ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் ஒன்றான பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அதிக அளவில் பாதிக்க படுவார் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் , இதில் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் பலன்கள் நடை முறை அமைப்பில் வேறுபடுவது இயற்கையே .
ஒரு சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து மற்றவர்களால் அனுபவிக்கும் இன்னல்களின் தன்மை, அதாவது உறவுகள் , நண்பர்கள் , அண்டை அயலார், வாழ்க்கை துணை , தனது குழந்தைகள் மூலமாக வரும் தொந்தரவு அதிகமாக இருக்கும் , மேலும் ஜாதகர் யாருக்காவது உதவி செய்ய சென்றால் அதுவே ஜாதகருக்கு எதிராக திரும்பி தாங்க முடியாத அளவிற்கு இன்னல்களை தரும், ஆக சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்பொழுது மற்றவர்களால் ஜாதகருக்கு அதிக இன்னல்கள் ஏற்ப்படும் .
ஒரு ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தான் அவசர பட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் , தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பை தரும் , அதாவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு இணையாக எடுத்துகொள்ளலாம் , உறவுகள் நண்பர்கள் தனக்கு நன்மை செய்கிறார்களா ? தீமை செய்கிறார்களா? என்று தெரிந்துகொள்ளாமல் ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் இழக்கும் தன்மை ஏற்ப்படும் .
ஒரு உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது செய்கை மற்றும் நடவடிக்கைகளாலும் பாதிக்க படுவார் , தனது உறவுகள் நண்பர்கள் பொது மக்களாலும் பாதிக்கப்படும் சூழ்நிலையை தரும் , மேலும் பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து ஜாதாருக்கு நீடித்த தீமையான பலன்கள் தொடர்ந்து நடை பெரும் இதில் ஜாதகர் எதையும் தவிர்க்க இயலாது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் அன்பர்கள் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்களே .
பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவதால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் தன்னாலும் மற்றவர்களாலும் பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் , இது பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் கெடுதல்கள் .
இந்த பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் நன்மை பெரும் அமைப்பும் உண்டு அதாவது ஜாதகரின் ரத்த உறவுகளான பாட்டனார் , தகப்பனார் சமுதாயத்தில் பெரிய அளவில் தனது அறிவாற்றல் கொண்டு நல்ல நிலையை பெற முடியாத அமைப்பை பெரும்பொழுது , ஜாதகர் தனது அறிவாற்றல் மூலம் சமுதாயத்தில் சிறப்பான இடத்தை பெரும் யோகம் உண்டாகும் , ஒரு வகையில் பூர்வ புண்ணியம் என்பது ஜாதகரின் தகப்பனார் வழியில் வரும் புத்தி கூர்மை மற்றும் அறிவாற்றலை குறிக்கும் , எனவே ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது எனும் பொழுது ஜாதகரின் தகப்பனார் புத்திசாலித்தனம் அற்றவராக கானப்படுவாறே ஆயின் , ஜாதகருக்கு அதி புத்திசாலிதனத்தை வாரி வழங்கி விடும் , இதனால் தனது தகப்பனார் மற்றும் அவரது முன்னோர்கள் செய்யாத சாதனைகளை ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தால் செய்து வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும் , பொருளாதார தன்னிறைவையும் பெரும் யோகம் உண்டாகும் .
இந்த இடத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை மட்டும் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அவரது அறிவு வழியில், ஆனால் ஜாதகரை சார்ந்தவர்கள் அடையும் இன்னல்களுக்கு அளவிருக்காது , ஜாதகரை நம்பியவர்களின் கதி அதோ கதிதான் . ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து பெற வேண்டிய துன்பங்களை , ஜாதகரை சார்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டி வரும் அதாவது ஜாதகரின் நண்பர்கள் , உறவுகள் , வாழ்க்கை துணை , ஜாதகரின் வாரிசுகள் என அனைவரையும் பாதிக்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Ungalathu vilakkam nangu irunthathu. 90% nangu purinthathu. innum telivu pera dayavu seithu 'badhaga sthanam' enbathu ethu enbathai thelivu paduththavum. (athu 6, 8 matrum 12 vathu idamthane? athavathu kanni, viruchchigam matrum meenam endru ninaikkiren. sariya enbathai sollavum.)
பதிலளிநீக்குசர லக்கினத்திற்கு 11 ம் பாவகம் பாதக ஸ்தானம் , ஸ்திர லக்கினத்திற்கு 9 ம் பாவகம் பாதக ஸ்தானம் , உபய லக்கினத்திற்கு 7 ம் பாவகம் பாதக ஸ்தானம் , மேற்கண்ட லக்கின அமைப்பில் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானம் எனும் 11,9,7 பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மை தீமை பலன்களை பற்றிய பதிவு , எனவே தாங்கள் ஒரு லக்கினத்திற்கு எந்த பாவகம் பாதக ஸ்தானம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் , அதன் பிறகு அந்த லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறத இலையா என்பதை வைத்து பலன் நிர்ணயம் செய்ய வேண்டும் அன்பரே !
பதிலளிநீக்கு