என்ன செய்ய சனிபகவானின் குணமே மற்றவர்களுக்காக எதையும் தாங்கும் தன்மையையும், சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையே அற்பணிக்கும் தன்மை பெற்றவர்தானே சனி பகவான், இதை நாம் பல பெரிய தலைவர்களின் ஜாதகத்தை காணும் பொழுது அதில் உள்ள சனிபகவானின் வலிமை அமைப்பில் இருந்து உணர இயலும்.
பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டிற்கும் ( மகரம் ) , லாப ஸ்தானமான 11ம் வீட்டிற்கும் ( கும்பம் ) வீட்டிற்கும் அதிபதியாக பொறுப்பேற்கும் சனிபகவான், எப்படி அனைத்து தீமைகளுக்கும் மொத்த உருவமாக வர்ணிக்க படுகிறார் என்பது ஜோதிடதீபத்திற்கு விளங்காத புதிராகவே உள்ளது , மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று எழுதுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை, சுய ஜாதகத்தில் மகரமும் கும்பமும் பாதிக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் ஜீவன ரீதியாகவும், அதிர்ஷ்டம் என்ற அமைப்பிலும் யாதொரு நன்மையையும் பெற தா இயலாத சூழ்நிலையை தரக்கூடும் இது அவரவரவர் சுய ஜாதக வலிமை இன்மையை காட்டுகிறது, இதற்க்கு சனிபகவானை காரணகர்த்தாவாக பாவிப்பது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
சனிபகவானை பற்றி முரண் பட்ட , தவறான கருத்துக்களை பரப்ப இவர்களால் எப்படி இயலுகிறது என்றும் தெரியவில்லை, சனிபகவான் என்பவர் ஒருவருடைய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும்பொழுது சிறந்த ஜீவனத்தை தருகிறார், அதன் வழியில் இருந்து வரும் லாபத்தை பன்மடங்கு பெருக வைக்கிறார், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே ஜாதகருக்கு சிறந்த கெளரவம் கிடைக்கிறது, மக்களால் போற்றப்படும் பதவிகளை அலங்கரிக்கும் பதவிகளில் சிறப்பாக செயல்பட வைக்கிறார், பெரிய பெரிய தலைவர்களின் ஜாதகங்களில் சனிபகவான் சிறப்பாக அமர்ந்திருக்கும் நிலையை காணும் பொழுது இது புரியும்.
தனது சுக துக்கங்களை பெரிதாக எடுத்துகொள்ளாமல் தீண்டாமை எனும் மாசுபட்ட சமுதாயத்தை மாற்றி அமைத்த ஈரோடு வே. ராமசாமி ஜாதகத்தில் சனிபகவான் லக்கினம், எதிரி ஸ்தானம், களத்திரம், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, இலக்கின வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து சமுதாயத்தில் மக்களின் மனதில் பகுத்தறிவு சிந்தனையையும், களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து உலக புகழ் பெரும் யோகத்தையும், ஜீவன ஸ்தானத்தில் இருந்து சுய மரியாதை மற்றும் சுய கௌரவத்தையும் பெற்று தந்த சனி பகவான், எப்படி அவயோகதாரியாக வர்ணிக்க படுகிறார் என்பது புரியவில்லை?
உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
(சனி எந்த பாவகங்களுக்கு அதிபதி என்று ஊதா வண்ணத்தில் குறிப்பிடபட்டு உள்ளது )
இந்த ஜாதகத்தில் 6,7,10ம் பாவகங்களுக்கு அதிபதியாக வரும் சனிபகவான் ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன ஸ்தானத்திற்கு படிப்படியான முன்னேற்றத்தையும், 7ம் பாவக வழியில் இருந்து உலகம் முழுவதும் ஜாதகர் சென்று ஜீவனம் செய்யும் யோகத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்திற்கு நிலையாக நிலைத்து நிற்கும் தன்மையையும், கௌரவமான தொழில் செய்யும் யோகத்தையும் சனிபகவான் வாரி வழங்குவது சற்றே கவனித்தல், நிச்சயம் புலனாகும் .
மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர ரிஷப ராசியாக அமைவதாலும், அது மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகர் எதிரிகள் மூலமாகவும் வருவாயினை பெறுவார் என்பதும், ஜாதகரின் வாழ்நாள் முழுவதும், வருமானம் என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதும் சனிபகவானால் வரும் அருளாசியே என்றால் அது மிகையில்லை.
7ம் பாவகம் ஜாதகருக்கு உபய மிதுன ராசியாக அமைவதாலும், காற்று தத்துவ ராசியாக இருப்பதாலும், ஜாதகரின் செயல்கள் மற்றும் அறிவாற்றல் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உபயோக படும் விதத்தில் அமைவது சனிபகவான் வழங்கும் அருளசியே, மேலும் மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக வருவது ஜாதகரின் தைரியத்தையும், தன்னுள் கொண்டுள்ள வீரத்தையும், வீரியத்தையும் சரியான நேரத்தில் எடுத்து காட்டும், அதுமட்டுமல்ல இங்கே ஜாதகருக்கு சனிபகவான் தேடினாலும் கிடைக்காத பெருந்தன்மையான குணத்தை தருகிறார் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம்.
10ம் பாவகம் ஜாதகருக்கு உபய கன்னி ராசியாக அமைவதாலும், மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகரின் ஜீவனம் என்பது மண் தத்துவம் சார்ந்த தொழிலை சரியான வயதில் தந்து அதன் வழியில் இருந்து வருமானத்தையும், சமுதாயத்தில் ஒரு கௌரவமான தொழில் அதிபர் என்ற மதிப்பையும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்தையும் தந்திருப்பது சனிபகவானே என்றால் அது மிகையில்லை, ஆக சனி என்பவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது சிறந்த ஜீவனம், கௌரவமான வாழ்க்கை, சுய மரியாதை, சிறந்த உடல் நலம் மற்றும் உடல் பலம், அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை முறை, வண்டி வாகன யோகம், நல்ல சிறந்த வேலையாட்கள் என்ற அமைப்பில் வாரி வழங்குவார் என்பது உறுதியாகிறது .
பொதுவாக பல ஜோதிடர்களிடம் "சனி ஈஸ்வரன்" என்று தவறான புரிதல் இருக்கிறது, உண்மை அதுவல்ல "சனி சரண்" என்பதே சரியான உச்சரிப்பு, அதாவது மெதுவாக நகரும் தன்மை பெற்றவர் என்பதே, எனவேதான் ஒவ்வொரு ராசியிலும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.
நன்மை தீமை பலன்கள் என்பது ஒவ்வொருவரின் சுய ஜாதக அமைப்பின் அடிப்படையிலும், 12 பாவகங்களின் வலிமையை பொருத்தும் நடைபெறுகின்றது, இதில் நவகிரகங்கள் ஜாதகரின் விதிபயனின் பலனை ஏற்று அதற்க்கு தகுந்தார் போல் யோக, அவயோக பலன்களை தருகிறது, இதில் சனி,ராகுகேது, செவ்வாய், சூரியன், தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் எனும் பாவ கிரகங்கள் கெடுதல் செய்யும் என்றும், குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் எனும் சுப கிரகங்கள் நன்மை செய்யும் என்று ஜோதிடம் சொல்வது, ஜோதிடத்தை பற்றிய அடிப்படை அறிவு அற்றவர்கள் சொல்லும் வார்த்தையாக எண்ணி தவிர்த்து விடுவது நல்லது. ( இல்லை எனில் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பி விடுவார்கள் )
கிரகங்களின் உண்மை நிலையினை பற்றிய தெளிவும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களுக்கு அவர்கள் வழங்கும் பலன்களை பற்றிய கணித அறிவும் பெற்று பலன் சொல்லுவது, ஜோதிட கலைக்கு நாம் ஆற்றும் கடமை என்றால் அது மிகையில்லை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
9842421435
////////மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று எழுதுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.
பதிலளிநீக்குசனிபகவானை பற்றி முட்டல் தனமான, தவறான கருத்துக்களை பரப்ப இவர்களால் எப்படி இயலுகிறது என்றும் தெரியவில்லை,///////
இவர்கள் ஏதோ copyright உரிமை வைத்திருப்பார்கள் போல தெரிகிறது ..... :)
மிக நன்று. சனி பலம் பெற்ற என் ஜாதகத்தை பார்த்தவர்கள் பல ஜோதிடர்களும் ஒரே மாதிரி பலன் கூறினார்கள். ஓரளவு சரியாய் நடந்து வருகிறது. ஆனால் சில கட்டுரையை படித்த போது மிகவும் குழம்பி போனேன் . இது குறித்து என் நண்பர் ஜோதிடர் பல முக்கிய பிரமுகர்கள் சனி பலம் பெற்றவர்களே என விளக்கினர் . இப்போது தங்கள் இந்த விளக்கம் மிக தெளிவாக உள்ளது. தங்களும் என் இந்த ஜாதக கணிப்பை விளக்கினால் சந்தோசம்.
பதிலளிநீக்குவணக்கம் சார்,சனி பற்றிய தங்கள் பதிவு திரு ஆதித்யா குருஜி பதிவுக்கு எதிப்பாக எழுதப்பட்டது என்றும் ,அதை நீங்கள் எழுத தூண்டியது நான் தான் என்றும் முகநூலில் ஒரு தவறான கருத்து பரவுகிறது -எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை முகநூலிலோ,உங்கள் ப்ளாக்கிலோ தெரிவிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் -நன்றி
பதிலளிநீக்குஅன்பு நண்பருக்கு தங்களின் கேள்விக்கு உண்டான விளக்கத்தை எனது வலைப்பூவில் தந்து இருக்கிறேன், இதில் என்ன தவறு இருக்கிறது, மேலும் என்றைக்குமே உண்மைக்கு சுடும் தன்மை உண்டு, இதை பற்றி நமக்கு என்ன கவலை, தங்களுக்கு உண்டான கேள்விகளை கேளுங்கள், எமது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன் சரியான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் பிழை இருப்பின் தவிர்த்து விடுங்கள்.
நீக்குaditya guruhnji aaivu thavaru
நீக்குமேலும் ப்ளாக் எழுதுபவர்கள் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க profile இல்லாத கமெண்ட்டுகளை பதிவு செய்ய முடியாதபடி செட்டிங்ஸ் மாற்றம் செய்துகொள்ளலாம்
பதிலளிநீக்கு