மேற்கண்ட மேஷ இலக்கின ஜாதகருக்கு , லக்கினம் மற்றும் ஏழாம் வீடு எனும் இரண்டு பாவகங்களும் களத்திர பாவகமான ஏழாம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது , மிகுந்த யோக அமைப்பாக கருதலாம் , ஒருவர் பொது வாழ்க்கையிலும் , அரசியலிலும் சிறந்து விளங்க வேண்டும் எனில் ஏழாம் பாவகம் சுய ஜாதகத்தில் அதிக வலிமையுடன் இருப்பது அவசியம் , அப்படி வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு மக்கள் ஆதரவு என்பது சிறப்பாக அமைந்து , தேர்தலில் நிற்கும் பொழுது வெற்றியை வாரி வழங்கிவிடும் , அந்த வெற்றி நிலையானதாக இருக்க வேண்டும் எனில் மேற்கண்ட அமைப்பில் லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற வேண்டும் அப்பொழுது தான் ஜாதகர் வெற்றி பெற்றதின் பலனை முழுவதும் அனுபவிக்க இயலும் .
இதில் ஒருவருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியே, தனது சுய லக்கினமாக அமைந்து களத்திர பாவகமான துலாம் ராசியுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் மிகுந்த யோக பலனை வாரி வழங்கும் , துலாம் சர காற்று ராசி என்பதால் ஜாதகருக்கு விரைந்து நல்ல பலன்களை வழங்கும் , மக்கள் ஆதரவு என்பது வாழ்நாள் முழுவதும் நிலையாக அமைந்து விடும் , மேலும் ஜாதகரின் இனிமையான பேச்சு திறன் அரசியலில் தனக்கு என ஒரு இடத்தை பெற்று தரும் அமைப்பில் இருக்கும் , மேஷம் லக்கினமாக வருவதாலும் இது சர நெருப்பு ராசியாக இருப்பதாலும் நிறைவான ஆளுமை திறனையும் , ஆட்சி பணிகளில் சிறப்பாக செயலாற்றும் தன்மையையும் வாரி வழங்கும் , குறிப்பாக தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக்கொண்டு , அதில் மிகப்பெரிய வெற்றியை பெரும் யோகத்தை தரும் .
மேலும் ஜாதகர் சுய கட்டுப்பாடு , மக்களுக்கு நன்மை செய்யும் மன நிலை , தான் நினைக்கும் செயல்களை நிறைவாக செய்து முடிக்கும் ஆற்றல் , தனது அதிகாரத்தை முறையாக பயன்படுத்தும் தன்மை , தனது கடமையில் இருந்து சிறிதும் பிசகாத தன்மை , முற்ப்போக்கு சிந்தனை , அந்த சிந்தனையால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்தும் தன்மை , சோர்வடையா மக்கள் சேவை , தனது சிறப்பான நிர்வாக திறமையின் காரணமாக எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான நேரத்தில் சிறப்பான தீர்வை காணும் தன்மை , மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனையாக பாவித்து தீர்வு சொல்லும் மனபாங்கு , தனது முடிவில் உறுதியாக இருக்கும் தன்மை , தீர்கமான வாத திறமை , பேச்சு திறனால் தான் நினைக்கும் காரியங்களை சாதிக்கும் யோகம் என ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றியை தரும் அமைப்பு இது .
மேற்கண்ட ஜாதகர் இந்திய அரசியலில் மிக பெரிய மாற்றத்தை எதிர்வரும் காலத்தில் நிச்சயம் செய்வார் என்பது மட்டும் உறுதி , இந்த மாற்றத்தை மக்கள் உணர அதிக காலங்கள் இல்லை என்பது ஒரு சிறப்பு விஷயம், இறை அருள் அவருக்கு சகல நலன்களையும் வாரி வழங்கட்டும் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக