அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில், வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நற்பலன்கள் என்பது சற்று மிதமிஞ்சிய அளவிலேயே இருக்கும், குறிப்பாக ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், பகுத்தறியும் தன்மையும் எப்பொழுதும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமைபெறுவது ஜாதகருக்கான தனித்திறமையை வெளிப்படுத்தும், இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவதே மற்ற பாவக வழியில் இருந்துவரும் சுபயோகங்களை சுவீகரிக்கும் தன்மையை தரும், திறமை இருப்பது ஒரு வகையில் சிறப்பு என்ற போதிலும் அதனால் வரும் முழு பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பின் சாராம்சம் என்ன? தனது வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் வாழும் தன்மையை பெறுவார், என்ற விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ள லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு சிறப்பாக கூறிவிட முடியும் என்றால் அது மிகையில்லை, மனிதனின் பிறவி பலனை நிறைவு செய்யும் தன்மையை (கடனை) 12ம் பாவகம் தெளிவுபடுத்தும், ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி தெளிவாக கூறும் தன்மை 11ம் பாவக வலிமையே நிர்ணயம் செய்கிறது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமை பற்றிய தெளிவு பெறுவது தனது எதிர்காலத்தை பற்றிய ஒரு திட்டமிடுதல் மற்றும் தனது வாழ்க்கையில் பெரும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், நன்மை மற்றும் யோக அமைப்புகள் பற்றிய விபரங்களை மிக தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.
லாப ஸ்தானம் பற்றி சிலாகித்து கூறாத ஜோதிடர்களே இல்லை எனாலாம், குறிப்பாக கோட்சார கிரகங்கள் ராசிக்கு ( லக்கினம் ) 11ல் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு மிகுந்த யோககங்களையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கிறது, ஆக ஒரு ராசிக்கு கோட்சாரத்தில் 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகுந்த யோகத்தை தரும் என்று என்னும் பொழுது ( ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் யோகத்தை தருகிறதா? அவயோகத்தை தருகிறதா? என்பது வேறு விஷயம்), லக்கினத்திற்கு 11ம் பாவகம் வலிமை பெறுவது எவ்விதமான நன்மைகளை தரும் என்பதனை கருத்தில்கொள்வது அவசியமாகிறது.
உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தில் 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோகங்கள், அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு 1,3,5,6,7,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் என்றால் அது மிகையில்லை, இருப்பினும் ஜாதகர் எந்த எந்த வழிகளில் இருந்து அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் பெறுவார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.
லக்கினம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையில் சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும், நீண்ட ஆரோக்கியமான உடல் அமைப்பினையும், தெளிவான முற்போக்கு சிந்தனையையும், நிறைந்த அறிவாற்றலையும் வாரி வழங்கும், எனவே ஜாதகர் தனது நிலையில் இருந்து அதிர்ஷ்டசாலி என்பது உறுதியாகிறது.
3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியினை தரும், போட்டி, தேர்வு, பந்தயங்களில் வெற்றியை தரும், தனது சகோதர அமைப்புகளில் இருந்து மிகுந்த நன்மையை தரும், வீரியம் மிக்க மன தைரியத்தையும், பிடிவாத மன நிலையை தரும், தனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபடும் தன்மையை தரும், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் யாவும் நிச்சய வெற்றியை தரும் என்பது உறுதியாகிறது.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து சுகங்களையும், அவர்கள் செய்த புண்ணியத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்றால் அது மிகையில்லை, தனது பெயர் சொல்ல நல்ல புத்திர சந்தானத்தையும், அவர்கள் வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க இயலும், மேலும் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் பெற்றிருப்பார் என்பது உறுதியாகிறது.
6ம்வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தான் நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் திறமை அமையும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும், குறிப்பாக பங்கு சந்தையில் நல்ல லாபம் பார்க்க இயலும், வெகு விரைவில் சுலபமாக வெற்றிக்கனியை பறிக்கும் தன்மையை தரும், லாட்டரியில் அதிர்ஷ்டம், புதையல் யோகத்தை தரும், வேலையாட்கள் மற்றும் எதிரிகளாலும் லாபம் பெரும் தன்மையை தரும், எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் புத்திகூர்மையை தரும் என்பது உறுதியாகிறது.
7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகதாரிகள் என்றால் அது மிகையில்லை, மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொது மக்கள் வழியில் இருந்தும் அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கும், நல்ல அரசியல்வாதி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில்கள் புரிவோர், சிறப்பான வியாபர திறமை, அனைவராலும் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பை பெற்றவர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மிகசிறந்த நல்ல குணத்தை வாரி வழங்கிவிடும், எவரும் போற்றும் தன்மையை தரும் பாராட்டு மலையில் நனையும் யோகம் பெற்றவர் , தனது சிந்தனையும் செயலும் முற்போக்கு தன்மையுடன் இருப்பதை ஜாதகரே உணர்ந்துகொள்ள முடியும், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், இது மட்டுமல்ல அனைத்திலும் லாபம் பெறுபவர், மிக அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஜாதகரின் லாப ஸ்தானம் சர (மேஷம்) ராசியாக அமைவதால் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பது கூடுதல் தகவல்.
11ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் எவ்வித நன்மையை பெறுகிறார் என்பதை நமது ஜோதிட முறையில் தெள்ள தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் என்றால், அதற்க்கு காரணம் எமது குருவும், இறைஅருளின் கருணையுமே ! 11ம் பாவக வலிமையை உணருங்கள், வாழ்க்கையில் வெற்றியை தடையில்லாது பெறுங்கள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
jothidadeepam@gmail.com

அன்பரே இதுவெல்லாம் ஜோதிடத்தை பற்றி சரியான புரிதலும், அறிவற்ற தன்மையாலும் ஏற்ப்படுவது, இவர்களை எல்லாம் நாம் ஒன்றும் செய்ய இயலாது, இப்படிதான் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு எவனோ சொல்லி வைத்த பழங்கதையை பேசிக்கொண்டு திரிவார்கள், மேலும் வாயில் வந்தது வார்த்தை என்றும் ----------வந்தது ---------என்றும் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் .
பதிலளிநீக்கு