" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ வேண்டும் எனில் ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு வலிமை சேர்க்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவதை விட சுய ஜாதகத்தில் ஜீவன வாழ்க்கையுடன் தொடர்பு பெரும் பாவகங்களும் வலிமைபெறுவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், சுயமாக தொழில் செய்து அதில் வெற்றிகரமாக திகழ சுய ஜாதகத்தில் 1,3,4,5,7,9,10,11 வீடுகள் வலிமை பெற்று காணப்படுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் நிர்வாக வல்லமையை வழங்கும், வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வகையில் மற்றவர்களுடனான தொடர்பையும், இணக்கமான சூழ்நிலையை சிறப்பாக அமைத்து தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் இடம்,பொருள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையையும், சுய பொருள் சேர்க்கையும் வழங்கும், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதர் தமது தொழில் மேல் கொண்டுள்ள ஆராவத்தையும், நுண் அறிவு திறனையும், தெளிவான சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்களையும் வழங்கும், தொழில் வழியில் ஜாதகர் பெரும் படி படியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் செய்யும் வியாபார யுக்திகளையும், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஜாதகர் கொண்டுள்ள உறவை வலுவாக்கும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஜாதகரின் தனி திறனை வெளிப்படுத்தும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் நல்ல பெயரையும், நம்பிக்கையையும், பொது மக்கள் மத்தியில் பிரபல்யம் பெரும் யோகத்தை தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் எது என்பதை தெளிவு படுத்தும், ஜாதகர் செய்யும் தொழில் வகைகளை நிர்ணயம் செய்யும், ஜாதகருக்குள்ள உள்ள பன்முக தொழில் வல்லமையை தெளிவு படுத்தும், தான் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், ஜாதகர் சுய தொழில் செய்ய உகந்தவரா? கூட்டு தொழில் செய்ய உகந்தவரா? அடிமை தொழில் செய்ய உகந்தவரா? அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியும் யோகம் பெற்றவரா? சிறுகுறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பெரும் முதலீடுகள் கொண்ட தொழில்களை எதை செய்ய அருகதை கொண்டவர் என்பதை தெளிவுபடுத்தும்.
லாப ஸ்தானம் ஜாதகர் தனது தொழில் மற்றும் சுய ஜாதக வலிமையின் அடிப்படியில் பெரும் லாபங்கள், அதிர்ஷ்டங்கள், சுயமுன்னேற்றம், முயற்ச்சியில் பெரும் வெற்றி, நீடித்த அதிர்ஷ்டம், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ளும் யோகம், தேடிவரும் பதவி, புகழ், தொழில் முன்னேற்றம், சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யோகம், சரியான திட்டமிடுதல்கள், மற்றவர்கள் ஆதரவை பரிபூர்ணமாக பெரும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, முற்போக்கு சிந்தனை, லட்ச்சியம் மற்றும் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெரும் வல்லமை, சுய முன்னேற்றம், அதிபுத்திசாலித்தனம், சரியான திட்டமிடுதல்கள், தொலைநோக்கு பார்வை மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக எடுத்து செல்லும் வல்லமை, ஆராய்ச்சி மனப்பக்குவம், எதையும் சுய அறிவு கொண்டு நிர்ணயம் செய்தல், என ஜாதகர் தொழில் ரீதியாக பெரும் நன்மைகள் அனைத்தையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதை லாபஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, ஓர் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரை நிச்ச்யம் சிறந்த தொழில் அதிபராக இந்த உலகத்திற்கு வழங்கும்.
இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.
லக்கினம் : தனுசு
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்.
ஜாதகருக்கு மேற்கண்ட கட்டுரையில் கூறியது போன்று அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, குறிப்பாக 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் வியாபர விருத்தி பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும், 2,5ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் நல்ல வருமானமும், நம்பிக்கை மற்றும் நார்ப்பெயர் எடுப்பவர் என்பதனையும், சுய அறிவு திறனும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெறுபவர் என்பதனையும், 4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுக சேர்க்கை, வீடு, நிலம் மற்றும் வண்டி வாகன யோகம் மூலம் ஜீவன வாழ்க்கை பெறுபவர் என்பதனையும், கூட்டு முயற்ச்சி மற்றும் கூட்டு தொழிலில் வெற்றி பெறுபவர் என்பதனையும், செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் பெரும் யோகம் கொண்டவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குறுகிய கால ஜீவன வெற்றிகளையும், சமூக தொழில் முறை அந்தஸ்த்தையும் பெறுபவர் என்பதனையும் உறுதி செய்கிறது.
11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் 100% சதவிகித தொழில் வெற்றியையும், அளவில்லா லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவது, ஜாதகத்திற்க்கே சிகரம் வைத்தார் போல் சிறப்பான யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தொழில் ரீதியான பெரும் வெற்றிகளை ஜாதகர் பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் வாழ்க்கை துணை,பொதுமக்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்களையும் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் பெறுவார் என்பதை உறுதி செய்கிறது.
தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2010 முதல் 06/11/2029 வரை ) வலிமை பெற்ற குடும்பம்,பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான பலன்களையே ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் விருத்தியை பன்மடங்கு வாரி வழங்கும், சகல விஷயங்களில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாயுப்புக்களையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி வழங்கும், சனி திசை ஜாதகருக்கு தொழில் ரீதியாக 100% விகித வெற்றிகளை வழங்குவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696