கேள்வி :
அண்ணா,
1.பாதக ஸ்தானத்துடன் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவம் தொடர்பு பெறுகிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. நாம் எப்படி வருந்தினாலும் அது மாறப்போவது இல்லை, இந்தப்பிறவியில் நமக்கு பரதேஷ ஜீவனம் தான் என்பது ஏற்கனவே இறை நிலையால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.இது நமது முன் ஜென்மக்கர்மாவினால் இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்திருக்கிறது.அதை மாற்றும் வித்தை,படைத்தவன் ஒருவனைத் தவிர யாருக்குமே தெரியாது.ஆனாலும் பாதகஸ்தானம் தரும் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.
பதில் :
அன்பு தம்பிக்கு பாதக ஸ்தானம் தரும் பலனில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்யலாம்? நல்ல கேள்வி , தம்பி ஒருவர் பிறக்கும் பொழுது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும் , குறிப்பாக லக்கினம் என்றால் ஜாதகரின் எண்ணம் செயல் ஆகிய அமைப்பிலும் , இரண்டாம் பாவகம் எனில் வருமானம் ,குடும்பம்,வாக்கு என்ற அமைப்பிலும், மூன்றாம் பாவகம் எனில் சகோதரம்,எடுக்கும் முயற்ச்சி,தைரியம் என்ற அமைப்பிலும் , நான்காம் பாவகம் எனில் தனது தாய் ,சொத்து வீடு ,வண்டி வாகனம்,சுக வாழ்க்கை என்ற அமைப்பிலும் , ஐந்தாம் பாவகம் எனில் குல தேவதை,குழந்தைகள்,பூர்வ புண்ணிய அமைப்பிலும்.
ஆறாம் பாவகம் எனில் எதிரிகள்,உடல் தொந்தரவு,கடன் என்ற அமைப்பிலும்,ஏழாம் பாவகம் எனில் வாழ்க்கை துணை , கூட்டாளி , வெளிநாடு , நண்பர்கள் வழியிலும், எட்டாம் பாவகம் எனில் திடீர் இழப்பு , விபத்து , அறுவை சிகிச்சை வாழ்க்கை துணை செய்யும் வீண் செலவுகள் என்ற அமைப்பிலும், ஒன்பதாம் பாவக அமைப்பில் தனது நர்ப்பெயருக்கு களங்கம் , செய்த நல்வினை பதிவுகளின் பலனை அனுபவிக்க முடியாத நிலையும், பத்தாம் பாவக அமைப்பில் இருந்து கௌரவம் திடீர் என இழக்கும் சூழ்நிலை , தனது தகப்பன் வழியிலும் , செய்யும் தொழில் அமைப்பில் இருந்தும் , பதினொன்றாம் பாவக அமைப்பில் இருந்து நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு தடைகளையும் , மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும் , தன்னம்பிக்கை குறைவு,சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மனதை மாற்றி கொள்ளும் மன நிலை என்ற அமைப்பில் இருந்தும், பனிரெண்டாம் பாவக அமைப்பில் மன நிம்மதி இழப்பு, வீண் விரையம் , ஜாதகர் தனது கட்டுபாட்டை இழப்பது, தனக்கு வரும் இன்னல்களுக்கு மற்றவர்களே காரணம் என்று நினைத்து தன்னையும் கெடுத்து கொண்டு , மற்றவரையும் கெடுத்து கொள்ளும் அமைப்பு என்று பாதக ஸ்தான அமைப்பில் இருந்து 200 சதவிகித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் .
மேற்கண்ட பலன்கள் ஒரு ஜாதகருக்கு 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதாலேயே நடந்து விடாது , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, பாவகத்தின் தொடர்பு மற்றும் அந்த பாவகத்தின் பலனை நடத்தினால் மட்டுமே பலன் நடை முறைக்கு வரும் . இல்லை எனில் ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலும் தீமையை தராது , ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வர வாய்ப்பு என்பது சிறிது ஏற்ப்படாது .
கேள்வி :
வாழ்நாள் முழுவதும் தனது உறவுகள் மூலமாகவும்(சரம்),தனது அறிவும்,செயலும்(ஸ்திரம்),தனது மனைவி மற்றும் தனது கூட்டாளிகளுமே(உபயம்) நமக்கு ஆப்பு அடிப்பார்கள் எனில் கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது(பாட வேண்டியது தான் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று).உதவியில்லையென்றாலும் உபத்திரவம் இருக்கக்கூடாது இல்லையா?. இதற்கு ஜோதீட தீபம் தரும் ஆலோசனை என்ன?.
பதில் :
மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறது அதாவது அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்வதால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து சில காலங்கள் இன்னல்கள் வரும் அதன் பிறகு அந்த பாவக அமைப்பில் இருந்தே மிகுந்த யோகம் ஏற்ப்படும் என்பது இறை நிலை தரும் ஒரு சிறப்பான வழி தம்பி .
கேள்வி :
2.பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற 5ம் வீட்டில் நன்மை செய்யும் வகையில் ராகு,கேது அமைந்துவிட்டால் பலன் எப்படியிருக்கும்?.எந்த பாவகமாயினும் ராகு,கேது நன்மை மட்டும்தான் செய்யுமா?.
பதில் :
பதில் :
தம்பி 5 ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து நன்மையை செய்யும் என்றால் , அந்த ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பே இல்லை , ஒரு வேலை இங்கு அமரும் ராகு கேது ஐந்தாம் பாவகத்தை , கடுமையாக பாதிக்கும் எனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பு உண்டு என்பதே ஜாதக சூட்சமம் .
கேள்வி :
3.லக்கினத்தின் ஆரம்பப்பாகையை ஜோதிடதீபம் எவ்வாறு கணிக்கிறது.சூரிய உதயத்திலிருந்தா?.இல்லை ஜனன நேரத்தின் நட்சத்திர பாதத்தை அனுசரித்தா?.
பதில் :
ஜனன நேரத்தில் நட்சத்திர பாதத்தில் உதிக்கும் பாகையின் அமைப்பை வைத்தே லக்கினம் , மற்றும் மற்ற பாவகங்களின் ஆரம்ப பாகையை நிர்ணயம் செய்கிறோம், இதுவே ஒரு ஜாதகத்தில் ஜாதக ரீதியான பலன்களை நிர்ணயம் செய்ய உதவும் , பொதுவாக லக்கினம் எந்த ராசி என்று கணிதம் செய்யும் பொழுதும் , சந்திர ராசியை வைத்து நிர்ணயம் செய்யும் பொழுதும் , பொது பலனை குத்து மதிப்பாக சொல்லவே உதவும் , நம்மை நம்பி வருபவரின் வாழ்க்கையில் சரியான வழியை காட்ட உதவாது தம்பி .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக