சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகு பகவான் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், ராகு பகவான் அமர்ந்த பாவக வழியில் இருந்து யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே போல் ராகு பகவான் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் அவர் தரும் தீய பலாபலன்களில் இருந்து விடுபடுவது சிரமமே, ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்று இருந்தாலோ, வலிமை அற்று இருந்தாலோ தான் தரவேண்டிய பலாபலன்களை நிச்சயம் தரும், ஆனால் அதை தனது தசாபுத்திகளில் தரும் என்று எண்ணுவது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது.
ஒருவருக்கு ராகு திசை நடைபெறும் பொழுது, தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்பதும், நவ கிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனையும், பார்த்த பாவக பலனையுமே தனது திசா புத்திகளில் வழங்கும் என்பதும் முற்றிலும் தவறான கணிப்பே, இதை பற்றி ஓர் பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தற்பொழுது கேள்விக்கு வருவோம் கிழ்கண்ட ஜாதகருக்கு 7ம் பாவகத்திர்க்கு பாதிப்பை தரும் ராகு, தனது திசையில் 7ம் பாவக வழியில் இருந்து தீமையை தருமா? இதற்கான பதில் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
லக்கினம் : மீனம்
ராசி : மகரம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம்
ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கடுமையான பாதிப்பை வாரி வழங்குவது உண்மையே, இதனால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆரோக்கிய குறைவை பெறுவது உறுதி, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக இன்னல்களும் பொருள் இழப்பும் உண்டாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கை மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களும் எதிர்பாராத நேரத்தில் வரும் என்பது ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதற்கு உண்டான பலாபலன்கள், ஆனால் மேற்கண்ட பலன்களை எதிர்வரும் ராகு திசையில் வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதே ஏனெனில், எதிர்வரும் ராகு திசை பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது.
எனவே ராகு திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, எதிர்பார்த்த வருமான வாய்ப்புகள் வந்து சேரும் யோகம், வாக்கு வன்மை அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும், வாக்கின் வழியில் வருமானம் அதிகரிக்கும், கை நிறைவான வருமானமும், அளவற்ற செல்வ சேர்க்கையும் லட்ஷமிகடாட்ஷம் உண்டாகும், ஜாதகரின் 2ம் வீடு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவதும், ஜாதகருக்கு விரைவான யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தை ராகு பகவான் பாதிப்பிற்கு உள்ளாக்கினாலும், தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், தனது திசாபுத்திகளில் பாதிக்கப்பட்ட பாவக பலனையே வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகும், மேலும் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்று இருப்பின் தனது திசாபுத்திகளில் யோகங்களையும், நன்மையையும் வாரி வழங்கும் என்பதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதே, நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் காண முற்படுவதே சாலச்சிறந்தது.
மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டுவரும் திசாபுத்திகள் எது? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சூரியன் திசாபுத்தி மட்டுமே, எனவே ஜாதகர் சூரியன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களையும் துன்பங்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இந்த காலங்களில் ஜாதகர் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமாக எதிர்கொண்டு நன்மைகளை பெறுவது அவசியமாகிறது.
குறிப்பு :
நவகிரக திசாபுத்திகள் ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தவே உரிமை பெற்றவை, மேலும் தனிப்பட்ட இயக்கத்தில் நன்மை தீமை பலாபலன்களை வழங்க நவகிரகங்கள் தகுதி அற்றவை என்பதை கருத்தில் கொள்வது நலம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் யாவும் நன்மைகளையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல், பாதிக்கப்பட்ட பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்கள் இருந்த போதிலும் எவ்வித பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இதை போன்றே சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து யாதொரு துன்பமும் ஜாதகருக்கு நேராது என்பது ஜாதகருக்கு உள்ள சிறப்பு அமசமாகும், இது பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக