபராசி அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான் ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு துறையில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்கள் வாழ்க்கையில் அளவில்லா திடீர் அதிர்ஷ்டத்தை தன்னிறைவாக வாரி வழங்குவார், காப்பீடு என்பதின் அவசியத்தையும் உணர வைப்பார், திடீரென வரும் செலவினங்களை தவிர்ப்பதற்க்கு ரிஷப ராசியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம் தரும், செய்யும் தொழில் வழியில் திடீர் இழப்புகளை தவிர்க்க  சிறந்த நிர்வாக திறனையும், பராமரிக்கும் தன்மையையும் அதிக அளவில் முன்னெடுப்பது அவசியம், தொழில்முறை கூட்டாளிகள் அல்லது நண்பர்களுடன் இணக்கமான சூழலை கடைபிடிப்பது அவசியம், தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும்பொழுது பாதுகாப்பு என்பது அவசியம், வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும்பொழுது அனைத்து விதமான ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்து இருப்பது நன்மை தரும், ஆன்மீக பெரியோர்களின் ஆசீர்வாதம் அல்லது குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு மேம்பட்ட நன்மைகளையும், பாதுகாப்பையும் நல்கும், தொடர்ச்சியாக இறைவழிபாடு அல்லது தியானம் மூலம் மிகப்பெரிய யோக வாழ்க்கையை பெற இயலும் என்பதினால்  தாங்கள் இனிவரும் காலங்களில் இது சார்ந்த முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம். 

ஜோதிடன் வர்ஷன்

9443355696


சனி, 7 டிசம்பர், 2024

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள்  ( 29.03.2025 முதல் 03.06.2027 )

குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் மேஷராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 மேஷ ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு ( கிட்டத்தட்ட "ஏழரை" மணிக்கு ) கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் மேஷராசியினரை ஏழரை சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 மேஷராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் தங்களுக்கு விரைய ஸ்தானத்தில் ( மீனம்12ம் இடம் ) ஏழரை சனியாக சஞ்சாரம் செய்யும் சனிபகவான் தங்களுடைய ராசிக்கு 12ல் சஞ்சரிப்பது தங்களின் மனநிம்மதியை கேள்விக்குறியாக்குவார், அமைதியின்மை, சஞ்சலம் கலந்த மனம், குழப்பமான சூழ்நிலை, வாழும் முறை அறியாமல் தடுமாறும் சூழ்நிலையை தரும், குறிப்பாக உறக்கம் என்பது தங்களுக்கு மிகுந்த சிரமத்தை தரும், அனைவராலும் அதீத தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் வீண் விரைய செலவினங்களை தவிர்க்க இயலாது, மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு எடுத்து வைத்துக்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

 புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் பொழுது சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே செய்யலாம், இல்லையெனி வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு நகர்ந்து செல்வது சாலச்சிறந்தது, கையிருப்பு குறையும் காலம் என்பதால் அசையும் அல்லது அசையா சொத்துக்களில் முதலீடு செய்யலாம் கடன் வாங்காமல், திசா புத்தி சாதகமாக இருக்கும் மேஷராசியினருக்கு திருமணம் வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை, வெளிநாடு பயணம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், வெளிநாடு வேலைவாய்ப்பில் மிகப்பெரிய முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் தன்னிறைவான முன்னேற்றம், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வருமானம் மற்றும் தொழில் முன்னேற்றம் வந்த போதிலும் அவர்கள் வழியில் இருந்து மனநிம்மதி குறைவு ஏற்படும், பயணங்களில் பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம்.

 வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் வார்த்தை பிரயோகம் மிக கவனமாக கையாள வேண்டும், குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சட்டதுறை காவல்துறை சார்ந்த அமைப்புகளில் நேர்த்தியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வழியில் இருந்தும் ஆதாயம் அடைய வாய்ப்பு உள்ளது, அரசுஒப்பந்த தொழில், உற்பத்தி தொழில், சேவை தொழில் புரிவோருக்கு லாபமும் அதிர்ஷ்டமும் உண்டு, ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியும், ஆன்மீக பெரியோர் வழியிலான சுபயோகங்களும் மேஷராசியினருக்கு 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் தன்னிறைவாக வழங்குவார். 

 தனது 6ம் பார்வையால் மேஷராசி அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், சட்ட சிக்கல், போட்டி பகை போன்றவற்றால் எதிர்பாராத எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையையும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும், உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட சிறு சிறு பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தர கூடும், பெற்ற பிள்ளைகள் வழியிலான துன்பங்களும், வீண் விரைய செலவினங்களை தவிர்க்க இயலாது, தங்களுடைய நுண்ணறிவு திறன் தங்களுக்கு சாதகமற்ற நிலையையே ஏற்படுத்தும், பொருளாதர சிக்கல்கள், கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொழில் முடக்கம், சுபகாரியங்களில் வரும் தடை தாமதம் என அதிக அளவில் இன்னல்களை ஏற்படுத்த கூடும், திடீர் பணவரவு  தங்களுக்கு குறுகிய கால சந்தோஷத்தை வழங்கும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று வாழும் சூழ்நிலை ஏற்படும் என்பது கவனிக்க தக்கது, பூர்வீக சொத்துக்கள் வீண் விரையம் ஆகாமல் காப்பாற்றிக்கொள்வது தங்களது எதிர்காலத்துக்கு சிறப்பை தரும்.

தனது 7ம் பார்வையால் மேஷராசி அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றியும், தனது தனி திறமை மூலம் சாதனைகளையும் நிகழ்த்தும் யோகத்தை தரும், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து எதிர்பாராத முன்னேற்றத்தையும், பொருளாதார உதவிகளையும், அரசியல் ரீதியான பதவி உயர்வுகளையும் மிக சிறப்பாக வெற்றிகொள்ளும் காலமாக இது அமையும், வெளிநாடு பயணங்கள் வழியில் தான்சேர்க்கையும், வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்புகளையும், புதிய ஒப்பந்தங்கள் வழியில் தொழில் வளர்ச்சியினையும் தன்னிறைவாக பெரும் யோகம் உண்டு, கூட்டு முயற்சிகள் வெற்றி தரும், சங்கங்கள் மூலம் லாபமும், கூட்டு தொழில் வழியில் எதிர்பாராத சுபயோகங்களையும் சிறப்பாக பெறுவீர்கள், திருமணம் ஆகாத மேஷ ராசி அன்பர்களுக்கு திருமணயோகம் கைகூடி வரும், காதல் கைகூடும் இருப்பினும் இல்லற வாழ்க்கையில் அதீத சிக்கல்களை ஏற்படுத்தும், பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் யோகம் உண்டு என்ற போதிலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கும், குழப்பங்கள் சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை தரும். 

தனது 10ம் பார்வையால் மேஷராசி அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான் பித்ருக்கள் மூலம் வரும் இன்னல்களை அதிகரிக்கும், சுய அறிவுத்திறன் பலன் தாராமல் தடை தாமதங்களை தரும், உயர்கல்வி சார்ந்த விஷயங்கள், பட்டைய படிப்பில் தடை, எதிர்பார்த்த கல்வியை கற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படும் தன்மை உண்டாகும், தொலைதூர பயணங்கள் வழியிலான நன்மைகள் தடைபடும், முரட்டுத்தனமாக செய்யும் காரியங்கள் மிகப்பெரிய பின்விளைவுகளை தரும், குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அசட்டையாக இருப்பின் வீண் அவப்பெயர் உண்டாகும், சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கவுரவம் போன்றவை வெகுவாக பாதிக்கும் , குழப்பமான சூழ்நிலை காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவும், பொருளாதர சிக்கல்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வருவதால் சமாளிக்க இயலாத சூழ்நிலையை தரும், பொதுவெளியில் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும், தனது கையிருப்பில் கவனம் தேவை, சுய தொழில் புரிவோர் கவனமாக இல்லையெனில் வாழ்க்கையில் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696