வெள்ளி, 25 அக்டோபர், 2013

திசாசந்திப்பும் திருமண வாழ்க்கையும் ?!

திசாசந்திப்பு என்றால் என்ன ?  இதானால் திருமண வாழ்க்கையில் சாதக பாதம் உண்டா ? 




மேற்கண்ட கேள்வியை தம் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணை தேடும் அன்பர்களும், பொருத்தம் காண வரும் பெற்றவர்கள் பலர் கேட்பதுண்டு, சிலகாலமாகவே இந்த திசாசந்திப்பு என்பது பரவலாக பேசபட்டு வருகிறது, அதிலும் சில ஜோதிட அன்பர்கள் வரன், வது  இருவருக்கு சமகாலத்தில் ஏக திசை நடந்தால் திருமணம் செய்ய கூடாது! என்று அறிவுருத்துவதும், மீறி திருமணம் செய்தால் தம்பதியர் வாழ்க்கை மிகுந்த பாதிப்பை தரும் என்று பயமுறுத்துவதும் கூட,  தற்பொழுது நடந்துகொண்டு இருப்பது, எம்மை ஜோதிட ஆலோசனைக்காக காண வரும் அன்பர்கள் பேச்சில் இருந்து உணர முடிகிறது . 

எடுத்து காட்டாக கிழ்கண்ட ஜாதகம் இரண்டை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகத்தை பொருத்தம் பார்த்த பல ஜோதிடர்கள் ஜாதக பொருத்தம் என்பது முற்றிலும் இல்லை என்ற கருத்தை கூறியிருக்கின்றனர் , இந்த இரண்டு ஜாதகமும் திருமண வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பை பெறுகிறதா? இல்லையா ? என்பதை இறுதியில் தெரிந்து கொள்வோம் .

ஆண் ஜாதகம் :



மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (16/12/2015) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் முறையே பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்து கொண்டு இருக்கிறது, மேலும் ஜாதகரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மட்டும் 12ம் பவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை 32 வயதுக்கு மேல் அமையும் என்பதை தெரிவிக்கிறது, இதை தவிர ஜாதகத்தில் வேறு எந்த பாவகமும் பாதிப்படையவில்லை என்பது ஜாதகருக்கு மிகுந்த யோகமே.

பெண்ணின் ஜாதகம் :



மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (19/03/2014 ) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகிக்கு 2,5,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருப்பது சிறப்பான ஒரு விஷயமே , ஆக மேற்க்கண்ட இரண்டு ஜாதகத்திலும் நடை பெற்று கொண்டு இருக்கும் சூரியன் திசையானது மிகுந்த நன்மையான பலன்களையே தருகிறது என்பது உறுதியாகிறது.

ஆனால் மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் , இதற்க்கு முன் பொருத்தம் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகம் பொருந்தாது என்றும் இருவருக்கும் ஒரே திசை நடப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று அச்சுருத்தியதாகவே தெரிகிறது , இதை போன்றே நன்றாக பொருந்தி வரும் பல ஜாதகங்களை பல ஜோதிடர்கள் திசா சந்திப்பை காரணம் காட்டி பல திருமணங்களை நடைபெறாமல் கால தாமதம் ஏற்ப்படுவதிர்க்கும், தடுப்பதிர்க்கும்  ஜோதிடர்களே காரணமாக இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, இந்த குழப்பங்கள் ஏன் ? ஏற்படுகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் திசைகளின் பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்களை கருத்தில் வைத்துகொண்டு பொருத்தம் காணும் பொழுது இதை போன்ற பல தவறுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உண்டு, மேலும் திசா புத்தி பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் பொது பலன்களே அன்றி, அவை சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை மற்றும் புத்தி அவரின் ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று அறியாத பொழுதும், குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒவ்வொரு பாவகத்தின் தன்மை எப்படிபட்ட நிலையில் இருக்கிறது  என்ற உண்மை நிலை அறியாத பொழுதுமே மேற்கண்ட திசா சந்திப்பு என்ற குழப்பம் ஏற்ப்பட்டு , பொருத்தம் காண வந்தவர்களுக்கு சரியான பதிலை தெரிவிக்காத நிலையை தருகிறது, ஆக ஒருவரின் ஜாதகத்தில் எவ்வித தவறும் இல்லை, அரை குறை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேற்கும் பொழுது வரும் வினையே இது என்றால், அது மிகையில்லை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கும் திசையானது எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடனிடம் தனது ஜாதகத்தை தந்து பொருத்தம் பார்க்கும் அன்பர்களின் நிலையை பற்றியே ஜோதிடதீபம் அதிக கவலை கொள்கிறது, பலரது திருமணத்திற்கு தடையாக மேற்கண்ட திசாசந்திப்பு மட்டுமா காரணமாக அமைகிறது, மக்களை பயமுறுத்த மேலும் பல விஷயங்கள் அரைகுறை மற்றும் ஜோதிட கணிதத்தில் தேர்ச்சி அற்ற போலி ஜோதிடர்களிடம் நிறைய உண்டு அவையாவன, 1 ராகு கேது தோஷம், 2 செவ்வாய் தோஷம், 3 சர்ப்ப தோஷம், 4 நாக தோஷம், 5 ஏழரை சனி, 6 களத்திர தோஷம் என வகைக்கு 5,6 தோஷங்களை சொல்லி பொதுமக்களை குழப்பம் ஏற்ப்படுத்தி அதில் குளிர் காயும் போலி ஜோதிடர்களே கலிகாலத்தில் அதிகம் .

ஒருவரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் பொருத்தங்கள் பற்றியும் பாவக வலிமையின் நிலையை கருத்தில்  கொண்டு பலன் காணும் பொழுதே சிறப்பான திருமண வாழ்க்கை அமையும், இதில்  தச வித பொருத்தமான நட்சத்திர பொருத்தம் 10ம் கூட தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து .

இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது, பல ஜோதிடர்களால்  திசா சந்திப்பு ஏற்ப்படுவதால் பொருத்தம் அற்ற ஜாதகம் என்று ஒதுக்கிய மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும்  திருமண பொருத்தம் என்பது பாவக வலிமை  கொண்டு காணும் பொழுது மிக சிறப்பாக இருக்கிறது, மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதால் திசா சந்திப்பு என்ற ஒரு விஷயம், இவர்களை எந்த விதத்திலும் சிறு பாதிப்பையும் கூட, தர வாய்ப்பில்லை என்பதே உண்மை என்ற விஷயத்தை உணர வைத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடக்க ஜோதிடதீபம் ஆலோசனை வழங்கியதை நினைத்து ஜோதிடதீபம் பெருமை கொள்கிறது. 

குறிப்பு :

ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு என்பது இல்லாத நிலையிலும் கூட அவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுதுதான் திருமண வாழ்க்கை என்பது மன முறிவு வரை  எடுத்து செல்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் உணருவது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. ////ராகு சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.////

    http://astrovanakam.blogspot.in/2013/10/59.html

    இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா?

    ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

    பதிலளிநீக்கு