திங்கள், 26 டிசம்பர், 2011

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!



பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம், ஒருவரது ஜாதகத்தில் வலுத்து நின்று திசையை நடத்தும் பொழுது அவருக்கு நடக்கும் பலாபலன் என்வென்று பார்ப்போம்.

1 தமது குலபெருமை காக்க ஒரு சிறப்பான ஆண்வாரிசு அமையும் , அக்குழந்தை கீர்த்தியுடனும், ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்று புத்திசாலி என பெயர் எடுக்கும்.

2 ஜாதகர் தமது பூர்விகம் எதுவோ அவ்விடத்தில் இருப்பதால் அனைத்து வளர்ச்சியும் அடைவார், குறிப்பாக நல்ல தொழில் முன்னேற்றம் பொருளாதரத்தில் தன்னிறைவு.

3 ஜாதகர் தமது முன்ஜென்மத்தில் செய்த அனைத்து நன்மைகளையும் இப்பிறப்பில் பிரதி பலனாக கிடைக்கும், அதனால் வாழ்வில் சகல முனேற்றமும் அடைவார், வருமுன் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இயற்கையாக அமையும்.

4 அரசு ஆதரவு, மக்கள் செல்வாக்கு , பெரிய மனிதர்கள் உதவி, நிலபுலன் வாங்கும் அமைப்பு , சொந்தமாக சகல வசதியுடன் புதிய வீடு அமையும், வண்டி வாகனம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, துவங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி என அனைத்து நலன்களும் கிடைக்கப் பெறுவார்.

5 மேலும் தியான தவ வாழ்கையில் வெற்றி, கடவுள் பக்தி, குலதெய்வ அருளாசி, தாய்மாமன் மூலம் அடையும் நன்மைகள், பூர்வீக சொத்துக்கள் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு, மந்திர சித்தி, தமது அறிவுரைகளை அனைவரும் மதித்து நடந்து கொள்ளுதல், நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.

1 கருத்து:

  1. இந்த 5ம் வீட்டில் சூரியனும் ராகுவும் அமர்ந்து,லக்னாதிபதியான குரு 2ல் மகரத்தில் நீசம் பெற்று,5க்கு உடைய செவ்வாய் 6ல் அமர்ந்தால் அந்த ஜாதகரின் நிலை?

    பதிலளிநீக்கு