புதன், 22 ஜனவரி, 2014

பூர்வபுண்ணியம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் !


ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்பது கொஞ்சம் அதிகமே, குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை ஆற்றல் மட்டுப்படும், ஜாதகரின் திட்டங்கள் யாவும் கனவாகவே இருக்கும், நடைமுறை படுத்துவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், ஆக ஜாதகரின் வெற்றி என்பாது குதிரை கொம்பாகவே இருக்கும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஒருவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்று இருந்தாலும் சரி, உலக அனுபவம் பெற்று இருந்தாலும் சரி, பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சரி, சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமையற்று இருந்தால், ஜாதகரின் திறமைகள் யாவும் பயனற்று போகும், ஜாதகரால் வீணடிக்க படும், அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

பூர்வ புண்ணியம் பாதிக்கபடுவதை மூன்று வகையாக பிரிக்கலாம், 1 ஐந்தாம் பாவகம் உபய,ஸ்திர ராசிகளால் பாதிக்க படுவது, 2 ஐந்தாம் பாவகம் சர ராசியினால் பாதிக்க படுவது, 3 ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தான அமைப்பின்னால் பாதிக்கபடுவது, என்ற வகையில் பாதிப்பான பலன்களை ஐந்தாம்  பாவகம் வழங்கும், இதில் முதல் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 33% ஆகவும், இரண்டாம் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 80% ஆகவும், மூன்றாம் வகை பாதிப்பின் வீரியம் 200% மாகவும் அமையும், எனவே எந்த ஒரு  ஜாதகருக்கும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தாம் பெற  கூடவே கூடாது.

எடுத்துகாட்டாக பின் வரும் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!



  இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 9ம் வீடு காலபுருஷ  தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைவதும், ஐந்தாம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவத்திற்கு 9ம் வீடாக வருவதும் ஜாதகருக்கு தீமைகளை செய்யும் அமைப்பாக கருதலாம், இதனால் ஜாதகர் அடையும் இன்னல்கள் என்ன ? அனுபவித்த துன்பங்கள் என்ன ? என்பத்தை பற்றி சற்றே ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1 ஜாதகர் பிறந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ஜாதகரின் தகப்பனார் தனது பெயரில் தனது முன்னோர்களின் பெயர்களில் உள்ள சொத்து நிலம் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடி பெயரும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலையை மாற்றி அமைத்தது, ஜாதகர் தனது உறவுகளை விட்டு விட்டு மற்று மனிதர்கள் வாழும் ஒரு  புதிய இடத்தில் வளரும் சூழ்நிலையை தந்தது, இதனால் ஜாதகரின் குழந்தை  பருவம் பாதிப்படைந்தது, நல்ல ஆரோக்கியமான வளரும் சூழ்நிலையை  தரவில்லை.

2 ஜாதகரின் கல்வி காலம் பல போராட்டங்கள் நிறைந்ததாக அமைந்தது, பல தடைகளை  தாண்டி ஜாதகர் தனது பள்ளி கல்வியை நிறைவு செய்யும் தன்மையை தந்தது, மேலும் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஜாதகர் பல அவ பெயரையும் சந்திக்கும் தன்மை தந்தது, உயர் கல்விக்காக ஜாதகர் முயற்ச்சி செய்த பொழுது பல தடைகளை சந்த்தித்து ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் முழுமையாக முடிக்க இயலாமல் பாதியில்  கல்லுரி படிப்பு முடிந்தது.

3 பல போராட்டங்களை சந்தித்து கல்லுரி படிப்பு பாதியில் நின்ற பிறகு, வேலைக்காக ஜாதகர் குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், பணியாற்றும் காலத்தில் ஜாதகர் தனது விருப்பத்தின் பெயரில்  காதல் திருமணம் செய்துகொண்டார் ( ஜாதகருக்கு 2 மற்றும் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் இளமையில் திருமணம்   நடைபெற்றது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் 10 வீடுகள் பாதிப்பில் இருந்தது குறிப்பிட தக்கதது ) திருமணம் செய்து ஒரு வருடத்தில் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறந்தது, ஜாதகரின்  வருமான பற்றா குறையின் காரணமாக திருமண வாழ்க்கை கசந்தது, ஜாதகரின் தீய நண்பர்களின் சேர்க்கையினால் குடி பழக்கத்திற்கு  ஆளாகும் தன்மையை தந்தது, இதில் இருந்து மீள முடியாத நிலையில் ஜாதகர்  இன்னும் இருக்கின்றார்.

4 இவை மட்டுமல்ல இன்னும் பல சொல்ல இயலாத தீமைகளை ஜாதகருக்கு தந்துகொண்டே இருக்கின்றது, குறிப்பாக பாதக ஸ்தான பலனை எந்த எந்த திசை புத்திகள் தருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஜாதகர் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்க நேருகிறது, ஆக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு  கடுமையான பாதிப்பை தருகிறது என்பது  உறுதியாகிறது .

மேற்கண்ட தீய பலன்கள் நடைபெற முழுமுதற் காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகர் தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட 100 கிலோமீட்டரில் ஜீவனம் செய்ததுமே என்றால் அது மிகையாகாது, ஏனெனில் ஜாதகரின் மற்ற பாவகங்கள் மிக வலிமையாக அமைந்து  இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு கட்டியம்  கூறுகிறது,  இவரின் ஜாதகத்தில் 4,6,10 ம் வீடுகளின் வலிமை 80% யோகத்தையும், 1,2,3,7,11ம் வீடுகளின் வலிமை 50% யோகத்தையும் வாரி வழங்கி கொண்டு இருப்பது  சிறப்பான அமைப்பாக கருதலாம்.

ஆக ஜாதகரின் துன்பத்திற்கு முக்கிய காரணம் பூர்வீகம் பாதிக்க பட்டு தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட பகுதியில் ஜீவனம் செய்வதே, மேலும் ஜாதகரின் சிந்ந்தனை மட்டுப்படவும், திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வராமல்,  காரியதடை ஏற்ப்படுவதிர்க்கும் மேற்கண்ட விஷயமே காரணமாக  அமைகிறது  என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ஜாதகருக்கு ஜோதிட தீபம் பரிந்துரை செய்த ஆலோசனை ஜாதகரை  எல்லை தாண்டி ஜீவனம் செய்ய சொன்னதே, இதற்க்கு ஜாதகர் சொன்ன  பதில் ஜோதிட தீபத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, " அய்யா நான் வெளியில் சென்று ஜீவனம் செய்தால் எனக்கு வரும் வருவாய் போதியதாக அமையாது " இதை நினைத்து நாம் அழுவாத சிரிப்பதா ? என்றே தெரியவில்லை, ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றாலே ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையின் காரணமாக கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , இந்த விஷயத்தை ஜாதகருக்கு புரிய வைக்க நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ஆக ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகரின் அறிவாற்றலின் தன்மை வெகுவாக பாதிக்க படுகிறது, சிந்தனை திறனும் குறைகிறது , ஒட்டுண்ணி போல் மற்றவரை   சார்ந்து வாழும் தன்மையை தருகிறது, தன்னம்பிக்கை குறைகிறது, தன்முனைப்பு என்பது இல்லாமல் உயிரற்ற மீன் போல் ஆற்றில் அடித்து செல்லும் நிலையை தருகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக