ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகம் என்றாலும் சரி புதன் கேது சேர்க்கை பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் ,
புதன் கேது சேர்க்கை ஒருவருடைய சுய ஜாதகத்தில், ஒரே வர்க்கம் சார்ந்த மண் தத்துவ ராசிகளான ரிஷபம் , கன்னி , மகரத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பொருளாதரா ரீதியாக நல்ல முன்னேற்றமும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் , நிறைவான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கி விடுகிறது புதன் கேது சேர்க்கை , இதற்க்கு காரணம் புதனுடன் சேர்ந்த கேதுவின் ஆற்றலே என்றால் அது மிகை ஆகாது , ஏனெனில் புதனுடன் சேரும் கேது, புதன் வழங்கும் நல்ல பலன்களையும் , அமர்ந்த இடத்திற்கு உண்டான முழு பலன்களையும் தானே ஏற்று கொண்டு நடை முறை படுத்துவதே இதற்க்கு காரணம்.
கால புருஷ தத்துவ அமைப்பின் படி இரண்டாம் வீடான ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை நல்ல குடும்ப வாழ்க்கையினையும் , முதலீடு அற்ற கை நிறைவான வருமானத்தையும் , சிறப்பான பேச்சு திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் தரும் . மேலும் ஜாதகரின் உடல் நிலை ஆயுள் வரை பெரிய பாதிப்புகளை சந்திக்காது , ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது மிக எளிதாக அமையும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு எவ்வித தடையும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும் ,
ஜாதகருக்கு விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவம் சிறு வயது முதலே அமைந்து விடும் , இதனால் ஜாதகருக்கு வேண்டியாது நிச்சயம் கிடைக்கும் , ஜாதகரின் பொறுமையான குணம் அனைவராலும் விரும்பப்படும் , ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக மருத்துவம் , பைனான்ஸ் , வட்டி தொழில் , கலை துறை , தனது பேச்சு திறனால் ஈட்டும் வருவாய் என்ற அமைப்பில் .
கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஆறாம் வீடான கன்னியில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் மிக பெரிய செல்வந்தனாக மற்றும் தன்மை கொண்டது , மேலும் சூது , லாட்டரி , சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் மூலம் மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் , புதனுடன் சேரும் கேது ஜாதகருக்கு அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் , மேலும் ஜாதகரை பகைத்து கொள்ளும் அன்பர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு சென்று விடும் .
இவர்களின் வாக்கு பலிதம் பெரும் என்பதால் , இவரால் சபிக்க பட்டவர்களுக்கு சுய ஜாதகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , இவரால் வாழ்த்து பெற்றவர்களின் ஜாதக அமைப்பு மிகுந்த யோக பலன்களை நடை முறையில் நடத்தி கொண்டு இருக்கும், தனது எண்ணத்தாலும் செயலாலும் காரிய வெற்றி பெரும் தனி திறமை, ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , தன்னை எதிர்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத மன நிலையை இங்கு அமரும் புதன் கேது சேர்க்கை சிறப்பாக தந்து விடும் .
கால புருஷ தத்துவ அமைப்பின் படி பத்தாம் வீடான மகரத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை , மேற்கண்ட இரண்டு சேர்க்கை நிலையை விட அதிக யோக பலன்களை தரும் புதன் கேது சேர்க்கை எனலாம் , சர ராசியான மகரத்தில் அமரும் இந்த சேர்க்கை நிலையில் கேதுவின் ஆதிக்கமே 100 சதவிகிதம் மேலோங்கி நிற்கும், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்கும் , எதையும் சாதிக்கும் ஆற்றலை ஜாதகருக்கு தடையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கி கொண்டே இருக்கும் .
குறிப்பாக கனரக வண்டி வாகன போக்குவரத்து தொழில்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில்களில் , விவசாயம் சார்ந்த தொழில்கள் , பண்ணை தொழில்கள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் , இதற்க்கு மூல காரணமாக இங்கு அமரும் கேது பகவானின் ஆற்றலே என்றால் அது மிகையாகாது , புதன் ஜாதகருக்கு சரியான திட்டமிடுதலை தருவார் , கேது அதனை நடைமுறைக்கு கொண்டுவருவார் , மேலும் ஜாதகர் வெற்றி பெறுவதற்கு உண்டான நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதும் கேது பகவானே .
மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை இருந்து லக்கினத்திற்கு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட நன்மையான பலன்கள் நடை முறைக்கு வரும் , இல்லை எனில் இதற்க்கு நேர் எதிரான பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , இவை யாவும் நடப்பு திசையில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன் நடைமுறையில் வந்தால் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969
how about the ketu bhudan conjunction in other rasis? my wife has bhudan and ketu in kumbam, its also the lagnam.
பதிலளிநீக்குஅருமையாக சொல்லி இருக்கின்றனர்
பதிலளிநீக்குமிகவும் சரியாக சொன்னார்கள் very good
பதிலளிநீக்கு