வெள்ளி, 19 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ தன்மை பெற்றதுமான தனுசு லக்கின அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஒருவகையில் லக்கினாதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திற்கு அதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், எனவே லக்கினத்திற்கு 12ல் மறைவும், 4ம் பாவகத்திற்கு 9ல் கோண பலம் பெறுகின்றார், குரு பகவான் விருச்சிகத்தில் அமர்ந்த நிலையில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு சற்று வீண் விரயங்களை தரக்கூடும், மேலும் சுப விரையங்களாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை தனசு லக்கின அன்பர்கள் உருவாக்கி கொள்வது அவசியமாகிறது, மேலும் எதிர்பாராத மனஉளைச்சல், மனப்போராட்டம், மனஅழுத்தம் போன்றவை மென்மேலும் துன்பங்களை தரக்கூடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலையும், அனைவராலும் துன்பம் என்ற நிலையும் தனுசு லக்கின அன்பர்களுக்கு மிகப்பெரிய சவால்களாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது, லக்கினாதிபதி மறைவு பெறுவதும், சுக ஸ்தான அதிபதி கோணபலம் பெறுவதும் தனுசு லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணமும், தான் எடுக்கும் முடிவுகளில் தெளிவும் தேவை என்பதை உணர்வது அவசியமாகிறது, மேலும் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல வண்டி வாகனம், வீடு சொத்து சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனம் தேவை, சிறு கவனமின்மை கூட தனுசு லக்கின அன்பர்களுக்கு கடுமையான பாதிப்பையும் இழப்பையும் தரக்கூடும் என்பதால், பயணங்களில் கவனமும், சொத்து சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையும் கொண்டிருப்பது அவசியமாகிறது, தனது பெற்றோரை கவனமுடன் பாதுகாப்பது ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து காத்தருளும், அனைவரிடமும் சுமுக போக்கை கையாள்வது ஜாதகருக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், புதிய வீடு, வண்டி வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யுமுன் சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து செய்வதே சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், ரிஷபம் எதிர் வர்க்க கிரகம் என்பதும் சற்று கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், குரு பார்வை பொதுவாக கோண வீடுகளை ( 1,5,9 ) சுவீகரிக்கும் பொழுதும், சம வீடுகளை ( 3,11 ) சுவீகரிக்கும் பொழுது மட்டுமே சுபயோகங்களை வாரி வழங்கும் , கேந்திர வீடுகளை பார்வை செய்யும் பொழுது இன்னல்களையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குருபகவானின் சமசப்த பார்வை சத்ரு ஸ்தானத்திற்கு விழுவது கடுமையான இன்னல்களையே தரும், குறிப்பாக ஜாதகரின் குறுகிய கால வருமானங்களில் தொய்வு ஏற்படும், உடல் நலம் பாதிக்கும் குறிப்பாக தலை மற்றும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, மேலும் கடன், வரவு செலவுகள் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது சகல நன்மைகளையும் தரும், மேலும் தனது வார்த்தைகள் மூலம் அதீத துன்பங்கள் உண்டாகவும், எதிர்ப்புகள் அதிகரிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் நாவடக்கம் தனுசு லக்கின அன்பர்களுக்கு அவசியமாகிறது, குரு பார்வையால் ஏற்படும் ஒரே நன்மை மற்றவர்கள் பணம் தன் கையிருப்பாக மாறும், அதன் வழியிலான வருமானம் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக அமைவதும் சிறப்பான நன்மைகளை தரும், திடீர் அதிர்ஷ்டம் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் கைகொடுக்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவும், பொருளாதார உதவிகளும் தனுசு லக்கின அன்பர்களுக்கு பேருதவியாக அமையும், ஆயுள் நீடிக்கும், உடல் நலம் மற்றும் இழப்புகளில் இருந்து மீண்டு வரும்  யோகம் உண்டாகும், பங்கு சந்தை லாட்டரியில் யோகம் உண்டு, புதையல் கனிம பொருட்கள் வழியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு அபரிவிதமான தனசேர்க்கை உண்டாகும், தெய்வீக  அனுக்கிரகம் சுய ஜாதகத்தில் ஆளுமை செய்யும் என்பதால் ஆன்மீக வெற்றி உண்டாகும், புதிய மனிதர்கள், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழங்கும் நன்மையாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக