புதன், 31 ஆகஸ்ட், 2016

சுக்கிரன் திசை வழங்கிய அவயோகமும், ஜாதகரின் கலைத்துறை மோகமும் !




சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு, ஆலோசனை வழங்கும் அன்பர்கள் சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் பெறுவார் என்றும், அவரது கனவுகளும் லட்சியங்களும் தங்கு தடையின்றி நிறைவேறும் என்றும், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோக நிலை சுக்கிரன் திசை காலங்களில் ஜாதகருக்கு ஏற்படும் என்று சொல்வது உண்டு, பொதுவாக பார்க்கும் பொழுது சுக்கிர திசை நடைமுறையில் உள்ள அன்பர்களுக்கு இது பெரும் மகிழ்வையும் பேரானந்தத்தையும் நிச்சயம் தரும், இதை வேத வாக்காக கொண்டு சுய ஜாதக வலிமையை அறியாமல் சம்பந்தப்பட்ட ஜாதகர் சில முடிவுகளை மேற்கொண்டால், எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒருவேளை நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நிச்சயம் தரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே நடைபெறும் சுக்கிரன் திசை ஏற்று நடத்தினால் ஜாதகர் கதி அதோ கதிதான்.

சுக்கிரன் திசை தரும் நன்மை மற்றும் தீமையை பற்றி கீழ்கண்ட ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகரின் லட்சியம் கலை துறையில் இயக்குனராக பிரகாசிப்பது, சுய ஜாதக வலிமை நிலை அதற்க்கு முரணாக அமைந்துள்ளது, ஒருவர் கலை துறையில் பிரகாசிக்க சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமும், லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும், நீர் தத்துவ ராசிகளும் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியம், மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் அப்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரை குறுகிய காலத்தில் தனது லட்ச்சியங்களை  அடைவதற்கு வழிவகுக்கும், மேலும் இயக்குனராக பிரகாசிக்க சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்களும் மிக மிக வலிமை பெறுவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமான அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வெற்றி நிச்சயம், மாறாக நடைபெறும் திசாபுத்திகள் ஜாதகருக்கு பாதகமாக இருந்து விட்டால் ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் வீண் விரையமாக மாறிவிட வாய்ப்புண்டு.

மேற்கண்ட ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்த காலகட்டங்களில் நடைமுறையில் சுக்கிரன் தனது திசையை ( 03/02/1994 முதல் 03/02/2014 வரை ) நடத்தியுள்ளார், மேலும் சுக்கிரன் தான் ஏற்று நடத்திய பாவக தொடர்பானது 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் வழங்கி உள்ளது, ஜாதகரின் விரைய ஸ்தானம் ( மிதுன ராசியில் 81:39:17 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 110:43:48 பாகையில் முடிவடைகிறது ) மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரியம் மற்றும் முயற்ச்சி ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும், கடகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும் ஜாதகருக்கு சாதகமான விஷயம் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் மிதுனம் மற்றும் கடகம் எனும் இரண்டு ராசிகளில் வியாபித்து இருப்பது உபய கற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 12ம் பாவாகம் அமைவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வியையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 12ம் பாவகம் வியாபித்து இருப்பது ஜாதகரின் கற்பனை வளத்தில் குறைவையும் தருகிறது, மேலும் இது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் ஈடுபடும் பொழுது வீண் விரையத்தை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் தனிப்பட்ட சுய தொழில் மூலம் வெற்றி பெற இயலாது என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் கவுரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை ஜாதகருக்கு வெகுவாக பாதிக்கப்படும், என்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை உள்ள பாவகம் எதுவென்று அறிந்து அது சார்ந்த முயற்ச்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெற்ற சுக்கிரன் திசை 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ( 03/02/2014 முதல் 03/02/2020 வரை ) 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனையே வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் பெரும் ஜீவன வழியிலான இன்னல்களை தெளிவாக்குகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான குடும்பம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை பெறுவதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

 1,2,4,7,9,11ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்க தக்கது, மேலும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறந்த யோக அமைப்பாகும்,  இதனால் ஜாதகருக்கு வாக்கு,குடும்பம் மற்றும் வியாபாரம், ஏஜென்சி தொடர்புகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு வலிமை பெற்ற 2,3ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் யாதென்று அறிந்து அந்த காலகட்டங்களில் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற முயற்ச்சிப்பதே உகந்ததாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு உகந்த ஜீவனங்களை ஜாதகர் தேடும்பொழுது ஏமாற்றங்கள் நிச்சயம் வர வாய்ப்பில்லை என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, விரைய ஸ்தான பாவகத்திற்கு ஒரு வலிமை உண்டு, மிதமிஞ்சிய கற்பனைகளை வாரி வழங்கும் வல்லமை பெற்றது, சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் கற்பனை திறன் மூலம் பல அறிய நிகழ்வுகளை நிகழ்த்த இயலும், 12ம் பாவகம் வலிமை அற்று இருப்பின் வீண் கற்பனைகளையும், நிறைவேறாத கனவுகளையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் நிலையை தந்து விடும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5,8ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரை கலை துறையில் பிரகாசிக்க இயலாத சூழ்நிலையை தந்து விட்டது, மேலும் நடந்த சுக்கிரன் திசை தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை இரண்டும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவற்றையும் கானல்நீர் ஆக மாறிவிட்டது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 2,3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஸ்திரமான நன்மைகள் நடைமுறைக்கு வரும் என்பதை ஜாதகர் கவனத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை, கால நேரம் மற்றும் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் எதுவென்று அறிந்து வாழ்க்கையில் நலம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக