ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட கூடாத பாவகங்களில் முதன்மை வகிப்பது உடல் உயிராகிய லக்கினம், பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படும் 5ம் பாவகம், பாக்கிய ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 9ம் பாவகம், மேற்கண்ட மூன்று பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகரின் கருமையம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, ஜாதகரின் உடல் நலம், கல்வி அறிவு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, திருமண தடை மற்றும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பொருளாதார பாதிப்புகள், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு உட்ப்பட்டு தனது வாழ்க்கையை தானே சீரழித்து கொள்ளும் தன்மை, என்ற அமைப்பில் கடுமையான தீய பலன்களை வழங்க ஆரம்பித்து விடும்.
மேலும் மேற்கண்ட பாவகங்களின் பலனை நடப்பு திசை தர ஆரம்பித்து விட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும், மேலும் தனது நல வாழ்விற்கு உண்டான வழிகாட்டுதலும் ஜாதகருக்கு கிடைக்காது, தனித்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார், மேற்கண்ட பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடவும், பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து ஜாதகர் யோகம் பெறவும் இந்த தை அமாவாசை வழிபாடு உறுதுணை புரியும் என்றால் அது மிகையில்லை.
இலக்கின பாதிப்பு :
ஜாதகர் இந்த தை அமாவசை தினத்தில் தனது பெற்றோரிடம் அட்சதை பெற்று ஆசி பெறுவதும், அவர்களுக்கு விருப்பமானதை வாங்கி தருவதும், சிறந்த நற்பலனை ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பெற்று தரும், நல்ல ஆன்மீக குருவிடம் முறையான தீட்சை பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து வரும் துன்பங்களும், அக இருளும் நீங்கி அறிவில் தெளிவு பெற்று தனது பிறவி துன்பம் நீங்கி யோக வாழ்க்கையை பெற, ஜாதகருக்கு உறுதுணை புரியும், இந்த தை அமாவாசை தினத்தில் மேற்கண்ட வழிமுறைய கடை பிடித்து நலம் பெருக.
பூர்வ புண்ணிய பாதிப்பு :
மாயை எனும் உலக வாழ்க்கையில் இருந்தும், இறை நிலையுடன் உயிர் கலப்பு பெறவும் முன்னோர்கள் காலம் காலமாக, முறையாக குல தேவதை வழிபாடு என்ற முறையினை நமக்காக விட்டு சென்றுள்ளனர், குல தேவதை வழிபாடு என்பது ஜாதகரின் அறிவில் தெளிவையும், சிறப்பான சிந்தனை ஆற்றலையும், தனது துன்பங்களில் இருந்து விடுபட்டு யோக வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும், வழிவகுக்கம் என்றால் அது மிகையில்லை, நமது குல தெய்வ வழிபாடே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையை சிறப்பாக வாழும் வாழ்க்கை நெறியினையும் நமக்கு உணர்த்தும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் நம்மை காப்பது குல தெய்வ வழிபாடே, சரியான நேரத்தில் நமக்கும் தனது அருள் கரங்களால் காத்து அருளும் தன்மை மற்றும் சக்தி, நமது குல தேவதைக்கே உண்டு.
எனவே இந்த தை அமாவசை தினத்தில் தனது குல தேவதையை நாடி சென்று தன்னால் இயன்ற அளவு அண்ணதானம் பிறருக்கு செய்து குல தெய்வத்தை முறையாக, அவரவர் முறை படி குடும்பத்துடன் சென்று சிறப்பாக வழிபாடு செய்து வருவது ஐந்தாம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை நீக்கி, பூர்வீகத்தில் யோக வாழ்வு, குழந்தை பாக்கியம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய் தொழில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, மன நிம்மதி, சிறந்த அறிவாற்றல், கலை ஆர்வம், கற்பனை திறன் ஆகியவற்றை தங்கு தடையின்றி பெற்று தரும் என்றால் அது மிகையில்லை.
பாக்கிய ஸ்தான பாதிப்பு :
ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் எல்லாம் தொடர் தோல்வியும், காரிய தடையும், முன்னேற்றம் அற்ற நிலையும், கௌரவம் நற்பெயருக்கு ஏற்ப்படும் கலங்கத்திர்க்கும் , அடிப்படை காரணமாக அமைவது பாக்கிய ஸ்தான பாதிப்பே, மேலும் ஜாதகர் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிப்பு மரியாதையுடன் சிறப்பாக வாழும் யோகத்தை தருவது இந்த பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் தருவதும், கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்தும் நுண் அறிவாற்றலை தருவதும் பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.
மேற்கண்ட பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற, இந்த தை அமாவாசை தினத்தில் தனது பித்துருக்களுக்கு முறையான வழிபாட்டினையும், தர்ப்பணத்தையும் தருவது முக்கியமாகும், மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் மூன்று 1 குல தெய்வ வழிபாடு 2 பித்ரு வழிபாடு 3 பிராமண தர்மம் ஆகியவற்றை இந்த தை அமாவசை அன்று கடை பிடித்து, 16 வகை செல்வமும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வழைஅடிவாழையாக செழித்து ஓங்கி சிறப்பாக வாழ இறை அருள் துணை நிற்கட்டும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
9842421435