வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஒரு கிரகம் தனது திசையில் சுய புத்தியில் நன்மையை செய்தால்,மற்ற புத்திகளில் தீமையை மட்டுமே செய்யுமா?



கேள்வி :

" ராகு சுயபுத்தியில் நல்ல பலனை வழங்கினால் பின்பு வரும் மற்ற புத்திகளில் தீய பலன்களை தருமா ? அல்லது ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை "

என்பது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா?   ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

பொதுவாகவே பாரம்பரிய ஜோதிடத்தில் இந்த குழப்பங்கள் அதிகம் வருவது உண்டு, எடுத்துகாட்டாக ஒரு கிரகம் தனது திசையில் தனது புத்தியில் யோக பலன்களையும் நன்மையையும் வழங்கினால் மற்ற புத்திகளில் தீமையை செய்யும் என்று தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பதில் போலி ஜோதிடர்களுக்கு நிகர் அவர்களே !

தாங்கள் கேட்ட கேள்வியில் ராகு என்ற கிரகம் " சுய புத்தியில் அதிக நல்ல பலன்களை செய்தால், பிறகு வரும் புத்தியில் மிகப்பெரிய கெடுதலை தரும் இதில் எவ்வித சந்தேகம் வேண்டியதில்லை" என்று சொல்வதாக குறிப்பிட்டு இருந்தீர்கள், ஒரு வேலை நவ கிரகங்கள் போலி ஜோதிடரிடம் நேரில் வந்து      " நான் எனது புத்தியில் நன்மை செய்துவிட்டேன் எனவே இனி வரும் புத்திகளில் மிகப்பெரிய கெடுதலையே செய்வேன்" என்று கையில் அடித்து சந்தியம் செய்திருக்குமோ ? என்ற சந்தேகம் தோன்றுகிறது  நண்பரே !

இதை போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தவிர்த்து, ஜாதகத்தை காரணம் கட்டிக்கொண்டு வீண் கதை பேசிக்கொண்டு  இருப்பவர்களை விடுத்து, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வே ஜோதிடதீபம் பரிந்துரை செய்கிறது, இந்தமாதிரியான ஜோதிட பலன்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை நண்பரே !

இந்த இடத்தில் நான் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு தங்களுக்கு விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு திசை பலனை நடத்தும் பொழுது அந்த கிரகம், அவரது ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது  என்ற விஷயம் தெரியாத பொழுது, போலி ஜோதிடர்களுக்கு வாயில் வந்ததை பலனாக சொல்லி, ஜாதகம் காண வந்தவரை மண்டை காய வைப்பதுண்டு, கொஞ்சம் தங்களுக்கு விழிப்புணர்வு இல்லை எனில் , நவகிரகங்களுக்கு தான் தான் அதிபதி, நான் சொல்வதைத்தான் நவகிரகங்கள் தங்களுக்கு பலனாக தரும் என்று தங்களுக்கு கிலியை ஏற்படுத்தவும் செய்வார்கள் , இதற்க்கு ஒரு படி மேலே சென்று சிலர், கிரகங்களை அக்டிவேசன், டிஅக்டிவேசன் செய்பவர்களும் உண்டு. 

 தாங்கள் வினவிய வினாவில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே! எடுத்துகாட்டு ஜாதகத்தை இனி பார்ப்போம்.



மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது கேது திசையில் கேது புத்தி  நடை பெற்று கொண்டு இருக்கிறது ( 25/05/2013 முதல் 21/10/2013 வரை ) தற்பொழுது நடை பெற்று கொண்டு இருக்கும் கேது திசையானது 7,11ம் வீடுகள் முறையே  ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக அபரிவிதமான முன்னேற்றத்தை  தரும் அமைப்பு .

 மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் என்பது சர நீர் தத்துவ ராசியாக இருப்பதும், அது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமாக வருவது சிறந்த விஷயமே, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகம் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமாக வருவதால் இந்த கேது திசை  காலத்தில் ஜாதகருக்கு வீடு,மண்,மனை, வண்டி,வாகனம், என்ற அமைப்பில் மிகுந்த  யோக பலன்களையும் அதன் வழியில் தொழில் முன்னேற்றத்தையும்  தரும் இங்கே கேது திசை கேது புத்தி ஜாதகருக்கு, ஜீவன ஸ்தான அமைப்பில் நன்மையை செய்கிறது .

கேது திசையில் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் ,

கேது திசையில் சுக்கிரனுக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி 06,09வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சூரியனுக்கு அடுத்து வரும் சந்திரன் புத்தி 05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சந்திரனுக்கு அடுத்து வரும் செவ்வாய் புத்தி 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும்.

கேது திசையில் செவ்வாய்க்கு அடுத்து வரும் ராகு புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் ராகுக்கு அடுத்து வரும் குரு புத்தி  05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் குருவுக்கு அடுத்து வரும் சனி புத்தி 2,4,7,8,10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சனிக்கு அடுத்து வரும் புதன் புத்தி 7,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் செய்கின்றது.

மேற்கண்ட ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் செவ்வாய் புத்தி  ஒன்று மட்டுமே தீமையை செய்கிறது, மற்ற அனைத்து புத்திகளும் நன்மையையே வாரி வழங்குகிறது, தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே ஒரு கிரகம் தனது திசையிலோ புத்தியிலோ நன்மை தீமை பலனை நடத்துகிறது, ஆக ஒரு திசையான தனது சுய புத்தியில் நன்மையை செய்தால் மற்ற புத்த்திகளில் தீமையை செய்யும் என்பது முற்றிலும் தவறான கருத்து , எனவே ஒரு கிரகம் தான் ஏற்று கொண்ட பாவகத்தின் தன்மையை பலனாக நடத்துகிறது என்பது உறுதியாகிறது , மேலும் மற்ற புத்திகளும் தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மையையே பலனாக தருகிறது என்பதே முற்றிலும் உண்மை .

தாங்கள் கேட்ட கேள்விக்கு இது தக்க பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் தனது சுய புத்தியில் ஒரு கிரகம்  நன்மையை செய்தால் அதன் பிறகு வரும் அனைத்து புத்திகளிலும் தீமையை செய்யும் என்று சொல்வது ஜோதிட அறிவு சிறிதும் இல்லாத மடையர்கள் சொல்லும் வெறும் வாய் ஜாலமே , இதனை நம்பிக்கொண்டு தங்களது இனிமையான எதிர்காலத்தை சூன்ய நிலைக்கு எடுத்து சென்று விடாதீர்கள் அன்பர்களே !...

ஒரு திசையோ அல்லது புத்தியோ எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற கணிதம் தெரியாத நிலையிலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் நிலையை பற்றியே அதன் வலிமையை பற்றியோ, தெளிந்த ஜோதிட அறிவு அற்ற நபர்களால் மட்டுமே மேற்க்கண்ட குழப்பம் விளைகிறது, எனவே சிறந்த ஜோதிடரை நாடி நலம் பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

2 கருத்துகள்:

  1. திருமணம் செய்வதற்க்கு ஆலோசனை கேட்ட போது ....இரண்டு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் உள்ளது.வசிய பொருத்தம் உள்ளது..அருமை பெருமை என்று சொன்னார்கள் ஜோதிடர்கள்.
    அது மட்டும் இல்லாமல் ஆண் ஜாத்கத்தில் 7 வது இடத்தில் சனி உள்ளது பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி உள்ளது..செம பொருத்தம் என்று சொன்னார்கள்.

    கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது...வசிய பொருத்தம் எல்லாம் ஒரு 60 நாள் தான் வேலை செய்தது.ஏக பட்ட முரண் பாடுகள். வாழ்க்கையே வெறுத்து விட்டது...

    இத்தனைக்கும் என் சித்தப்பா 5,6 இடங்களில் ஜோதிடம் பார்த்தார்.......

    உண்மையில் இரு ஜாதகத்தில் யாரிடம் தான் பிரச்சினை உள்ளது.? தயவு செய்து விளக்கவும்.........

    my d.o.b: 09-12-1988 4.20 pm Erode
    my husband d.o.b:12-07-1983 1:17 am Erode

    பதிலளிநீக்கு