வியாழன், 22 டிசம்பர், 2011

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட? !

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட !

 திருவக்கரையில் அமர்ந்து தம்மை நாடி வருவோர்க்கு அனைவருக்கும், அனைத்து வளங்களையும், சகல நலன்களையும் ஏழை எளியவர் என எவ்வித பாகு பாடும் இல்லாமல், தமது நான்கிரண்டு கரங்களால் அனைவரையும் தாங்கி அருள் பாலிக்கிறாள் அன்பு தாய். அம்மாவை தரிசித்து வளமுடன் வாழுங்கள்.

இங்கு வந்து முறைப்படி வக்கிரக நிவர்த்தி செய்துகொள்ளும்  அனைவருக்கும், அல்ல அல்ல வழங்கும் அமுத சுரபி போல் அனைத்து நலன்களையும் பெற்று, வளமுடன் நலமுடன் வாழ்கின்றனர் .

வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்துக்கு வந்து வக்கிரகாரி, வக்கிரலிங்கம், வக்கிர சனிபகவான் ஆகியோரை வழிபட்டால் பயன் கிடைக்கும். 

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 7 கி.மீ. செல்ல வேண்டும். இங்கு குண்டலி மகாமுனிவர் தவம் செய்து சமாதி பெற்றுள்ளார். 


அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கும், பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கும் காட்டப்படும் ஜோதிதரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள குண்டலி முனிவரது ஜீவ சமாதியில் மனம் உருக வழிபட்டால் நினைத்தது நடக்கும். அங்கு 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும், மன சஞ்சலங்கள் பறந்தோடி விடும்.
இத்தலத்தில் 3 மாதம் பவுர்ணமி நாளில் தொடர்ந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும். 


இத்தல வரலாறு வருமாறு:-
வக்கிரா சூரன் என்ற அசுரன் தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும்  சிவனிடம் வரம் கேட்டான். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் வச்சிராசூரன்  தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். வக்கிராசூரன் பெண்களால் அழியா வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும் போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். அதன்படி ஈஸ்வரி 16 கைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்தாள்.
பின்னர் வக்கிராசூரனை அழித்தாள். பிறகு திருவக்கரை தலத்தில்  வடக்கு முகமாக அமர்ந்தாள். இதனால் அவளுக்கு அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது. வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது.
அவன் கண்டத்தில் லிங்கத்தை வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு இந்த சக்தி தலத்தில் நிம்மதி கிடைக்கிறது.
ஜோதிடன் வர்ஷன் 

வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக