வியாழன், 24 ஏப்ரல், 2014

ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும்பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


 நவ கிரகங்களில் சாய கிரகம் என்று அலைக்கபெரும் ராகு கேது ஒருவரின் சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை என்பது, கற்பனையிலும் எவராலும் நினைத்து பார்க்க இயலாத வகையில் அமர்ந்து விடும், குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்ந்து 100% நன்மையை தரும் அமைப்பை பெரும் பொழுது, ஜாதகரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்ட அமைப்பை பெற்று குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் வியப்பில்லை, அதிலும் தற்பொழுது நடைமுறையில் திசை மற்றும் புத்திகள் லக்கினம் மற்றும் களத்திர பாவக பலன்களை வாரி வழங்கினால், ஜாதகரின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

எடுத்துகாட்டாக :

 மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக காணும் பொழுது ராகு கேது எனும் சாய கிரகங்கள் 2ம் பாவகத்திலும், 8ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை தந்தாலும், துலாம் ராசியில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் கேது அமர்ந்தும் ( 194.08.13 ) மேஷ ராசியில் களத்திர பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு  அமர்ந்தும் ( 014.08.13 ) ஜாதகருக்கு 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகவே கருதலாம்.

 கேது ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்வது ஜாதகருக்கு முதல் பாவக வழியில் இருந்து 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் மேலும் கேது அமர்ந்திருப்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, 7ம் வீடான சர காற்று தத்துவ துலாம் ராசியில், எனவே ஜாதகருக்கு வாழ்க்கையில் பெயரும் புகழும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் எல்லாம், வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், பொதுமக்கள் வழியில் இருந்தும் கிடைக்கும், குறிப்பாக ஜாதகர் செய்யும் தொழில் அனைத்தும் பொது மக்களை சார்ந்த அமைப்பில் இருக்கும், தனது சுய அறிவாற்றலை கொண்டு செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும்.

 குறிப்பாக ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வது மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும், இயற்கையாகவே ஜாதகர் நல்ல அறிவாற்றலும், புதுமையான சிந்தனை திறனும் கொண்டவர் என்பதால் எவ்வித சிரமும் இல்லாத தொழில்களை தேர்ந்தெடுத்து, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பல தொழில்களை நிர்வகிக்கும் யோக அமைப்பை தரும், வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு மிகப்பெரிய எதிர்பாராத வருமான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

மேலும் லக்கினத்தில் அமர்ந்த கேது பகவான் ஆன்மீகத்தில் தெளிந்த நல்லறிவையும், தனது பிறப்பின் ரகசியத்தை உணரும் ஆற்றலையும் ஜாதகருக்கு இயற்கையாகவே தந்துவிடுவார், பின்னல் நடக்க இருக்கின்ற விஷயங்களை முன்னாலே உணரும் அறிவு, ஜாதகருக்கு சிறு வயது முதலே அமைந்து இருப்பது இறைவன் கொடுத்த வரம் எனலாம், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன ஆற்றலையும், கேது பகவான் சற்று அதிகமாகேவே ஜாதகருக்கு தந்திருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், பொது மக்களிடம் நன்மதிப்பும், பொதுமக்களின் ஆதரவில் அலங்கரிக்கும் அரசியல் பதவிகளும் ஜாதகருக்கு மிக எளிதாக தேடி வரும் என்பது குறிப்பிட தக்க ஒரு விஷயம், கேது பகவான் இந்த ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்து பாவக அமைப்பிற்கு உற்பட்ட யோக பலனை வாரி வழங்குவது, ஜாதகர் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனே என்றால் அது மிகையில்லை.

 அடுத்ததாக லக்கினத்திற்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு கிரகத்தை பற்றி சற்றே சிந்திப்போம், பொதுவாக சாய கிரகங்களான ராகுவோ அல்லது கேதுவோ ஏதாவது ஒன்று நல்ல நிலையில் இருந்தாலே, ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெறுவார், மேற்கண்ட ஜாதகருக்கு ராகு கேது என்ற இரு கிரகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் செய்த புண்ணிய பதிவின் காரணமே என்றால் அது மிகையில்லை, சர நெருப்பு தத்துவ ராசியான மேஷத்தில் அமரும் ராகு பகவான் களத்திர ஸ்தானத்தை 100% வலிமை பெற செய்வது ஜாதகருக்கு வெளி வட்டார பழக்க வழங்கங்கள் அனைத்தும் மிகப்பெரிய இடத்தில் இருந்தே அமையும், வாழ்க்கை துணையும் நண்பர்களும் ஜாதகருக்கு மிக உயர்ந்த வசதி மிக்க இடத்தில் இருந்தே கிடைப்பார்கள், பொதுமக்களின் ஆதரவு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இங்கு அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு கண்ணியாமான வியாபாரியாகவும், நேர்மையான தொழில் செய்யும் நபராகவும், செய்யும் தொழில் மற்றும் பொதுமக்களிடம் நர்ப்பெயர் எடுக்கும் திறமை பெற்றவராகவும், காணப்படுவார், மேஷம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக வருவதால் ஜாதகருக்கு முன்னேற்றமும், செல்வாக்கும் மிகவும் அபரிவிதமாக இருக்கும்.

 நெருப்ப தத்துவ ராசியில் நல்ல நிலையில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கையான மன நிலை, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திசாலித்தனம், தனது கூட்டாளிகளுக்கு யோகத்தை தருபவராகவும், நண்பர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் மதி மந்திரியாகவும், மற்றவர் வாழ்க்கையில் வெளிச்சத்தை தரும் அகல் விளக்கவும், தன்னிலை பாரமால் தன்னை நம்பியவரையும், தன்னை நம்பி வாழ்பவரை காப்பாற்றும் வல்லமை பெற்றவராகவும் ஜாதகர் விளங்குவார், ராகு பகவான் சர நெருப்பு ராசியான மேஷத்தில் வலிமையுடன் அமர்ந்திருப்பது, ஜாதகரை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும், உடல் வலிமை மிக அதிகமாக காணப்படும், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்றிருப்பது ஒரு சிறப்பான விஷயமே.

 ஜாதகருக்கு சாய கிரகமான ராகு கேது இரண்டும் மிக வலிமையுடன் முறையே சர ராசிகளான மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் மிகவும் சிறப்பாக லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களில் அமர்திருப்பது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பே, அதிலும் குறிப்பாக தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை, லக்கினம் மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவது சந்திரன் திசை முழுவதிற்கு உண்டான, இலக்கின களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை வாரி வழங்கும், எனவே ஜாதகர் தற்பொழுது சந்திரன் திசையில் மிகுந்த யோக பலன்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் என்பதே மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

ஆக சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமையுடன் அமரும் பொழுது ஜாதகர் மிகுந்த பாக்கியசாலியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் அவருடன் நட்பில், உறவில் இருப்போர் அனைவரும் யோக பலன்களை பெறுவார் என்பதிலும் சந்தேகம் இல்லை, சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெரும் பொழுது புலனுக்கு எட்டாத அறிவாற்றலையும், இறையருளின் கருணையை பூரணமாக பெரும் யோகத்தையும் பெற்றிருப்பது சிறப்பான ஒரு விஷயம், இவர்களின் கைகள் பட்டால் உடல்நலம் பெரும், பார்வை பட்டால் வாழ்க்கையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.

 ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் எந்த ஒரு பாவகத்தில் இருந்தாலும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது உறுதி, இதனை உணராமல் ராகு கேது ஜாதகத்தில் 1,2,5,7,8,12ல் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு தோஷம் என்று கணிப்பதும், அவயோக பலன்களையே தரும் என்று கணிப்பதும் ஜோதிட அறிவு சிறிதும் அற்றவர்களின் கருத்தாகவே நாம் எடுத்துகொள்ள வேண்டி வருகிறது, சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்திருக்கும் பாவகம் மற்றும் ராசி அதன் தன்மை ஆகியவற்றை துல்லியமாக கணிதம் செய்து பலன் அறிவது, ஜோதிட துறைக்கு நாம் ஆற்றும் கடமையே என்றால் அது மிகையில்லை.
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக