சனி, 5 நவம்பர், 2016

சுய தொழில் அல்லது அடிமைத்தொழில் எதை தேர்வு செய்வது?


கேள்வி :

வணக்கம், கடந்த 10 வருடங்களுக்கு முன் சுயமாக தொழில் செய்து, மிகப்பெரிய நஷ்டம், தற்போழுது திருப்தி இன்றி ஓர் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றேன், வருமான பற்றாக்குறை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது, சுய தொழில் செய்ய வாய்ப்பு தற்போழுது நண்பர்கள் வழியில் இருந்து வருகின்றது, துணிந்து செய்யலாமா? அல்லது தற்போழுது உள்ள வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா ? தெளிவான விளக்கம் தேவை.


பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் வெற்றிகளை வழங்கும் பாவகங்கள் (1,4,7,10,11 ) வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், தட்டாமல் செய்யும் தொழிலில் வெற்றிகளை வாரி குவிக்கும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும், குறிப்பாக ஒருவரது ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைந்து ( உபய லக்கின அன்பர்கள் அனைவரையும் சாரும் ) வலிமை பெற்றும்,  லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு தனது பாவகத்துடன் தொடர்பு பெற்றும் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதற்கு யோகம் பெற்றவர் எனலாம், தங்களது ஜாதக வலிமை நிலை மிகவும் அபரிவிதமாக உள்ளது தெளிவாகிறது, பெரும்பாலான பாவகங்கள் தங்களுக்கு மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, தொழிலை குறிக்கும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம், இது தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு உகந்த அமைப்பாகும், எனவே தங்கள் சுய தொழில் செய்ய வல்லமை உடையவர் எனலாம்.

மேலும் தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு வலிமை சேர்க்கும் பாவகங்களான லக்கினம் எனும் முதல் வீடு வலிமை பெறுவது, தங்களின் தொழில் ஆர்வத்தையும், முழு வீச்சில் செயல்படும் தன்னம்பிக்கையும்  தெளிவு படுத்துகிறது, நான்காம் பாவகம் வலிமை பெறுவது வண்டி வாகன தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் தரும் என்பதை தெளிவு படுத்துகிறது, களத்திர ஸ்தானம் வலிமை  பெறுவது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் தொழில்  முன்னேற்றங்களை பெறுபவர் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஓர் இடத்தில் பணியாற்றுவதைவிட, சுய தொழில் செய்வதே தங்களுக்கு பொருத்தமானது என்பதை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் அபரிவிதமான  அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய லாபங்களை பெரும் யோகம் கொண்டவர் என்பது 100% சதவிகிதம் தெளிவாகிறது, மேற்கண்ட விஷயங்கள் ஒருவரது ஜாதகத்தில் சுய தொழில் செய்ய வல்லமை உள்ளவரா? என்பதை உறுதி படுத்த பயன்படும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது, சிறந்த  வியாபார நுணுக்கம் பெற்றவர் என்பதும் செய்யும் தொழிலில் நல்ல விருத்தியை  பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, சரியான திடடமிடுதல்களுடன் தனது தொழிலினை முன்னேற்ற பாதையில் நடத்திச்செல்லும், தன்மை பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, பூர்வ  புண்ணியம் வலிமை பெறுவது தங்களின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, சத்ரு ஸ்தானம் வலிமை  பெறுவது தொழில் முறை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், எதிரிகளின் வழியில் நன்மையை அனுபவிக்கும் யோகம் பெற்றவர் என்பதனையும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நற்பெயரும், பிரபல்யமும் வழங்கும் என்பது உறுதியாகிறது.

தங்களது சுய ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு முழு தகுதி கொண்டதாக இருப்பதால் 100% சதவிகிதம் தங்கள் சுய தொழில் செய்வதே சாலசிறந்து, ஓர் இடத்தில் பணியாற்ற உகந்தது அல்ல என்பதை ஜோதிடதீபம் தெளிவுற விளக்கம்  தர கடமைப்பட்டுள்ளது, அடுத்து சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தும் இதற்க்கு முன் செய்த தொழில் பெரும் நஷ்டத்தை வழங்கியதற்கு இரண்டு காரணங்களை சொல்லாம்,

1) தாங்கள்  தொழில் துவங்கிய நேரத்தில் தங்களுக்கு நடைபெற்ற சந்திரன் திசை  2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, இதன் காரணமாகவே தாங்கள் செய்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியம் அல்ல, நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டும் அதற்குண்டான யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு மற்றும் குரு திசையும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும்  தர தயாராக உள்ளதால், இதுவே தாங்கள் சுய தொழில் செய்ய சரியான நேரம் எனலாம்.

2) தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், தங்கள் இதற்க்கு  முன் துவங்கிய தொழில் தங்களது பூர்வீகத்தில் இல்லமால், வெகு தொலைவு சென்று வேறு மாவட்டத்தில் ஆரம்பித்தது தவறு, சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் தனது பூர்வீகத்திர்க்கு உற்ப்பட்ட இடத்திலேயே நிர்வகிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும், தங்களுக்கு நடந்த சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தாராததும், செய்யும் தொழில் பூர்வீகத்தில் அமையாததும் மட்டுமே தங்களுக்கு திடீர் பேரிழப்பை தந்தது என்று தெளிவுற சொல்லலாம், இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் நன்மை பெறுக.

சுய தொழில் செய்ய தகுதி உள்ள ஜாதகம் என்ற போதிலும், தங்களது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு வாக்கு வழியில் இன்னல்களையும், வரும் வருமானத்தை வீண் செலவு செய்யும் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது, 8ம் பாவகம் பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி முதலீடு செய்வது உகந்தது அல்ல, தங்களின்  கட்டுப்பாட்டில் அனைத்தையும் நிர்வகிப்பதே சாலசிறந்தது, மேற்க்கண்ட இரண்டு விஷயங்களிலும் தங்கள் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தவிர்ப்பது நலம் தரும், வண்டி வாகனம் மற்றும் கட்டுமான துறை தங்களுக்கு அளவில்லா தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக