செவ்வாய், 1 நவம்பர், 2016

பெண்கள் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமையும் திருமண தடைகளும் !



சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது, இதில் ஆண் பெண் வேறுபாடுகள் எதுவும் இல்லை எனலாம், இருப்பினும் பெண்களின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையயை நிர்ணயம் செய்யும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும்  7ம் பாவகமும் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகிக்கு உகந்தது அல்ல, மறைவு ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடைகளையும் வெகு தாமாதத்தையும் வழங்கும், மேலும் தாமதமாக திருமணம் நடைபெற்றாலும், இல்லற வாழ்க்கையில் தொல்லைகளையும் துன்பங்களையும் தரும், மன வாழ்க்கையில் பிரிவு, தம்பதியர் ஒற்றுமை இன்மை, பொருளாதார சிக்கல்கள், உறவுகள் ஆதரவின்மை சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கே தடைகல்லாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி பெரிய அளவில் போராடும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட பாதிப்புகள் ஆணின் ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்கும் வழி உண்டு, ஆனால் பெண்களின் ஜாதகத்தில் இருப்பின் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்புவது என்பது இயலாத காரியம், ஜாதக வலிமை இன்மை பெண்களின் மன பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 41 முடிவடைந்து விட்டது, இதுவரை திருமணத்திற்கு எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவின, ஜாதகிக்கு வரும் வரன்கள் யாவும் ஏதாவது ஒரு வழியில் தட்டி சென்றது, திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை சந்தித்தது, எவ்வித பரிகாரமும் பலன் தரவில்லை, இதற்கு காரணம் என்ன? என்பதை அவரது ஜாதக ரீதியாக ஆய்வு செய்வோம் அன்பர்களே.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் குடும்பம்,களத்திரம் மற்றும் விறையம் என்று அழைக்கப்படும் 2,7,12 ம் வீடுகளாகும், மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் பெரும் தொடர்பை ஆய்வு செய்வோம் அன்பர்களே, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2) ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், 12ம் வீடு விறைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதி இழப்பையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற நிலையையும் தரும் அமைப்பாகும்.

3) மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகிக்கு இருந்த போதிலும் திருமண வயதில் ( 18 முதல் 27 வயது வரை ) நடைமுறையில் இருந்த திசை வழங்கிய பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகிக்கு ( 08/08/1989 முதல் 08/08/2009 வரை ) நடைபெற்றது சுக்கிரன் திசை, இந்த சுக்கிரன் திசை 2௦ வருடமும்  ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி உள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய சுக்கிரன் திசை ஜாதகிக்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பை சிறிதும் வழங்கவில்லை, நடைபெற்றது சுக்கிரன் திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் ஜாதகிக்கு, திருமண வாழ்க்கை அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

4) சுக்கிரன் திசைக்கு பிறகு நடைபெற்ற சூரியன் திசை 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே தொடர்பு பெற்று பலனை நடத்தியது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல யோகத்தை மட்டும் தந்தது இல்லற வாழ்க்கை சார்ந்த யாதொரு நன்மையையும் தர வில்லை, தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகிக்கு விறைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு உகந்தது அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு, நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையையும் தெளிவாக தெரிந்துகொண்டு, இல்லற வாழ்க்கையினை அமைத்து கொள்வதே சால சிறந்தது, மேற்கண்ட ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கு முன் உரிமை தாராமல், தனக்கு வரும் கணவரின் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஓர் வரனை சரியான வயதில் தேர்வு செய்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை, ஜாதகி உணர்ந்து செயல்பட்டு இருப்பின், திருமணம் தாமதம் ஆகியிருக்க வாய்ப்பில்லை, இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இருக்கும், மாறாக ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கும், கற்பனை வாழ்க்கை துணைக்கும் முன்னுரிமை தந்ததால், பெண்களுக்கு சரியான வயதில் நிகழ வேண்டிய திருமண வாழ்க்கை இந்த பெண்ணிற்கு இதுவரை நிகழவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

திருமண வாழ்க்கை பொறுத்தவரை வரனோ, வதுவோ தமது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே இல்லற வாழ்க்கையை தேர்வு செய்வது அவசியமாகிறது, இல்லை எனில் இல்லற வாழ்க்கையில் வரும் மன கசப்பையும், பிரிவையும் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக