வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா?




ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா? 

ஜாதக ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணின் கேள்வி இது,  ஏனெனில் தாம் இதற்குமுன் பல ஜோதிடர்களிடம் தமது ஜாதகத்தை கொடுத்து ஆலோசனை கேட்ட பொழுது, ஜோதிடர்கள் அனைவரும் உங்களது ஜாதகத்தில், ஐந்தில் ராகு பகவன் இருப்பதால், ஐந்தாம் வீடு கெட்டுவிட்டதாகவும், குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும்  தெரிவித்ததாகவும் அப் பெண்மணி கூறினார்.

இதை கேட்டவுடன் தம்மை பெண்பார்க்க வந்த அனைவரும், தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை எனவும், தமக்கு இந்நிலை மாற, தாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்,

அவரது ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது உண்மையில் ராகு ஐந்தில் இல்லை,( லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணித்த அமைப்பில்) நான்காம் வீட்டில் இருந்தார், மிகவும் நல்லநிலையில் ராகு அமர்ந்திருந்தார், பிறகு அந்த பெண்மணிக்கு ராகுவின் நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கம் தந்தோம்.

ராகுவினால் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு இல்லை எனவும், அவர் ஜாதக கட்டத்தில் தான் ஐந்தில் இருக்கிறார், ஆனால் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கொண்டு பார்க்கும் பொழுது நான்காம் வீட்டில் உள்ளார், என்றும் அவர் நன்மையான பலன் மட்டுமே தந்து வருகிறர் என்றும், இதனால் ஐந்தாம் வீடு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் தந்த பிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

மேலும் உங்களது திருமண தாமதத்திற்கு காரணம் களத்திர பாவம் பதிக்கப்பட்டது மட்டுமே என்று கூறி அதற்க்கு என்ன செய்தால் திருமணம் விரைவாகவும் சிறப்பாகவும் நடை பெரும் என்பதையும் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.


ராகு கேது பகவான் ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, துலாம்,தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமர்ந்து அது ஐந்தாம் வீடாக வந்தால், ஜாதகருக்கு ஐந்தாம் பாவத்திற்கு 100 சதவிகித சுப பலன்களையே, பாகு பாடு இல்லாமல் தருகிறார் என்பதே உண்மை .


1 கருத்து:

  1. இது புரியவில்லையே,
    இன்னும் சற்று விளக்கமுடியுமா?லக்னம் முதல் என்ன 5ம் வீடு அப்படித்தானே.ஆனால் லக்ன ஆரம்ப பாகை என்கிறீரே,சற்று விளக்கவும்

    பதிலளிநீக்கு