குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் மிதுனராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
மிதுன ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் மிதுன ராசியினருக்கு ஜீவன சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
தனது வர்க்க கிரகமான சனி பகவான் மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சரிக்கு காலம் தொழில் யோகத்தை சிறப்பாக வழங்கும் காலமாக அமையும், தனது தகுதி திறமைக்கான வேலை வாய்ப்பு, சுய தொழில் அல்லது கூட்டு தொழில் நிச்சயம் அமையும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பமும் கைகூடி வரும், சமூகத்தில் தங்களது கவுரவம் மற்றும் அந்தஸ்த்து அதிகரிக்கும், அரசியல் ரீதியான வெற்றிகள், பதவிகள் தேடிவரும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள், எதிலும் முதன்மை முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சாதகமாக மாறுதல், அரசுத்துறை சார்ந்த பணி அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள், தனது பெற்றோர்கள் ஆண்கள் தமது தந்தை, பெண்கள் தமது தாய் வழியிலான சுபயோகங்களை உதவிகளை சிறப்பாக பெறுவீர்கள்.
தங்களது நீண்டகால ஆசைகள் லட்சியங்கள் கைகூடி வரும், வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்களை தகர்த்தெறிந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், எதிலும் வெற்றி, வருமான வாய்ப்புகள், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு வரும் யோகம், வங்கிகளில் இருந்து வரும் பொருளாதர உதவிகள், புதிய தொழில் துவங்க சந்தர்ப்பங்கள், தங்களது புத்திசாலித்தனமும் நுண்ணறிவு திறனும் தங்களை மேம்பட்ட ஒரு மாமனிதனாக பரிணமிக்க செய்யும் ஓர் அற்புதமான காலம் இது அன்பர்களே, நீண்ட கால லட்ச்சியமான சொந்த வீடு கனவு இந்த நேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும், இதுவரை தங்களை ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு மதிப்புமிக்க மாமனிதனாக விளங்கும் யோகத்தை சனிபகவான் ஜீவன ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து வழங்குவார், இனிவரும் இரண்டைரை ஆண்டுகள் தங்களின் தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெரும் வருமானம் தன்னிறைவாக வந்து சேரும், நிலையான தொழில் யோகம் உண்டு.
தனது 6ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு வீரியஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு அதீத தைரியத்தையும், விடாமுயற்சியையும், வீரியம்மிக்க செயல்திறனையும் தொடர்ந்து வழங்குவார், பொதுவாக நவகிரகங்கள் 3,11ம் வீடுகளை வசீகரித்தாலும், சஞ்சாரம் செய்தாலும் சுபயோக பலன்களையே நல்குவார்கள், அந்த வகையில் சனிபகவான் தங்களது 3ம் வீட்டை வசீகரிப்பது கலைகளில் தேர்ச்சியை தரும், விளையாட்டுகளில் மிகபெரிய வெற்றியை தரும், சாதனைபுரியும் யோகம் உண்டு, அரசு துறை வேலைவாய்ப்பை பெறுவதற்கு சரியான நேரம் இதுவே ஆகும், குறிப்பாக மிதுன ராசி பெண்களுக்கு இந்த அமைப்பு வெகு விரைவாக கைகூடி வரும், மாணவமணிகள் கல்வியில் பலசாதனைகளை புரியும் அற்புத நேரமிது, தயக்கம் யாவும் நீங்கி, அறிவில் தெளிவும், கல்வியில் ஞானமும், எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் யோகமும் உண்டாகும், கடின உழைப்பை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவீர்கள், அதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்கும், சிறு வியாபாரிகள் மிகபெரிய அளவிலான வளர்ச்சியை பெறுவீர்கள், தன்னம்பிக்கை சரியான விஷயங்களை புரிந்துகொள்ளும் யோகம், தகவல் தொழில் நுட்பம், இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் எதிர்பாராத வெற்றிகளை பெறுவீர்கள், இளைய சகோதர உதவிகள் வந்து சேரும், ஏஜென்சி, பயணசீட்டு, தரகு, போக்குவரத்து தொழில்களில் மிகப்பெரிய தனசேர்க்கை வந்து சேரும்.
தனது 7ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், தங்களின் குணநலன்களில் சிறப்பான முன்னேற்றம் வந்து சேரும், பொது வெளியில் நீங்கள் செய்யும் காரியங்கள் பாராட்டுதல்களையும் கவுரவத்தையும் தரும், சிறந்த நிர்வாகத்திறமையை வெளிப்படுத்துவீர்கள், தங்களது தாய் வழி சொத்துக்கள் கிடைக்க பெறுவீர்கள், பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் சீர் கிடைக்கும், விவசாயம் பண்ணை தொழில் அமைப்புகளில் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்க பெறுவீர்கள், முதல் தரமான சொகுசு வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது, குறிப்பாக ஆடை ஆபரணம் வீட்டிற்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கும் யோகம், திட்டமிட்டு ஓர் காரியத்தை வெற்றிகரமாக செய்து முன்னேற்றம் பெரும் தன்மை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, கடின உழைப்பின் மூலம் தங்களுக்கான தொழிலை விரிவுபடுத்தும் யோகம், மனக்கவலை நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும், மிதுன ராசி பெண்களுக்கு திருமண யோகமும், சிறந்த புத்திரபாக்கியமும் கிடைக்கப்பெறுவீர்கள், உடல்ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும், வாகன யோகம் புதிய வீடு சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடிவரும், எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி தங்களுக்கு மிகுந்த மனமகிழ்வை தரும்.
தனது 10ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், கணவன் மனைவி உறவு நிலைகளில் திடீர் பிணக்குகளை தரக்கூடும் என்பதனால், வாழ்க்கை துணையுடன் சற்று இணக்கமான சூழலை கடைபிடிப்பது நலம் தரும், வீண் வாக்குவாதம் பிரிவினையை தரக்கூடும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் இன்னல்கள் அதிகரிக்கும், வீண் அவப்பெயர் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும், குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் மற்றும் பெரியமனிதர்களிடம் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வது நலம் தரும், குறிப்பாக அரசுத்துறை அதிகாரிகளிடம் நேர்த்தியாக நடந்துகொள்வது சிறப்பை தரும், சட்டசிக்கல்களை தவிர்க்க தங்களது நடவடிக்கைகளில் சத்தியத்தை கடைபிடிப்பது நலம் தரும், உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் இருப்பது உங்களுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், காதல் திருமணம் விருப்ப திருமணம் போன்ற விஷயங்களில் அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் மிகபெரிய சிரமங்களையே உருவாக்கும், தனிமையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறான முடிவாகவே அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், கூட்டாளிகள், நண்பர்கள் வாழ்க்கை துணை பொதுமக்கள் வழியில் இருந்து அதீத நெருக்கடிகளையும், போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையே தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழல் உருவாக கூடும், பேச்சில் நிதானம் தேவை, வெளிநாடு பயணம் செய்வோர் உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது நலம் தரும், உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட இன்னல்கள் உண்டாகும், சரியான மருத்துவ சிகிச்சை தங்களுக்கு தீர்வை தரும்.
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக