சனி, 26 ஏப்ரல், 2014

திருமணம் தாமதம் ஆக ராகு கேது, செவ்வாய் தோஷம் காரணமா?

  



பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் அறிவுறுத்த படுகிறது, இதில் முதன்மை வகிப்பது ராகு கேது தோஷமும், செவ்வாய் தோஷமும் என்றால் அது மிகையில்லை, இதன் அடிப்படையில் மக்கள் பலர் ராகு கேது சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு படையெடுப்பதும், இதற்க்கு ஒருபடி மேலே சென்று பரிகாரம் என்ற பெயரில் மக்கள் பெருள் இழப்பை அடைவதும் வாடிக்கை ஆகிவிட்டது எனலாம்.

 சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 1,2,5,7,8,12ம் பாவகங்களில் ராகு கேது அமர்ந்திருந்தாலோ, 2,4,7,8,12ம் பாவகங்களில் செவ்வாய் அமர்ந்திருந்தாலோ தோஷம் என்று நிர்ணயம் செய்து, திருமண தாமதத்திற்கு காரணமாக மேற்க்கண்ட விஷயத்தை பல ஜோதிடர்கள் முன்னிறுத்துகின்றனர், பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆவதிர்க்கு சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலோ, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்தாலோ ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை அமைவதற்கு தடை ஏற்படும் அல்லது காலதாமதம் ஏற்ப்படும், ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்றவுடனே அதற்க்கு காரணம், ராகு கேது அல்லது செவ்வாய்தான் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஒரு விஷயம்.

 ஒருவேளை ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு, இந்த இரண்டு காரணத்தை தவிர சுய ஜாதகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட இரண்டு காரணத்தை தவிர வேறு காரணங்கள் ஜாதகருக்கு திருமண தாமதத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பில்லை எனலாம், இதற்க்கு காரணமாக ராகு கேது 1,2,5,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, செவ்வாய் 2,4,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, குருபலன் என்று சொல்லும் ஜாதகரின் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் குருபகவான் 2,5,7,9,11ம் சஞ்சாரம் செய்யாத காரணத்தாலோ திருமணம் தாமதம் அடைய வாய்ப்பில்லை.

உதாரணமாக : 



 மேற்கண்ட  சிம்ம இலக்கின  ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக காரணமாக பல ஜோதிடர்கள் கணித்தது, ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் சர்ப்ப தோஷம் என்று காரணம் காட்டி உள்ளனர் ( உண்மையில் இந்த ஜாதகருக்கு ராகு கேது முறையே லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணிதம் செய்யும் பொழுது லக்கினத்திற்கு 12ல் (சிம்மத்தில்) ராகுவும், 6ல் (கும்பத்தில்) கேதுவும் அமர்திருப்பது புலனாகும் ) ஆனால் இந்த ஜாதகத்தில் ராகு கேது மிகவும் வலிமையுடன் தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே முற்றிலும் உண்மை.

 ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆவதிர்க்கு சுய ஜாதகத்தில் உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு செய்யும் பொழுது, ஜாதகருக்கு களத்திர பாவகம்  நல்ல நிலையில் இருப்பதும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே , ஆக இந்த ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளவதே இதற்க்கு முக்கிய காரணமாக  கருதலாம், ஜாதகரின் திருமணம் தாமதம் ஆக ராகு கேது எந்த விதத்திலும் காரணம் அல்ல என்பதை இந்த இடத்தில் உணர்ந்துகொள்வது அவசியம், ஜாதகத்தில் 7ம் பாவாகம் நல்ல நிலையிலும், 2ம் பாவகம்  பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகர் கவலை கொள்ள அவசியம் இல்லை, ஏனெனில் ஜாதகருக்கு 32 வயதுக்கு மேல் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ராகு கேதுவுக்கு ஜாதகர் பரிகாரம் செய்வதால் எவ்வித நன்மையையும் இல்லை என்பதே உண்மை, இதற்க்கு பதிலாக திருமணம் தாமதமாக நடைபெற ஜாதகருக்கு 2ம் பாவகம் எனும் குடும்ப ஸ்தானம் வலிமை அற்று இருப்பதே இதற்க்கு காரணம், மேலும் திருமணம் நல்ல முறையில் ஜாதகருக்கு நடைபெற 2ம் பாவகத்திர்க்கு அதிபதி யார் என்பதை கருத்தில் கொண்டு, சம்பந்த பட்ட கிரகத்திற்கு பிரிதி பரிகாரம் செய்வதும், 2ம் பாவக அமைப்பில் இருந்து வரும் பாதிப்பை ஏற்றுக்கொண்டு  அதன் வழியில் ஜாதகர் மற்றவர்க்கு நன்மையை செய்யும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கூடி வரும்.

 இதை தவிர்த்துவிட்டு ஜாதகர் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வதால் திருமண வாழ்க்கை எவ்விதத்திலும் கை கூடி வர வாய்ப்பில்லை, மாறாக ராகு கேது கிரக அமைப்பில் இருந்தும், 6,12ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த நன்மையை ஜாதகர் அனுபவிக்கலாம், 6ம் பாவக வழியில் இருந்து நோய் நொடி இல்லாமலும், கடன் சிக்கல்கள் இல்லாமலும், நீண்ட ஆரோக்கியத்துடன் இயங்க முடியும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல தூக்கமும், முன் ஜென்ம நினைவுகள் பற்றியும், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியும் மோட்ச வாழ்க்கையும், முதலீடு செய்வதால் அபரிவிதமான முன்னேற்றத்தையும்  வாரி வழங்கும்.

 ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன என்பதை சரியாக தெரிந்துகொண்டு, அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை செய்யும் பொழுது ஜாதகருக்கு திருமணம் விரைவாக சரியான நேரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும், மேற்கண்ட ஜாதகருக்கு 2ம் பாவக அதிபதியான செவ்வாய் பகவனே திருமண தாமதத்திற்கு காரணம், எனவே செவ்வாய் பகவானை முறையாக வழிபாடு செய்வதும், தனது உடன் பிறப்புகளுக்கு நன்மை செய்வதும் , செவ்வாய் பகவான் ஆதிக்கம் உள்ள பொருட்களை தானம் செய்வதும் ஜாதகருக்கு விரைந்து திருமண வாழ்க்கையை அமைத்துத்தரும், சுய ஜாதகத்தில் திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன? என்பதை மிக துல்லியமாக உணர்ந்து அதற்க்கு உண்டான தீர்வை சொலும் பொழுது ஜாதகருக்கு திருமணம் எவ்வித தங்கு தடையின்றி நடைபெறும் என்பதே ஜோதிட உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக