செவ்வாய், 29 மார்ச், 2016

ஸ்திர லக்கினங்களுக்கு பாதக ஸ்தானம் எவ்வித இன்னல்களை தரும்!




ஸ்திர ராசிகள் என்று அழைக்கப்படும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசியினை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு வழங்கும் அவயோக பலன்களை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையை தாராது என்பதுடன், 200% விகித இன்னல்களை தரும், மேலும் ஜாதகர் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமையும், மேலும் லக்கினம் முதல் 12 வீடுகள் ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் அவயோக பலன்களை தட்டமால் தரும்.

 பொதுவாக நமது கிராமங்களில் ஒரு செலவேந்திரம் உண்டு " பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழி ஸ்திர லக்கினம் அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து, ஜாதகர் மேற்கண்ட பழமொழிக்கு உண்டான பலாபலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், உதாரணமாக ஒரு ஸ்திர இலக்கின அன்பருக்கு, லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால், ஜாதகர் தமது வாழ்க்கையை தாமே சிதைத்துகொள்ளும் தன்மையை தரும், சுய ஒழுக்கம் பாதிக்க படும், வீண் அவபெயரை ஜாதகரே தேடி சென்று பெற்றுகொள்வார், அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் எல்லாம், அதி முட்டாள் தனமான செய்கையாக அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய இன்னல்களையும், மன வருத்தங்களையும் ஏற்ப்படுத்தும், சாதாரணமான நன்மைகளை பெறுவதற்கே ஜாதகர் கடும் போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல்,மனம்,உயிர் ஆகியவற்றின் சக்த்திகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் விளைவறியா செயல்கள் வாழ்நாள் முழுவதும்  ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையும் துயரங்களையும் வழங்கும், சமூகத்தில் ஜாதகர் நர்ப்பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்பாகவே அமைந்து விடும்.

ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு பாதக ஸ்தானம் பெரும்பாலும் சர ராசிகளிலேயே அமையும் என்பதால், ஜாதகருக்கு கொடுக்க வேண்டிய இன்னல்களை தங்கு தடையின்றி மிக வேகமாக வாரி வழங்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்வது என்பது  மறுஜென்மம் எடுத்ததிற்கு இணையானதாக அமையும், பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் வீண் விவகாரங்களில் தலையீடு செய்து தேவையில்லாத வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத வீண் அலைச்சல் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்தை  வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் அறிவு திறன் பலன் தாராமல், உணர்ச்சி வேகமே மிகுந்து நிற்கும், பாதக ஸ்தானம் நீர் ராசி என்றால் ஜாதகரின் வீண் கற்பனையும், கனவு உலக வாழ்க்கையும் நிதர்சனமான உண்மையை  மறைக்கும், பெரும்பாலும் போதை வஷ்துகளுக்கு அடிமையாகும் தன்மையை தரும், வீண் கற்பனையில் தனது வாழ்க்கையை தானே சிதைத்துகொள்ளும் அமைப்பை தரும், ஜாதகரின் வாழ்க்கையில் அடையும் மன துயரங்கள் என்பது ஓர் அளவில்லாமல் வரும் என்பதை கருத்தில்  கொள்வது நலம், பெரும்பாலும் துஷ்ட சக்திகள் ஜாதகரை வெகுவாக  பயன்படுத்திகொள்ளும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஜாதகர் அடிமையானால் அதில் இருந்து விடுபடுவது என்பது சாதாரன காரியமல்ல என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

பாதக ஸ்தானம் காற்று ராசி என்றால், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் அற்ற தன்மையும், விளைவு அறியா நிலையும் ஜாதகர் படும் துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடும், புத்திசாலித்தனம் என்று  நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் வெகுவான  பாதிப்புகளை வாரி வழங்கும், செய்யும் காரியங்களில் ஜாதகருக்கு பெரும்பாலும் மிகப்பெரிய தோல்வியே கிட்டும், அடிப்படையில் உதவி செய்வார் எவருமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் வீண்  பிடிவாதமும், முரட்டு சுபாவமும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், அறிவார்ந்த பெரியோர்களின் சாபமும், விமர்சனமும் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும், பாதக ஸ்தானம் மண் தத்துவ ராசி என்றால் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும், ஜாதகரின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாகும், ஜாதகரின் சொத்து,வீடு,வண்டி,வாகனம் ஆகியவை அனைத்தும் மற்றவர்களால் அபகரிக்கும் சூழ்நிலையை தரும், அதற்க்கு ஜாதகரின் செயல்பாடுகள் காரணமாக அமையும், தமது பெயரில் உள்ள சொத்து, வண்டி, வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகர் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான தொடர்பு பெரும் ஓர் உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவாக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற நிலையையும், ஜாதகியின் அறிவற்ற செயல்களால் ஜாதகி வாழ்க்கையில் அதிக பாதிப்புகளையும், தனது பெயருக்கும்  புகழுக்கும் பெரிய களங்கத்தையும், தான் செய்வதே சரியானது என்ற அறிவீனத்தையும் ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, சம்பந்தம் இல்லாத மற்றவர் காரியங்களில் தலையீடு செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் பேச்சை கேளாமல் தமது வாழ்க்கையை தாமே கெடுத்துகொள்ளும் செயல்களில் ஜாதகி அசட்டு தனமாக இறங்குவது, ஜாதகியின் உடல் நிலையையும், மன நிலையையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நடவடிக்கைகள் ஜாதகியின் குடும்பத்தாருக்கு வெகுவான பாதிப்புகளை தொடர்ந்து வழங்குவது அவர்களின் நிம்மதியை வெகுவாக பாதித்துக்கொண்டு இருக்கிறது, முரண்பட்ட செயல்பாடுகள் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கும் அதிக இன்னல்களை தருவதற்கு, பாதக ஸ்தான தொடர்புகளே காரணமாக அமைகிறது என்பது கவனிக்க தக்கது.

மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஒன்றுமட்டும் ஆறுதல் தரும் விஷயம், ஆனால் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது, குரு திசையில் ஜாதகி அனுபவிக்க இருக்கும், இன்னல்கள் பற்றி தெளிவு பெறுவதும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்வதும், ஜாதகியின் வாழ்க்கையில் நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: