Sunday, July 29, 2018

சுய ஜாதக ஆலோசணை : குரு திசை தரும் பலன் என்ன? எதிர்வரும் சனி திசை யோக வாழ்க்கையை தருமா? நவகிரகங்கள்  தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனையே ஏற்று நடத்தும், தனிப்பட்ட ஆளுமையுடன் ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை நிலை, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த கிரகத்தின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் நடைபெற்றாலும் சரி, அது சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பின் தன்மையை உணர்ந்து பலன் காண முற்படுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை எடுத்துரைக்க வழிவகுக்கும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவாகங்கள் தொடர்பு பெரும் தன்மையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் பற்றியும், அது தரும் நன்மை தீமை யோக அவயோக நிலை பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு தூர பிரயாணம் மூலம் லாபம், நல்லறிவு,  தெய்வீக சிந்தனை, மனோதத்துவ அனுபவம், ஆன்மீக ஈடுபாடு, அறிவுத்திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறுதல், உறவுகள் வழியிலான ஆதரவு, பெரியோர் மற்றும் ஆன்மீக அன்பர்களின் ஆசியை பெறுதல், சிந்தனையும் செயல்பாடும் ஜாதகருக்கு சிறப்பாக அமையும் தன்மை, எதிர்ப்புகளை இறை அருளின் கருணையின் மூலம் வெற்றி கொள்ளும் யோகம், புதுவித அணுகுமுறை, புதிய சிந்தனை, சிறந்த கல்வி மற்றும் அனுபவ அறிவு, நன்மைகள் ஜாதகருக்கு தேடி வரும் வாய்ப்பு, எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு நலம் பெரும் தன்மை, அனைவரின்  நன்மதிப்பை பெறுதல் என்ற வகையிலும், பரந்த மனப்பக்குவம், மனதில் நினைத்தைதை சாதிக்கும் யோகம், ஸ்திரமான மன நிலை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவாளி, பயனவிரும்பி, தொலைதூர பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, புகழ் மிக்க கோவில்கள், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், ஆன்மீக பெரியோரின் ஆசியை பெரும் தன்மை, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் என்ற வகையிலும், ஆய்வு கல்வி அல்லது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதர வசதியை பெரும் தன்மை, பெரியோரின் வார்த்தைகளை மதிக்கும் தன்மை, பித்ருக்கள் ஆசியின் மூலம் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெரும் யோக அமைப்பு, நல்லறிவு செய்யும் தொழில் வழியிலான நுணுக்கங்கள், திட்டமிட்டு  வெற்றியடையும் யோகம் அனைவரிடமும் நற்ப்பெயர் எடுக்கும் வல்லமை ஒழுக்கம், கட்டுப்பாடு, சுய அறிவு திறன் என்ற வகையில் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு ஆகும் ஜாதகருக்கு 2,8ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான யோக வாழ்க்கை தேடிவரும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம்  நண்பர்கள் ஆதரவு, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான வருமானம் , பொருளாதர வழியிலான அபரிவித வளர்ச்சி, தொடர்ச்சியான வருமான வாய்ப்புகள், அதிர்ஷ்டகரமான வாழ்க்கை முறை, வாக்கு சாதுர்யம், மண் மனை வண்டி வாகனம் மூலம் நல்ல வருமானம், புதிய சிந்தனைகள் மூலம் பொருளாதர தன்னிறைவை பெரும் யோகம் , திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை  வழியிலான வருமானம் மற்றும் பொருளாதார உதவிகள், இனிமையான இல்லற வாழ்க்கை, தனது வாழ்க்கைக்கு உகந்த செயல்களை செய்து முன்னேற்றம் பெரும் தன்மை, வாக்கு பலிதம், தெய்வீக அனுக்கிரகம் மூலம் வரும் பொருளாதார சேர்க்கை,  நேர்மையான முறையில் ஜீவன முன்னேற்றம் பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு  புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், ஜாதகரின் மனதின் ஆசைகள் யாவும் நிறைவேறும், நல்ல எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு சிறப்பினை தரும், வாழ்க்கை துணை வழியிலான பெரும் தனசேர்கை உண்டாகும், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமையும், வழக்கு, போட்டி, பந்தையங்களில் வெற்றியை தரும், போனஸ் பங்கு  வர்த்தகத்தில் வருமானம் உண்டு, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் மூலம் தனசேர்க்கையை தரும், வெளிநாடுகளில் இருந்துவரும் பொருளாதார உதவிகள் ஜாதகருக்கு சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், திருப்தியான மனம் உண்டு, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க முன்னேற்றத்தை தரும், பொது வாழ்க்கையில்  பிரகாசிக்கும் யோகம் உண்டு, ஜாதகரின் 11ம்  பாவகம் சர மண் தத்துவத்தில் 15 பாகைகளையும், ஸ்திர காற்று தத்துவத்தில் 16 பாகைகளையும் கொண்டிருப்பது  ஜாதகருக்கான கவுரவம் அந்தஸ்துடன் கூடி அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக தரும் என்பதை மறுப்பதற்க்கு வாய்ப்பில்லை, ஜாதகரின் நேர்மையான நடவடிக்கைகளும், அறிவார்ந்த செயல்பாடுகளும், பொறுமை மிக்க குணாதிசயமும் லாப திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கும் ஆயுள் பாவக  வழியில் இருந்து சுபயோகங்களை தருவதுடன், நீண்ட ஆயுளையும் வாரி  வழங்கும், தன் வாழ்நாள் முழுவதும் சுபயோகங்களை எதிர்பாராமல் சந்திக்கும் வல்லமை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4,5,6,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சிறந்த கல்வி அறிவு, வழக்குகள் மூலம் சொத்து கிடைக்கும் வாய்ப்பு, சிறந்த குடும்பஸ்தராக விளங்கும் தன்மை, தேர்வு தேர்தலில் வெற்றி, தொழில் துறையில் அதீத ஈடுபாடு, பணியாளர்களுடன் நட்புறவு, எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, உடல் நல  பாதிப்பு, பண்ணை தொழில் அல்லது விவசாயம் ஜாதகருக்கு சிறப்பை தரும், துணி வகை சார்ந்த தொழில் வழியில் நல்ல முன்னேற்றம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்பபடும், பண்ணை தொழில் ஜாதகருக்கு அபரிவித   வளர்ச்சியை வாரி வழங்கும், அரசியலில் நல்ல லாபமும், எதிர்பாராத பதவியும் தேடி வரும், சுகபோக யோக வாழ்க்கையை அனுபவிக்க தடையேதும் இருக்காது.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்பை நல்கும், சூது மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும், பங்கு சந்தை தரகு தொழில் வழியில் நல்ல வருமானம் உண்டு, தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ வசியம் மூலம் நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றிகொள்ளும் தன்மையை தரும், ஜாதகரின் புத்திசாலித்தனம் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , சமயோசித அறிவு திறன் ஜாதகருக்கு நீண்ட நாள் பொருளாதர வசதி வாய்ப்பை நல்கும், புதுமை மற்றும் புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், நல்ல குழந்தைகள், அவர்கள் வழியிலான யோக வாழ்க்கை என்ற வகையிலும், மகிழ்ச்சி மிக்க குடும்ப வாழ்க்கை என்ற வகையிலும் நன்மைகளை வாரி வழங்கும்.

6 ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல்நல குறைவை தருவதுடன் கடன்சார்ந்த இன்னல்களை தரக்கூடும் இருப்பினும் பொருளாதரா தன்னிறைவை தரும் மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம் உண்டு, எதிர்ப்புகள் பெரிய அளவில் வந்த போதிலும் அதனை மிக எளிதாக வெற்றிகொள்ளும் சூட்ஷமம் அறிந்தவராக திகழ்வார், போட்டி பந்தயம், தேர்தலில் வெற்றியை தரும், அதிகார பதவியை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், வழக்குகளில் வெற்றி உண்டு, சிறந்த உழைப்பாளி, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவரும் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கேட்க்கும் இடத்தில் இருந்து கடன் கிடைக்கும், இருப்பினும் சிறந்த நிதி நிர்வாக திறனை வளர்த்துக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

11ம் பாவக வழியில் இருந்து தேர்தல், போட்டி பந்தயங்களில் வியக்கத்தக்க வெற்றியை  தரும், வேலையாட்கள் மூலம் அபரிவித வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தன்னிலை உணர்வும், எச்சரிக்கை மனப்பான்மையும் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக தடுக்கும், எதிரிகளின் வழியிலான லாபம் அதிகரிக்கும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை வெகுவாக வாரி வழங்கும், வருமுன் உணரும் சக்தி உண்டு என்பதால் ஜாதகர் சிறப்பான நன்மைகளை தொடர்ந்து  பெறுவார், நல்ல யோகமிக்க பணியாளர்கள் அமைவார்கள், அவர்களின் உண்மையான உழைப்பு ஜாதகருக்கு மிகப்பெரிய தனசேர்க்கையை வாரி வழங்கும், வாழ்க்கையை மிக சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிர்பாராத கவுரவ குறைவை தரக்கூடும், மற்றவர்களின் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், தொழில் வழியில் மிகுந்த சிரமத்தை தரும், சுய தொழில் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், அதிக வேலைப்பளு, திருப்தி இல்லாதா மனநிலை, தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் பின்னடைவு, சரியான முடிவு மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, எதிர்பாராத ஏமாற்றங்கள், பதவியில் இருந்து திடீர் இழப்பு என்ற வகையில் இன்னல்களை தருவதுடன் அந்தஸ்தை வெகுவாக குறைக்கும், சரியான திட்டமிடுதல் இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கையில் முரண்பட்ட நிகழ்வுகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக ஜாதகர் எதிர்பாலின அமைப்பினரிடம்  எச்சரிக்கை உடன் பழகுவதுடன், வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஏற்பது நன்மையை தரும், மேலும் தொழில் வழியிலான இன்னல்களுக்கு உடனடி தீர்வை நாடுவது நன்மையை தரும்.

3,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மருந்து, மருத்துவ உபகரணம் மூலம் அபரிவித லாபம் உண்டாகும், விட்டுக்கொடுக்கும் தன்மை, எதிர்ப்புகளை சமாளிக்கும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தந்த போதிலும் ஜாதகரின் முயற்சி இன்மை வெகுவான தாமதத்தை தரும், முயற்சிக்கும் காரியங்களும்  சிலநேரங்களில் தோல்வியை தரக்கூடும், வேற்று இனம், வேற்று மதத்தினர் மூலம் நல்ல லாபங்கள் உண்டாகும், ரகசிய காதல், சட்டம் மூலம் ஆதாயம், புதிய  அறிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, உண்மை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் யோகம் உண்டாகும், சகோதர வழி ஆதரவு இன்மையும், வீரியமிக்க செயல்திறனில் பாதிப்பையும் தரும் என்பதால், ஜாதகர் அதீத விழிப்புணர்வுடன் செயல்படுவது சகல நன்மைகளையும் தரும்.

7 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டளிகள் நண்பர்கள் வழியிலான பொருளாதார முன்னேற்றம் பெறுவார் என்ற போதிலும் இறுதியில் மனக்கசப்பை தரும், கூட்டு முயற்சி ஜாதகருக்கு வீண் விரயத்தை தரும், நல்ல நண்பர்கள் அமைவது அரிது, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து தனசேர்க்கை உண்டு என்ற போதிலும், ஜீவனம் செய்ய உகந்ததாக அமையாது, அனைத்து காரியங்களையும் ஜாதகர் ரகசியமாக மேற்கொள்வதே சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்யவில்லை எனில் விவாகரத்து செய்யும் சூழ்நிலையை தரும், அரசியலில் திடீர் சிக்கல்களை தரும், தனிப்பட்ட முயற்சிகள் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தரும், வெகுவான துன்பங்களையும், தொல்லைகளையும் ஜாதகர் எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்பதை மனதில் வைத்து செயலாற்றுவது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை உண்டாகும், மன நிம்மதி மன அழுத்தம் இரண்டும் வெகுவாக ஜாதகரை பாதிக்கும், திடீர் இழப்புகள் ஜாதகருக்கு பொருளாதார நெருக்கடிகளை தரும், நிறைய வீண் செலவினங்களை தரும், பங்கு சந்தை முதலீடுகள் வெகுவாக பாதிக்கும், சூது மூலம்  அனைத்தையும் இழக்கும் தன்மையை தரும், எதிர்பாராத விபத்து ஜாதகரின் வாழ்க்கையையே கடுமையாக பாதிக்கும் என்பதால், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், தாம்பத்திய வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்வது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும், பிடிவாதம், முரட்டுத்தனம் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதுடன் மனஅழுத்தத்தை அதிகரிக்கும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதம் ஜாதகருக்கு மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 20/02/2012 முதல் 20/02/2028 வரை  )

ஜாதகருக்கு குரு பகவான் தனது திசையில் 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 1,2,8,9ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும் விஷயமாகும், குறிப்பாக 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க  நன்மைகளை வாரி வழங்கும், வருமானம் பொருளாதாரம் உயரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமாக அமையும், குரு திசையில் தற்போழுது நடைபெறும் புதன் புத்தி  ஜாதகருக்கு ( 26/01/2019 வரை ) 8,12ம் பாவக தொடர்பை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை 3,7,10,12ம் வீடுகள் வழியில் இருந்து தரும் என்பதால் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு  அதிக அளவில் உள்ளது, எதிர்வரும் கேது புத்தி ( 02/01/2020 வரை ) 4,6ம் வீடுகள் சத்ரு  ஸ்தானமான 6ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஓரளவிற்கு நன்மையை தரும், அதன் பிறகு வரும் சுக்கிரன் புத்தி ( 02/09/2022 வரை ) ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 4,6ம் வீடுகள் சத்ரு  ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்கது, எனவே குரு திசையில் எதிர்வரும் புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புள்ள வீடுகளின் பலாபலன்களை தருவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை தரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலன்கள் : ( 20/02/2028 முதல் 19/02/2047 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் சனி திசை தனது திசையில் 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 2,8ம் வீடுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும் யோக வாழ்க்கையையும் 100% விகிதம் தருவது வரவேற்கத்தக்கது, எதிர்வரும் சனி திசையில் ஜாதகர் பொருளாதர ரீதியாகவும், குடும்ப வாழ்க்கையிலும் நீடித்த அதிர்ஷ்டங்களை பெற்று பெருவாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும் என்பதுடன் இதுவரை இல்லாத முன்னேற்றங்களும், சொத்து சுக சேர்க்கை வண்டிவாகன யோகம், வீடு மனை இடம் ஆகியவற்றை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் பேச்சு திறன் பன்மடங்கு லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், 8ம் பாவக வழியில் இருந்து வரும் திடீர் அதிஷ்டம் ஜாதகருக்கான  யோக வாழ்க்கையை உறுதி செய்யும், வாழ்க்கை துணை வழியிலான அதிர்ஷ்டம், முன்னேற்றம் ஆகிவை பொருளாதர ரீதியாக வந்து சேரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகரின் வாழ்க்கை சனி திசையில் செல்வச்செழிப்புடன் திகழும், நீண்ட ஆயுள் உண்டு என்பதால் ஜாதகரின் வாழ்க்கை சுபயோகங்கள் நிறைந்ததாக விளங்கும்.

குறிப்பு :

ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் யோக வாழ்க்கையே தருகின்றது என்பதால் எதிர்காலம் மிகவும் யோகமிக்கதாக காணப்படுகிறது, எனவே ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment