சாயா கிரகமான ராகு பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் வலிமையுடன் அமரும்பொழுது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையை, முழுவதும் ஏற்று நடத்த ஆரம்பிப்பார், குறிப்பாக ராகு நல்ல நிலையில் அமர்ந்த பாவகத்தின் பலன் நடைமுறைக்கு வரும்பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு நிகராக எதுவும் இல்லை என்றே கூறலாம், ஏனெனில் கிரகங்களில் அதிவலிமை படைத்தவர் ராகு பகவானே என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, மேலும் ராகுவின் ஆளுமைக்கு அனைத்து கிரகங்களும் உள்ளடங்கி பலன்தரும் என்பதனை ராகு வலிமை பெற்ற ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் உணர முடியும்.
ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமரும் பாவகம் எதுவோ அந்த பாவகத்தின் தன்மையை முழுவதும் தானே ஆளுமை செய்யும் தன்மையை பெறுவார், குறிப்பாக லக்கனத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகரின் உடல்,மனம்,வளரும் சூழ்நிலை,ஜாதகரின் புகழ், ஜாதகர் பெரும் கீர்த்தி என்ற வகையில், சர,ஸ்திர.உபய ராசியின் தன்மைக்கு ஏற்றார் போலவும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவ அமைப்பிற்கு ஏற்றார் போலவும் பலன்களை தங்கு தடையின்றி தர ஆரம்பிப்பார், மேலும் தன்னுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களின் தன்மையையும் தானே ஏற்றுக்கொண்டு, அவர்கள் செய்யும் யோக, அவயோக பலன்களையும் வாரி வழங்குவார்.
பொதுவாக ராகு அமர்ந்த பாவகங்களில் இருக்கும் கிரகங்கள் தனித்து செயல் புரிய இயலாது, ராகு பகவானே அனைத்திற்கும் பொறுப்பேற்று தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலனையும் செய்வார், எனவே ராகுவுடன் சேர்ந்த கிரகங்கள் தனித்து பலன் வழங்கும் என்று எதிர்பார்ப்பதும், யோக அவயோக பலனை தரும் என்று எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து ( ராகுவுடன் சேர்ந்த கிரகம் சுப கிரகம் என்று வர்ணிக்கும் குரு,சுக்கிரன்,சந்திரன்,புதனாகவே இருந்தாலும் கூட ராகுவின் பலமே மேலோங்கி நிற்கும் ) .
எடுத்துகாட்டாக :
கிழ்கண்ட ஜாதகத்தில் ராகு பகவான் லக்கனத்தில் அமர்ந்து எவ்விதமான யோக, அவயோக பலன்களை தருகிறார் என்று சிந்திப்போம்.
இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவான், ஜாதகருக்கு பிறந்தது முதல் மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருக்கிறார், ராகு அமர்ந்த வீடு சிம்ம ராசியாக இருப்பதாலும், இது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு பித்த சம்பந்த பட்ட உடல் அமைப்பை பெற்று இருக்கிறார், மேலும் ஜாதகரின் வளரும் சூழ்நிலை என்பது சிறந்த உடல் நிலையுடன், சீரான கல்வி அறிவுடன், நல்லவர்களின் அன்பிலும் நட்பிலும், உறவுகளின் ஆதரவுடன் பெற்றோருடன் வளரும் வாய்ப்பை வழங்கியது.
ஜாதகரின் இயக்கம் நெருப்பு ராசி என்பதால் ஜாதகர் சுய கட்டுப்பாடுடன், வீரம் தைரியம் துணிவு நிறைந்தவராகவும், எதற்கும் அஞ்சாத குணத்தை கொண்டவராகவும் காணப்படுகிறார், ஸ்திர நெருப்பு என்றாலே நாம் உதாரணமாக அகல் விளக்கு அல்லது சூரியனை எடுத்துகொள்ளலாம், ஆக ஜாதகரின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கும், தனக்கும் உலக இருளை நீக்கும் தன்மையுடன் இருப்பதாக அமைந்தது, இங்கே அமர்ந்த குரு மற்றும் செவ்வாயின் தன்மையை ராகு செய்வதால், ஜாதகர் நேர்மை நிறைந்த குணத்தையும், எவ்வித பிரச்சனைகளையும் சரியான ஆளுமை திறனுடன் கையாளும் வல்லமையையும் தந்தது, ஜாதகரின் சிம்ம லக்கினம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதால், ஜாதகருக்கு தனது பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து வரும் யோக பலன்களையும் அனுபவிக்கும் யோகத்தை தந்தது.
இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும் சிறப்பாக பெற்று, பகுத்தறிந்து செயலாற்றும் தன்மையினையும், அதி புத்திசாலித்தனத்தையும் பெற்று, அவர்கள் வழியிலேயே தனது வாழ்க்கை முன்னேற்றத்தை அடைந்துகொண்டு இருப்பதுதான் என்றால் அது மிகையாகாது , இதை போன்றே ஒவ்வொரு ஜாதகத்திலும் ராகு பகவான் தான் அமர்ந்த பாவகத்தில் நல்ல நிலையில் வலிமையுடன் இருந்தால், ஜாதகர் ராகுபகவானின் கருணையினால் மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி.
குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்தால் நிச்சயம் ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100% யோக பலன்களையே தருவார் என்பது உறுதி, இது ராகு பகவானுக்கு மட்டுமல்ல கேது பகவானுக்கும் பொருந்தும், ஒருவருக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து யோக பலன்களே நடை பெரும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, மேலும் ராகு பகவான் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும், குறிப்பிட்ட பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பில் ( வலிமையாக ) இருந்தால் குறிப்பிட்ட ராசி,தத்துவம் மற்றும் பாவக தன்மைக்கு ஏற்றார் போல் யோக பலன்களை தங்குதடையின்றி செய்வார் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696

அய்யா எனக்கு மீனா லக்னம்,மகர ராசி, லக்னத்தில் குருவும் ராகுவும் இருகின்றனர்.இதனால் யோகமா அல்லது அவயோகமா, ராகு தசை பல கேடுகளை தந்தது.குரு தசை எனக்கு எப்படி இருக்கும்.
பதிலளிநீக்குஉங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நேரில் வரவும்.
நீக்கு