செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில்( தோஷம் பெற்று ) அமரும் பொழுது ஜாதகர் படும் அவஸ்த்தை !




 சுய ஜாதகத்தில் பொதுவாக ராகு  கேது எனும் சாய கிரகம் இரண்டும் மிக வலிமையுடன் அமர்வது, ஜாதகரின் வாழ்க்கையில் அடிப்படியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும், அதாவது சிறுவயதில் நல்ல அடிப்படை கல்வி, சரியான வயதில் தடையற்ற உயர்கல்வி, கற்ற  கல்விக்கேற்ற சரியான தொழில் வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகள், இளம் வயதில் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் யோகம், சிறப்பான புத்திர சந்தானம், நல்ல வசதி மிக்க வீடு,வண்டி,வாகன யோகம், நல்ல நண்பர்கள் சேர்க்கை, நல்ல கூட்டாளிகள் என ஜாதகருக்கு அடிப்படையில் இருந்து இறுதி வரை நல்ல சுக போகமான வாழ்க்கை அனுபவிக்கும் தன்மையை தரும், ராகு கேது இதற்க்கு மாறாக வலிமை அற்று அமரும் பொழுது ஜாதகர் படும் துன்பத்திற்கு ஒரு அளவில்லாமல் தீய பலன்களை தர ஆரம்பித்து விடும்.

எடுத்துகாட்டாக :


 மேற்க்கண்ட ரிஷப இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது லக்கினத்தில் இருந்து 5ல் ராகுவும், 11ல் கேதுவும் இருப்பதை போன்ற தோற்றத்தை தந்தாலும், லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை, அடிப்படையாக கொண்டு காணும்பொழுது ஜாதகருக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் அமர்ந்திருப்பது தெரியவரும், மேலும் சாயா கிரகமான ராகு கேது மேற்கண்ட பாவகத்தில் அமர்ந்து ஜாதகருக்கு எவ்வித பலாபலன்களை வாரி வழங்குகிறார்கள் என்பதை, இன்றைய ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 ராகு ஜாதகருக்கு உபய மண் தத்துவ ராசியான கன்னியில் 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் அமர்ந்து 4ம் பாவகத்தை 100 சதவிகிதம் பதிப்புக்கு உள்ளக்குவதர்க்கு காரண கர்த்தாகவாக விளங்குகிறார், இங்கே ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்து காணும் பொழுது நான்காம் பாவகமாகவும், கால புருஷ தத்துவ அமைப்பின் அடிப்படையில் 6ம் பாவகமாக விளங்குவதாலும், ஜாதகர் தனது சுக போக வாழ்க்கையில் தானே துன்பத்தை வரவழைத்து கொள்ளும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகரின் நோக்கமும் செயல்களும் ஒரு நேர்கோட்டில் அமைவதற்கு உண்டான வாய்ப்பை வழங்காது, மேலும் ஜாதகர் பண விஷயத்தில் அதிக கவனமின்மையை தரும், ஜாதகர் வாங்கும் கடனும், கொடுக்கும் கடனும் அதிக இன்னல்களை ஏற்ப்படுத்தும்.

 மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளை ஜாதகரே வலுகட்டாயமாக வரவளைத்துகொள்ளும் தன்மையை தரும், உதாரணமாக லகிரி வஸ்த்துகளை பயன்படுத்துவதால் உடல் நிலையில் அதிக தொந்தரவுகளை பெரும் நிலை தரும், குறிப்பாக வயிறு சம்பந்த பட்ட பிரச்சனைகளையும், இதயம் சம்பந்தபட்ட பிரச்சனைகளையும் அதிகமாக தரக்கூடும், ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெற்று இருப்பதால் தனக்கு வரும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தரும், இருப்பினும் ஜாதகர் உடல் தொந்தரவுகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக சுய ஜாதகத்தில் ராகு வலிமை குறைவாக அமரும்பொழுது ஜாதகர் அதிக கவனமாக தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், இல்லை எனில் ஜாதகருக்கு வரும் உடல் தொந்தரவுகளின் அளவு மிக கடினமானதாக இருக்கும்.

  ராகுவால் பாதிப்புக்கு உள்ளாகும் , ஜாதகரின் நான்காம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக விளங்குவதால் சிறு வயது  முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தருவதற்கு வாய்ப்பு இல்லை எனாலாம், மேலும் ராகு பகவானுக்கு நேரெதிராக அமரும் கேது பகவானும் 10ம் பாவகமான ஜீவன ஸ்தானத்தை பாதிப்புக்கு உள்ளாக்குவதால், தகப்பனாரின் அரவணைப்பிலும் வளரும் சூழ்நிலையை தராது, ஆக ராகு கேது  இரண்டும் ஜாதகரை பெற்றோரின் அரவணைப்பில் இருந்து பிரித்தெடுத்து தனிமையில்  வளரும் சூழ்நிலையை தந்துவிடும்.

 கேது ஜாதகருக்கு உபய நீர் தத்துவ ராசியான மீனத்தில்  10ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் அமர்ந்து 10ம் பாவகத்தை 100 சதவிகிதம் பதிப்புக்கு உள்ளக்குவதர்க்கு காரண கர்த்தாகவாக விளங்குகிறார், இங்கே அமரும் கேது பகவான் ஜாதகருக்கு முதலில் தகப்பனார் வழியில் இருந்து வரும் நன்மைகளை அனைத்தையும் தடை செய்துவிடுவார், குறிப்பாக தகப்பனார் அமைப்பில் இருந்து ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பாராமல் இருப்பது ஏமாற்றத்தை தவிர்க்கும், மேலும் தகப்பனார் வழியில் இருந்து வரும் உதவிகள் ஆதரவு ஜாதகருக்கு நிலையாக நிலைத்திருக்கும் தன்மையை தர சிறிதும் வாய்ப்பில்லை, எனவே ஜாதகர் தனது தகப்பனாருக்கு  தன்னால் இயன்ற நன்மையை செய்யும் பொழுது, சுய கௌரவம் மற்றும் தொழில்  முன்னேற்றம் பெற இயலும் என்பதே உண்மை.

கேது பகவான் லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்தாலும் இந்த மீன ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் பாவகமாக வருவதால் ஜாதகரின் மன நிம்மதி கடுமையாக பாதிக்க படும் தொழில் அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை தரும், உதாரணமாக் நல்ல வேலையாட்கள் ஜாதகருக்கு அமைய வாய்ப்பு குறைவு, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் செல்லும் தன்மையை தரும், ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமையாக இருப்பதால், தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும் என்பதை நினைத்து ஆறுதல் பெறலாம்.

 ஜீவன ஸ்தானத்தில் அமரும் கேது பகவான் ஜாதகருக்கு தனது சுய கௌரவத்திற்கு பாதிப்பை தரும் என்பதால் ஜாதகர் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், சுய கௌரவத்திற்கு பாதிப்பை தராமல் ஜாதகருக்கு நர்ப்பெயரும் நன்மையையும் உண்டாகும், இதற்க்கு மாறாக ஜாதகர் மற்றவர் விஷயத்தில் தலையீடு செய்தால் ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குரியதாக மாறிவிடும், ஜீவன வாழ்க்கையில் முன்னேற்றம் இன்மை அல்லது எதிர்பாராத இழப்பு என்ற சூழ்நிலையை தரும், ஆக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்புக்கு உள்ளாவது சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து கடுமையான பாதிப்பை தருகிறது, ஒருவேளை நடைமுறையில் இருக்கும் திசை மற்றும் புத்தி சம்பந்தபட்ட பாவக  பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் பாதிப்பின் அளவு மிக அதிகமாக  இருக்கும் ஜாதகரால் இதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலையையே தரும்.

சாயா  கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் மேற்கண்ட இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது, குறிப்பாக ராகு கேது எந்த பாவகத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்களோ அதன் வழியில் இருந்து அளவற்ற துன்பங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டி வருகிறது, குறிப்பாக 4,10 ம் பாவகம் ராகு கேதுவுடன் சம்பந்தம் பெற்று வலிமை இழக்கும்  பொழுது ஜாதகர் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையை தருகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் 4,10ம் பாவகம் உபய ராசியாக இருப்பதால், ஜாதகர் தனது பெற்றோரை பிரிந்து வாழும் சூழ்நிலையை தந்தது , இதுவே சர ராசியாக இருந்தால் ஜாதகர் பெற்றோரை இழந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதை நினைத்து ஆறுதல் பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக