பின்தொடர...

Friday, August 10, 2018

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )


சுய ஜாதக ஆலோசணை


லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், எடுக்கும் முடிவுகள் ஸ்திர தன்மையுடன் உறுதியாக அமையும் அமைப்பு, உடல் நலம், மனநலம் சிறப்பாக அமையும் தன்மை, எதிர்பாராத நன்மைகள் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மை, நம்பிக்கை லட்சியம் போன்றவை மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, எதையும் சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் யோகம், சுய முன்னேற்றம் பெறுவதில் ஆர்வம், முற்போக்கு கருத்துக்களை ஆமோதித்தல், புதிய சிந்தனை மற்றும் புதிய வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, சுய ஆளுமை திறனுடன் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை பெரும் யோகம்,  சுய முயற்சியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகி தேடி பெரும் யோகம் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் பிரகாசமான எதிர்காலத்தை தருவதுடன், கலைகளில் தேர்ச்சியை தரும், நாடகம், திரைத்துறையில் புகழ் உண்டாகும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ணமாக உண்டாகும், விளையாட்டில் ஆர்வம், வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், அதீத கலைஆர்வம், இசையில் ஈடுபாடு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சுய அறிவு திறன் ஜாதகிக்கு பன்மடங்கு தொழில் விருத்தியையும், சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகிக்கு பெருமை மிக்க யோக வாழ்க்கையை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து  ஜாதகி பெருந்தன்மை மிக்க குணம் கொண்டவராக திகழ்வதுடன், அதீத அறிவு திறன் உள்ளவராக விளங்குவர், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரியோர் அறிவுரையின் படி நடப்பதன் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை பெறுவார், எதையும் பகுத்தறியும் தன்மை பெற்றவராக இருப்பர், ஜாதகியின் முன்னோர் செய்த புண்ணியத்தின் பலாபலன் ஜாதகிக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகிக்கு வெகுவான சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, நிறைந்த நல்லறிவு ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு தெளிந்த மனப்பான்மையும், பயமற்ற மனோநிலையையும் தரும், அதிர்ஷ்டகரமான நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை பெறுவார், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை பெற்று தரும், அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதால் ஜாதகியின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக திகழும், அரசு துறை அல்லது அரசியல்வாதிகள் மூலம்  அபரிவித லாபங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, நீடித்த அதிர்ஷ்டம் உள்ளதால் வாழ்க்கையில் தான் நினைத்ததை அடையும் யோகம் உண்டு என்பதுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாமத திருமணம் என்ற போதிலும், தனம் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டு, பொருளாதார தன்னிறைவு ஏற்படும், குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும், போட்டி, பந்தயம், தேர்வுகளில் அபரிவித வெற்றி உண்டு, மற்றவர்களிடம் கவனமாக பேசுவது அவசியமாகிறது, மருந்துகள் மூலம் லாபம் வருமானம் உண்டு, பண்ணை தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத  நன்மைகளும் வெகுவான முன்னேற்றங்களும் உண்டாகும்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை தரும், நுண்ணறிவு ஞாபக சக்தி குறைபாட்டை தரும், வண்டி வாகன பாதிப்பு, திடீர் இழப்பும் ஏற்படும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் திடீர் இழப்பை சந்திக்கக்கூடும், குணநலம் சார்ந்த பாதிப்பு உண்டாகும், தகப்பனாருக்கு வெகுவான பாதிப்பை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் இன்னல்கள் அதிகரிக்கும், உறவுகள் வழியிலான துன்பங்கள் வெகுவான பாதிப்பையும் அமைதியின்மையையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அடிப்படையில் மனநிம்மதி குறையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள் உண்டாகும், அறிவில் விழிப்புணர்வு வெகுவாக குறையும், மனஅழுத்தம், மனப்போராட்டம் அதிகரிக்கும், திருப்தி இல்லாத தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் அளவிற்கு அதிகமான போராட்டங்களை வாரி வழங்கும் என்பதால், எதையும் பலமுறை சிந்தனை செய்து செயல்படுவது சகல சௌபாக்கியங்களையும் பெற வழிவகை அமைத்து தரும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தானே சரியான தீர்வுகளை எடுப்பது சிறந்ததாக அமையும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து வெற்றியும், அதிர்ஷ்டமும் கொண்டவர் என்பதை உறுதி செய்யும், தான் மேற்கொள்ளும் காரியங்கள், முயற்சிக்கும் செயல்களில் முழு அளவிலான வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர், செல்வச்செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல சிந்தனை, சிறந்த மனநிலை, உண்மை சத்தியத்தை மதித்தல், சாகசம் செய்வதில் ஆர்வம், துணிந்து எதையும் செய்யும் வல்லமை, பயணங்களில் விருப்பம், வெளியூர் வெளிநாடுகள் சென்று வரும் வாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம், எழுத்து துறை, கலைத்துறையில் வெற்றியை தரும், சகோதர வழி ஆதரவு உண்டு அல்லது அது சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் அல்லது விருப்ப திருமணம் அமையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஜாதகி தேர்வு செய்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை தரும் தன்மையை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை பெறுவார், இல்லற வாழ்க்கையில் மனமொத்த தம்பதிகளாக திகழும் யோகமுண்டு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எனவே திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் முன் ஜாதகி சரியான முடிவுகளை மேற்கொண்டு  நலம் பெறுவது  அவசியமாகிறது, ஜாதகிக்கு அமையும் கணவர் நல்லவர் என்பது கவனிக்கத்தக்கது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள் உண்டாகும், முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், கடன் மற்றும் எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்புகள் ஜாதகிக்கு சற்று கடினமாகவே அமைய கூடும், தெளிவற்ற  முடிவுகளால் ஜாதகி பெருவாரியான பாதிப்புகளை அனுபவிக்க நேரும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்ப்புறவை பேணுவது சகல சௌபாக்கியங்களையும் தரும், வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவு என்பதால் வருமுன் காப்பது அவசியமாகிறது, அதிக அளவிலான செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துக்கொள்வது நன்மையை தரும், கணவருக்கு பொருளாதார வெற்றியை நல்கும்.

 10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் விருத்தியை தரும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜீவனம் மூலம் நல்ல வெற்றி உண்டாகும், இருப்பினும் தாய் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும்,  சுய தொழில் முயற்சிகள் பேரிழப்பை தரக்கூடும், மற்றவர்களால் கவுரவ குறைவு உண்டாகும் என்பதால் அதிக கவனம் தேவை , மக்கள் ஆதரவும் ஜீவன மேன்மையும்  ஜாதகிக்கு தேடிவரும், வாழ்நாள் முழுவதுமான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், கவுரவம் அந்தஸ்து சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் வெகு கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, தெய்வீக அனுகிரகம் மூலம் ஜாதகிக்கு செல்வவளம் அதிகரிக்கும், தொழில் வழியிலான தனித்திறமை கொண்டவராக விளங்குவார் என்ற போதிலும் சுய தொழில் வழியில் மிகப்பெரிய இழப்புகளையே தரும், மிகுந்த பொறுப்புணர்வு கடமையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ சிகிக்சை, அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, தலைவலி, கண்பாதிப்பு உடல்நலம் சார்ந்த தொல்லைகள் என்ற வகையில் வெகுவான பாதிப்பை தரும், வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில் ஜாதகியின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை தவிர்க்க இயலாது என்பதுடன் விவாகரத்து அல்லது வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.


நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/05/2005 முதல் 21/05/2025    வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, இது ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு, எதிரி தொல்லை, தீய சக்தி பாதிப்பு போன்ற இன்னல்களை வாரி வழங்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் தன்மையை தருவதுடன், எதிரியின் சதியில் இன்னலுறும் தன்மையை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, உடல் நலம் மன நலம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தி 2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு கடும் நெருக்கடிகளை தரும், அனைவரிடமும் மிகவும் கவனமாக இருப்பதுடன் வார்த்தைகளில் அதீத கவனம் செலுத்துவதும், இனிமையான பேச்சும் ஜாதகிக்கு நன்மையை தரும், தனது வாழ்க்கை சார்ந்த முடிவுகளை மிக கவனமாக மேற்கொள்வதும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது, குணநலன் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை, நிம்மதியற்ற மனமும், சரியான தீர்வுகளை காண இயலாத தன்மையும் சுக்கிரனை புத்தி தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை, பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசையில் சனி புத்தி ஜாதகிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும் என்பதால், திட்டமிட்டு செயலாற்றி நலம் பெறுவது அவசியமாகிறது.

எதிர்வரும் குரு திசை தரும் பலன்கள் : ( 21/05/2025 முதல் 21/05/2031 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி  வழங்குவது வரவேற்கத்தக்கது, ஜாதகியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதுடன், திருமணம், தொழில், குழந்தைகள் பொருளாதாரம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்,அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகிக்கு சூரியன் திசையிலேயே பரிபூர்ணமாக கிடைக்கும்.

பரிகாரம் :

1) திருவக்கரை வளர்பிறை சனி கிழமை  சென்று சனி பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
2) குலதெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறுக.
3) வருடம் ஒருமுறை பழனி சென்று வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
4) சர்ப்ப சாந்தி பரிகாரம் கால ஹஸ்த்தி சென்று முறையாக செய்து பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம்.
5) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696