செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஜோதிட ஆலோசனை : கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக ஜாதக நிலை !



கேள்வி :

எனது சுய ஜாதக ரீதியாக சுய தொழில் தனியாக செய்யலாமா ? கூட்டாக செய்யலாமா ? வாழ்க்கையில் தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டா ?

பதில் :

தங்களுடைய ஜாதக அமைப்பில் களத்திரம் , மற்றும் பூர்வ புண்ணியம் இரண்டும் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது இருப்பினும் அது உபய தத்துவமாக இருப்பதால் அதிக நன்மை இல்லை என்பதே உண்மை , மேலும்  கூட்டு தொழில் மூலம் வரும் வருமானத்தை குறிக்கும் 8 ம் பாவகம்  8 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது 100 சதவிகித தீமையான பலனை தரும் , அதாவது கூட்டு தொழில் மூலம் வரும் வருமானம் அனைத்தும் ஒருநாள் இழக்கும் சூழ்நிலையை ஏற்ப்படலாம், எனவே கூட்டு தொழில் செய்யும் பொழுது பண விஷயத்தில் அதிக கவனம் தேவை ,  தங்களுடைய ஜாதக அமைப்பில் லக்கினம் மட்டும் தொழில் ஸ்தானம் இரண்டும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் கூட்டு தொழில் செய்வதை விட , தனித்து தொழில் செய்வது அபரிவிதமான வெற்றியை தரும் , கூட்டு தொழில் 33 சதவிகிதம் மட்டுமே நன்மை செய்யும் , தனித்து சுய தொழில் செய்வது 66 சதவிகிதம் யோக பலனை செய்யும் என்பது தங்களது ஜாதக அமைப்பில் உள்ள ஒரு சிறப்பான யோக நிலை , எனவே தனியாக தொழில் செய்வதே தங்களுக்கு அதிக  நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் வெற்றி பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம் பெற வேண்டுமெனில் சுய ஜாதக அமைப்பில் , களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடும் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , இதில் களத்திர பாவகம், ஜாதகரின் தொழில் முறை கூட்டாளியின் தன்மையையும், ஜாதகருக்கு தொழில் முறை கூட்டாளியால் கிடைக்கும் ஆதரவினை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் , மேலும் கூட்டாளி ஜாதகருடன் எப்படிபட்ட உறவினை கையாளுவார் என்பது களத்திர பாவக வழியில் இருந்து துல்லியாமாக தெரிந்து கொள்ள இயலும் , ஜாதகருடன் கூட்டு சேரும்பொழுது எவ்விதத்தில் தொழில் முதலீடு செய்வார் ( அதாவது பொருளாதார உதவியா? அறிவு வழியில் உதவியா? சொத்து அமைப்பில் உதவியா ? ) என்பதை தெரிந்து கொள்ளவும் களத்திர பாவகத்தின் நிலையை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் .

ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் , இதில் களத்திர பாவகம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது மிகசிறந்த யோகபலனை வாரிவழங்கும் , குறிப்பாக மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியாக அமைவது மிகப்பெரிய வெற்றிகளை தரும் , மேலும் இந்த ராசிகள் ஜாதகருக்கு 11 ம் வீடாக வருவது மிகவும் சிறப்பான விஷயம். இந்த அமைப்பில் ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று , அது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து விட்டால்  ஜாதகரின் கூட்டு தொழில் 
நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிட வாய்ப்பு உண்டு , இந்த அமைப்பை பெற்றவர்கள் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் பக்கம் தலை வைத்தும் கூட படுக்க கூடாது , இந்த அமைப்பு மேற்கண்ட சர லக்கினத்தை பிறப்பு லக்கினமாக கொண்டவர்களுக்கே பொருந்தும் , அதாவது மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியை இலக்கணமாக கொண்டவர்களுக்கு , களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது எக்காரணத்தை கொண்டும் ஜாதகருக்கு கூட்டு தொழில் ஆகவே ஆகாது , தனித்து தொழில் செய்வதே சாலசிறந்தது .

எந்த ஒரு இலக்கின அமைப்பை சார்ந்தவராக இருந்தாலும் களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் , அந்த ஜாதகர் கூட்டு தொழிலுக்கு ஏற்றவர் அல்ல , மேலும் இவருடன் கூட்டு தொழில் செய்பவரையும் இது பாதிக்கும் , தொழில் பின்னடைவை விரைவில் சந்திக்க வேண்டிவரும் , மேலும் சுய ஜாதகத்தில் இந்த நிலையை பெற்றவர்கள் கூட்டு தொழில் செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு தண்ணீர் இல்லா கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது. இதில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் முதலீடு செய்த தொகை திரும்ப கிடைக்கலாம் , ஒருவேளை பூர்வ புண்ணியமும் பாதிக்க பட்டிருந்தால் முதலீடு செய்த தொகை நிச்சயம் 100 சதவிகிதம் கிடைக்க வாய்ப்பே இல்லை, எனவே கூட்டு தொழில் செய்யுமுன்னர் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை தெளிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது அதிக நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் யோகமான வாழ்க்கையினை பெரும் அமைப்புள்ள ஜாதக நிலை :

சுய ஜாதக அமைப்பில் நண்பர்கள் கூட்டாளிகளை குறிக்கும், களத்திர பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , களத்திர பாவகத்திர்க்கு இரண்டாம் வீடான ௮ ம் வீடு ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வருமானத்தை குறிக்கும் , களத்திர பாவகத்திர்க்கு பதினொன்றாம் வீடான பூர்வ புண்ணியம் எனும் 5 ம் வீடு நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் தனது நண்பர்கள் , மற்றும் கூட்டாளிகள் மூலம் அடையும் நன்மை மற்றும் லாபத்தை குறிக்கும் , ஒரு ஜாதக அமைப்பில் மேற்கண்ட மூன்று பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் துணிந்து கூட்டு தொழில் செய்யலாம் , இதனால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் கூட்டு தொழில் மூலம் யோகமான பலனே நிச்சயம் நடக்கும் .

மேற்கண்ட பாவகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் சர ராசிகளுடனோ , ஸ்திர ராசிகளுடனோ தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , உபய ராசிகளுடன் தொடர்பு பெறுவது சராசரியான தொழில் வளர்ச்சியினை மட்டுமே தரும் , ஆனால் இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது .

சுய ஜாதக நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு கூட்டு தொழில் செய்து வெற்றி பெறுங்கள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


சனி, 25 ஆகஸ்ட், 2012

சுய ஜாதக அமைப்பில் கேந்திர பாவகங்கள் வழங்கும் யோக பலன்கள் !

 


பொதுவாக கேந்திர பாவகங்கள்  எனும் லக்கினம், நான்காம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் ஆகியன சுய ஜாதக அமைப்பில் வலுவடையும் பொழுது , ஜாதகரின் வாழ்க்கை சம சீரான முன்னேற்றத்தை தந்துகொண்டே இருக்கும் , மேற்கண்ட நான்கு பாவகங்களும் ஒரு ஜாதகருக்கு நல்ல நிலையில் அமையும் பொழுது வாழ்க்கையின் வெற்றி பாதை ஜாதகருக்கு சிறு வயது முதலே நிர்ணயம் செய்து விடுகிறது .


ஜாதகருக்கு சிறு வயதில் தேவையான தாயின் அன்பும் , தகப்பனாரின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் , ஒரு குழந்தை வளரும் காலத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இயற்கையாக அமையும் , தாயின் அன்பிலும் , தகப்பனின் அன்பு கலந்த கண்டிப்பிலும் குழந்தை நல்லஉடல் ஆரோக்கியத்துடன்  ஒழுக்கமான பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும்  மேலும் அறிவு கூர்மையுடன் சிறப்பான 
வளர்ச்சியை பெறுவார்கள் ,வளரும் சூழ்நிலை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் அடிப்படை கல்வி ஜாதகருக்கு சிறப்பான கல்வி நிலையங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும் , தனது கல்விகாலங்களில் ஜாதகருக்கு எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல், நன்றாக உடல் நிலையையும் , மன நிலையையும்  பாதுகாக்கும் அறிவை இயற்கையாக ஜாதகர் பெற்றிருப்பார் , இது முதல் கேந்திரமான லக்கினம் வலுப்பெருவதானால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக நிலை .


அடிப்படை கல்வியை நிறைவு செய்தபின் ஜாதகருக்கு சரியான   உயர்நிலை தொழில் அல்லது பட்டம் சார்ந்த கல்வி சரியாக அமைய வேண்டும் எனில் 2 வது கேந்திரமான நான்காம் வீடு நல்ல நிலையில் அமைய வேண்டும் , இந்த நான்காம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உயர்நிலை கல்வி மிகவும் சிறப்பாக அமையும் , உயர்நிலை கல்வியில் எவ்வித தடையும்  இன்றி தேர்ச்சி பெரும் யோகம் உண்டாகும் , மேலும் நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , தொழில் வகையில் நல்ல முன்னேற்றமும் , சிறப்பான வேலை வாய்ப்பினை  சுயமாக ஏற்ப்படுத்தி கொள்ளும் தன்மையும் ஜாதகருக்கு யோகம் உண்டாகும் , பல தரப்பட்ட மக்களிடம் பழகும் சூழ்நிலையும் , சமுதாயத்தில் எப்படி வாழ்வது என்ற படிப்பினையும் , நல்லது எது , தீயது எது என்று பிரித்து பார்க்கும் மன பக்குவமும் ஜாதகருக்கு உண்டாகும் , ஜாதகர் வாழ்க்கையின் அடுத்த படிக்கட்டில் வெற்றிகரமாக  காலடி எடுத்து வைக்க இந்த இரண்டாவது கேந்திரமான நான்காம் வீடு வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


மக்கள் செல்வாக்கு , மக்கள் ஆதரவு , தனக்கு அமையும் இல்லற வாழ்க்கை, பொது  மக்களிடம் 
ஜனரஞ்சகமாக  பழகும் வாய்ப்பு , நல்ல நண்பர்கள் , சிறந்த தொழில் கூட்டாளிகள் , செய்யும் தொழில் வெற்றி வாய்ப்பு , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் ஆதாரவு , வாழ்க்கை துணையின் உறவு முறையில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் அதரவு , நண்பர்களின்  மூலம் தொழில் முன்னேற்றம் , கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான வெற்றி வாய்ப்பு என ஜாதகரை , வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்  இந்த மூன்றாவது கேந்திரம் , மேலும் சமுதாயத்தில் ஜாதகருக்கு நல்ல அந்தஸ்து , மதிப்பு மரியாதை அனைத்தையும் வாரி  வழங்குவது இந்த களத்திர பவகமே , எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் தன்மை இந்தபாவகம் நல்ல நிலையில் இருந்தால் நிச்சயம்  கிடைக்க பெறுவார்கள் வாழ்கையில் சொந்தம் பந்தம் , உறவு, நண்பர்கள் சொத்து சுகம் என வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பாவகம் இந்த மூன்றாவது கேந்திரமான களத்திர பாவகம் வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


ஜாதகரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதகர் செய்யும் வினை பதிவிற்கு உட்ப்பட்ட நன்மை தீமை பலன்களை வழங்குவது , ஜீவன வழியில் மிகுந்த நன்மைகளை வழங்குவது , தொழில் வளர்ச்சியினை பெற்றுத்தரும் அமைப்பு , தனது தந்தையின் வழியில் இருந்து வரும் தொழில் அமைப்புகளை நிர்வாகம் செய்யும் யோகம் , தனது தகப்பனார் வழி சொத்து சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் யோகம் , மற்றவரிடம் அடிமை ஜீவனம் செய்யாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் தன்மை , யாருடைய உதவியின்றியும்  ஜாதகர் சுயமான முன்னேற்றம் காணும் அமைப்பு , செய்யும் தொழில் படிப்படியான வளர்ச்சி , தொழில் நேர்மையாக இருந்து நல்ல பெயர்  பெரும் யோகம் , பல தொழில் செய்யும் யோகம் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து கிடைக்கும் சொத்து , பணம் ,நகை , வண்டி , வாகனம் போன்ற யோகமான பலன்களை , இந்த நான்காவது கேந்திரமான 10  ம் வீடு  வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


ஒரு நாற்காலிக்கு  நான்கு கால்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்த முடியம் அது போல் , ஒரு ஜாதக அமைப்பில் இந்த நான்கு கேந்திர பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அந்த ஜாதகர் மிகவும் சிறப்பான வாழ்க்கை அமையும் , இந்த நான்கு கேந்திரமும் நல்ல நிலையில் அமைவதை நிர்ணயம் செய்யும் ஒரே பாவகம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு மட்டுமே , மேலும் ஒரு ஜாதக அமைப்பில் கேந்திர பாவகங்கள் வலுவிழந்தாலும் , பூர்வபுண்ணியம் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் நிச்சயம் கேந்திர வீடுகளை நாம் சரி செய்துகொள்ள முடியும் , ஒருவருடைய சிறப்பான வாழ்க்கை மேற்கண்ட ஐந்து வீடுகள் தன்மையை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் , எனவே உண்மை ஜாதக நிலையை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
 9443355696

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ராகு கேது கிரகத்தின் தனித்தன்மை வாய்ந்த செயல்திறன் !




" உன்நண்பன் யார் என்று சொல் " " நான் உன்னை பற்றி சொல்கிறேன்"  என்பது முது மொழி.

 

  ஒருவரது  ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது என்று தெளிவாக தெரிந்தால்  " அவருடன் சேரும் நண்பர்கள் , உறவுகள் , தொழில் கூட்டாளிகள் , பொது மக்களுக்கும், ஜாதகருக்கும் உள்ள தொடர்புகள், இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு , வெளிநபர்களுடன் ஜாதகரின் உறவு நிலை , தனக்கு வரும் வாழ்க்கை துணையின் குணாதிசியம்"  போன்றவற்றை தெளிவாக நிர்ணயம் செய்து சொல்ல இயலும் என்பது " ஜோதிட மொழி " இதன் அடிப்படையில் ராகு கேது கிரகத்தின் அருமை மற்றும் வலிமை  நமக்கு புரியும் என்று நினைக்கிறோம்.

 

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று இறைவனை சொல்வது போல் , ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களின் உதவி இன்றி நமக்கு நல்ல பெற்றோர் , நல்ல ஆசிரியார் , நல்ல நண்பர்கள் , நல்ல உறவுகள் , மக்களிடம் நல்லுறவு மற்றும் அவர்களின் ஆதரவு போன்ற நன்மையான தொடர்புகள் அமையாது . நமக்கு அமையும் தீமையான உறவுகள் , நண்பர்கள் , இவர்களின் வழியில் இருந்து வரும் இன்னல்கள் , இழப்புகளை நிர்ணயம் செய்வது ராகு கேது என்றால் அது மிகையாகாது , குறிப்பாக கர்மவினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்து நன்மை தீமை பலன்கள் நிர்ணயம் செய்வது, இந்த சாயா கிரகங்களே . பல ஜென்மமாக வினை பதிவினை கரு மையத்தில் பதியவைத்து , சரியான நேரம் காலம் வரும்பொழுது பலனை சரியாக செய்ய நமது ஆன்மாவை தூண்டி வினை பதிவை அனுபவிக்க வைப்பதில் ராகு கேது கிரகங்களுக்கு அதி முக்கிய பங்கு உண்டு .

 

சாயா கிரகங்களின் ஆற்றல் பற்றி சொல்லும் பொழுது ஒருவருடைய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமருகிரார்களோ , அந்த பாவகத்திர்க்கு உண்டான முழுமையான பலனை தான் மட்டுமே எடுத்து கொண்டு  செய்வார்கள் என்பதில் இருந்து இவர்களின் ஆற்றல் தெளிவாக தெரிந்து  கொள்ளலாம் , இதில் வியப்பு என்னவென்றால் இவர்கள் உடன் சேரும் கிரகத்திற்கும் எந்த ஆற்றலும் இருக்காது , ராகு கேது அமர்ந்த பாவத்தை பார்க்கும் கிரகமும் சம்பந்த பட்ட பாவத்திற்கு  எவ்வித நன்மை தீமை பலனை  தர முடியாது, ( அதாவது ராகு கேது கிரகம் அமர்ந்த பாவகத்திர்க்கு ) எனவே இறைநிலை  இந்த கிரகங்களுக்கு அளப்பறியா ஆற்றலை தந்து ஜாதக அமைப்பின் படி நம்மையெல்லாம் கர்ம வினைபதிவினை அனுபவிக்க வைத்து விடுகிறது , அதாவது ஒருவருடைய ஜாதக அமைப்பில் ராகு கேது கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையை செய்கிறது என்றால் 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்யும் , ஒருவேளை தீமை செய்யும் அமைப்பை பெற்றால் 100 சதவிகிதம் தீமையை மட்டுமே செய்யும் , பலன் தருவதில் எவ்வித பார பட்சமும் காட்ட இந்த சாயா கிரகங்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை .

 

ஒருவரின் பெற்றோரை நிர்ணயம் செய்வதில் இருந்து , ஜாதகனுக்கு அமையும் ஆசிரியார் , நண்பர்கள் , கூட்டாளிகள் ,வாழ்க்கை துணை , பிறக்கும் குழந்தைகள் அவர்கள் வழி நன்மை தீமை , மக்கள் தொடர்பு , ஜாதகன் மற்றவர்கள் மூலம்  சேர்க்கும் சொத்து சுகங்கள் , வாழும் மதிப்பு மிக்க வாழ்க்கை , இறுதியில் போகும் இடத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள் வரை தொடர்பு படுத்து கிரகங்கள் இந்த சாயா கிரகங்களே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , வாழ்க்கைக்கு பிறகும் ஜாதகனின் பெயரையும் புகழையும் நெடுங்காலம் சரித்திரத்தில் இடம்பெற செய்யும் பெருமை , இந்த  ராகு கேது கிரகத்தின் சக்தியினாலே என்பதே முற்றிலும் உண்மை .

 

சில அன்பர்களின் ஜாதக நிலையை காணும்பொழுது ஆச்சரியாமாக இருக்கும், காரணம் சாயா கிரகங்களின் ஆளுமை மிகவும் அதிசயிக்க வகையில் அமைந்து இருக்கும் குறிப்பாக மேஷம் , கடகம் ,துலாம் , மகரம் போன்ற ராசிகளில் அமர்ந்து ஜாதகனுக்கு 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கும் , ஜாதகரின் தகப்பனார் உறவினர் வரிசையில் செய்த தான தர்ம  புண்ணிய பதிவின் காரணமாக இந்த நிலை அமைந்து இருக்கும் ,  இதில் நெருப்பு தத்துவம் எனில் முன்னோர்களின் சமயோசித  செயல்களாலும் , நீர் தத்துவம் எனில் முன்னோர்களின் உயர்ந்த மன நிலையாலும் , காற்று தத்துவம் எனில் முன்னோர்களின் அறிவுபூர்வமான செயல்களாலும் , மண் தத்துவம் எனில் முன்னோர்களின் சொத்து , உடல் , ஆன்ம  அர்ப்பனிப்பாலும் , அவர்களது ஜாதக நிலையில் ராகு கேது அமைப்பு சிறப்பாக செயலாற்றி கொண்டு இருக்கும் , மேலும் இவர்களுக்கு கருமையம் மிகவும் பரிசுத்தமாக அமைந்திருக்கும் , இதன் காரணமாக ஜாதகர்  மனதில் நினைக்கும் அனைத்து நன்மையான நினைவுகளையும், செயல் வடிவம் கொடுக்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் ,  இந்த நிலையை சரியாக அமைய பெறாதவர்களே, வாழ்க்கையில் அதிகம் போராட வேண்டி இருக்கிறது .

 

எனவே ஒரு ஜாதக அமைப்பில் நல்லவர் தீயவர் சேர்க்கையினையும், நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்வதில், அதிக பங்கு வகிப்பது இந்த சாயா கிரக அமைப்பே என்றால் அது மிகையாகாது .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் , இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கவும் !



பெரும்பாலான ஜோதிடர்கள்  திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும்பொழுது ஜாதக அமைப்பில் நட்சத்திர அமைப்பை கொண்டும் , ராகு கேது கிரகங்களை கொண்டும் , செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டும் , பொருத்தம் நிர்ணயம் செய்கின்றனர் , மேலும் சிலர்  லக்கினத்திற்கு இரண்டாம் வீடு , களத்திர பாவகம் , பூர்வ புண்ணியம்  போன்ற அமைப்பை வைத்தும் பொருத்தம் நிர்ணயம் செய்பவர்களும் உண்டு .

 
 இந்த அமைப்பை பின்பற்றி பொருத்தம் நிர்ணயம் செய்யும் ஜோதிடர்கள்  பொருத்தம் காணும் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானத்திலோ அல்லது பூர்வ புண்ணியம், களத்திரம் ,ஆயுள் பாவகத்தில்  சூரியன் , செவ்வாய் ,ராகு , கேது ,சனி கிரகங்கள் அமர்ந்திருந்தால்( சமபந்த பட்ட பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள்  இருக்கிறதா? இல்லையா? என்று கூட தெரியாத நிலையிலும் ) போதும் கண்ணை மூடிக்கொண்டு அவை நன்மை செய்யாது , தோஷம் மட்டும் செய்யும் என்றும் நிர்ணயம் செய்கின்றனர் , மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் மேற்கண்ட கிரகங்கள் அமர்வது மிக  பெரிய தோஷத்தை செய்யும் என்றும் , ஜாதகருக்கோ , ஜாதகிக்கோ திருமணம் நடக்க கால தாமதம் ஆகும் என்றும் தீர்மானம் செய்து விடுகின்றனர் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம்.

 

கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிட ஆலோசனைக்காக வந்திருந்த எனது நண்பரின் உறவினர் கேட்ட கேள்வி இது , கடக இலக்கின அமைப்பை சேர்ந்த பெண்ணிற்கு  லக்கினத்திற்கு 2 ல் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படுமா ? நல்ல குடும்பம் அமையாதா ? குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காதா போன்ற கேள்விகளை முன் வைத்தார் , மேலும் இதற்க்கு முன் சந்தித்த ஜோதிடர்கள் எல்லாம் ஜாதகிக்கு திருமணம் நடக்கவே நடக்காது என்று சொல்லியதாகவும் , ஜாதகிக்கு  லக்கினத்திற்கு 2 சனி ராகு சேர்க்கையும் , 8 ல் கேது என்ற அமர்ந்து இருப்பதை காரணம் காட்டியதாக கூறினார் , மேலும் இதனால் தாங்கள் ( பெற்றோர் ) அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியதாக வருத்தப்பட்டனர் .

 

அந்த ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது லக்கினம் பாவகம்  கடக ராசியில்  115 .22 பாகையில் ஆராம்பித்து, சிம்ம ராசியில் 145 .26 பாகையில் நிறைவு பெற்று இருந்தது , மேலும் ஜாதகத்தில் ராகு கேது முறையே சிம்மத்தில் 143 .12 பாகையிலும் , கும்பத்தில் 323 .12 பாகையிலும் அமர்ந்திருந்தனர் , சனிபகவான் சிம்மத்தில் 144 .12 அமர்ந்திருந்தார் , எனவே உண்மையில் இந்த ஜாதகத்தில் ராகு சிம்ம ராசியில்  லக்கினத்திற்கு உட்ப்பட்ட143 .12 பாகையில் இருக்கிறார் , மேலும் சனிபகவானும்  சிம்ம ராசியில்  லக்கினத்திற்கு உட்ப்பட்ட144 .12 பாகையில் இருக்கிறார் , கேதுபகவான் கும்பராசியில் களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட 323 .12 பாகையில் இருக்கிறார். இதுவே ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை , இதை வைத்து பார்க்கும் பொழுது இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்களின் கருத்து மற்று பலன்கள் தவறு என்பது  உறுதியாகிறது .

 

இதற்க்கு அடுத்ததாக இந்த பாவகத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் ஜாதகிக்கு நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும், அப்படி பார்க்கும் பொழுது ராகு கேது கிரககள் லக்கினம் மற்றும் களத்திர பாவக அமைப்பிற்கு 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது என்பதே முற்றிலும் உண்மை மேலும் ஜாதகியின் குடும்ப பாவகம் மட்டும் 33 சதவிகிதம் பாதிக்க  பட்டு இருக்கிறது ( இரண்டாம் பாவகத்திர்க்கு உண்டான சூரியன் தனது வீட்டிற்கு எட்டில் மறைவு) , இதானாலேயே ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆகிறது ஆனால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது உறுதியாகிறது , இதில் சனி பகவானுக்கோ , ராகு பகவானுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை காரணம் அவர்கள் இருப்பது லக்கினத்தில் ( பாவக அமைப்பில் பார்க்க வேண்டும்  ) என்பதால் , இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் பல ஜோதிடர்கள் , பொது பலனை அடிப்படையாக வைத்து, தனிப்பட்ட ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்வதாலேயே இதுமாதிரியான குழப்பங்கள் ஏற்ப்படுகிறது .

 

மேலும் பல ஜோதிடர்கள் திருமணம் பொருத்தம் காணும் பொழுது, பாவ கிரகங்கள் ( அதாவது சூரியன் , தேய்பிறை சந்திரன் , சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் ,சனி ,ராகு ,கேது ) குடும்பம் ,பூர்வ புண்ணியம் , களத்திரம் , ஆயுள் பாவகங்களில் இருந்தால் அவ்வளவுதான். அந்த  கிரகங்கள் 100 சதவிகிதம்  கெடுதல் தான் செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை , மேலும் ஜோதிடத்தை பற்றி அடிப்படை விஷயம் கூட தெரியாதவர்கள் செய்யும் வேலை , உண்மையில் மேற்கண்ட அமைப்பில் கிரகங்கள் இருந்தால் பாவக முறைப்படி அவைகள் குறிப்பிட்ட பாவகத்தில்தான் இருக்கிறதா என்று தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் .

 

மேலும் அமர்ந்திருக்கும் கிரகங்கள் சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா ? என்று தெளிவாக தெரிந்து கொண்டு  பொருத்தம் நிர்ணயம் செய்வது 100 சதவிகிதம் சரியாக இருக்கும் , நம்மை நம்பி வருபவர்களுக்கு ஜாதக ரீதியான சரியான உண்மையான பலனை சொல்ல முடியும் , இதனால் நம்மை நம்பி வருபவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் , ஜோதிடத்தின் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்ப்படும், இறை அருள் ஜோதிடர் ஆகிய  நமக்கு பரிபூரண நல்லாசிகள் வழங்கும் .

 

திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும்பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

 

1 ) எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி , ராசி என்றாலும் சரி , நட்சத்திரம் என்றாலும் சரி , சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் , நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதால் வாழ்க்கை சிறப்பாக அமையும் .

2 ) நட்சத்திர பொருத்தம் மட்டுமே தம்பதியரின் சிறப்பான  வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை .

3 ) செவ்வாய் தோஷம் என்பதெல்லாம் முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் , செவ்வாய் உண்மையில் எவ்வித தோஷத்தையும் செய்வதில்லை .

4 ) சனி களத்திர பாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடக்க தாமதமாகும் என்று கணிதம் செய்வது முற்றிலும் தவறும் , ( மகர லக்கினத்திற்கு கடகத்தில் அமரும் சனியும் , கும்ப லக்கினத்திற்கு சிம்மத்தில் அமரும் சனியும் ஜாதகருக்கு சரியான பருவத்தில் சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவார் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் )  எந்த ஒரு ஜாதகத்திலும் ஒருபாவகத்தை முழுமையாக ஆளுமை செய்யும் திறன் ராகு , கேது கிரகங்கள் மட்டுமே உண்டு மற்ற கிரகங்களுக்கு இந்த சக்தி கிடையாது .

5 ) பூர்வ புண்ணியத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என பலன் சொல்லுவது மிகப்பெரிய தவறு , மேலும் ராகு, கேது கிரகங்கள் ரிஷபம்,துலாம்.
  மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுடன் 14 பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்) கடகம் ( வளர் பிறை சந்திரனாக இருக்க வேண்டும் ) தனுசு , மீன ராசிகளில் அமர்ந்து சுய ஜாதகத்திற்கு  லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகமாக இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு 100 சதவிகிதம்  நிச்சயம் ஆண் வாரிசு உண்டு .

6 ) எக்காரணத்தை கொண்டும் பெண்ணின் ஜாதகத்திலும், ஆணின் ஜாதகத்திலும் 12 ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது தம்பதியரின் வாழ்க்கையில் எப்பொழுதும் மன நிம்மதியான தாம்பத்தியத்தை கொடுக்கும் , நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது விட்டு கொடுக்கும் மனபான்மையையும் , சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காற்று தத்துவ ராசிகளின் தன்மை மற்றும் செயல் பாடுகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுனம் ,துலாம்,கும்பம் ஆகிய ராசிகள் காற்று தத்துவ அமைப்பை சார்ந்த ராசிகள் ஆகும். இதில் மிதுனம் உபய காற்று ராசியாகவும்  , துலாம் சர காற்று ராசியாகவும் கும்பம் ஸ்திர காற்று ராசியாகவும் வகை படுத்த படுகிறது , ஒரு ஜாதகருக்கு சுய ஜாதக  அமைப்பில் லக்கினம் எதுவென்றாலும் , மேற்கண்ட ராசிகள் பாதிக்க படாமல் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நடக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .

 

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் காற்று தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருப்பின் , ஜாதகரின் அறிவாற்றல் , சிந்தனை ஆற்றல் , கற்பனை திறன் , கவி புனையும் வல்லமை , புத்தி கூர்மை , பேச்சாற்றல் போன்ற திறமைகள் பிறப்பிலேயே அமைந்துவிடும் , மேலும்  சிறந்த சிந்தனையாளர்கள் , கதை ஆசிரியார்கள் , கற்பனை திறன் கொண்ட கலை துறையை சார்ந்தவர்கள் , மேதாவிகள் , அறிவு ஜீவிகள் என சமுதாயத்தில்  வாழ்க்கையில் இந்த காற்று தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமர்வதால் சிறப்பான இடத்தை பெற்றுத்தரும், ஜாதகர்  தனது அறிவாற்றலால் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவிகரமாக இருப்பார்.

மிதுனம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவு திறன் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும் , பிரதி பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு ஜாதகர் அறிவு வழியில் உதவி செய்யும் தன்மை உண்டாகும் , மேலும் ஜாதகரின் செயல்பாடுகள் சுயநலம் அற்றதாக காணப்படும் , ஜாதகரின் அறிவாற்றல் மற்றவர்  வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் , இதனால் ஜாதகரும் நன்மை பெறுவார் ஜாதகரை சார்ந்தவர்களும் நன்மை பெறுவார்கள் இது மிதுன ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் தரும் பலன் தரும் , இது முயற்ச்சியால் முன்னேற்றம் பெரும் அமைப்பை குறிக்கும் ராசி , சுய ஜாதகத்தில் இந்த ராசி அமைப்பை பெற்றவர்கள் சுயமாக யாருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் .

துலாம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவு திறனும் செயல்பாடுகளும் அளவில்லா வெற்றியை தரும் உலகத்தில் பல மாற்றங்களை புதிதாக, கொண்டுவரும் தன்மை பெற்றது இந்த ராசி. அதிலும் விரைவான நிச்சயக்க பட்ட விதத்தில் அமைவது இந்த ராசியின் சிறப்பு , ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக ஆளுமை செய்யும் தன்மை பெற்றவர்கள் , மிகப்பெரிய விஞ்ஞானிகள் ஜாதக அமைப்பில் இந்த ராசி மிகவும் நல்ல நிலையில் இருக்கும் , குறிப்பாக சிம்ம இலக்கின ஜாதகருக்கு துலாம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகர் குவிப்பார், துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றி தரும் , எந்த ஒரு லக்கினம் என்றாலும் அவரது ஜாதகத்தில் இந்த துலாம் ராசி நல்ல நிலையில் இருப்பது மிக மிக அவசியம், ஜாதகருக்கும் அமையும் அறிவாற்றலின் திறனை நாம் இந்த ராசியை வைத்து, தெளிவாக நிர்ணயம் செய்துவிடலாம்.

துலாம் சர காற்று ராசியாக வருவதாலேயே இதற்க்கு இத்துணை சிறப்பு , மேலும் சொல்ல வேண்டும் எனில் இவர்களின் சிந்தனை வேகமும் , அறிவாற்றலின் தனி தன்மையும் வேறு எவருக்கும் அமைய வாய்ப்பில்லை , சிலருக்கு புதையல் மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்க பெறுவார்கள் , துலாம் ராசி சுய ஜாதகத்தில் நன்றாக அமைய பெற்றவர்கள் தனது அறிவு கூர்மையால் புதையலுக்கு ஈடான சொத்து சுகங்களை, பல தலை முறைக்கு சேர்த்து விடுவார்கள் .குறிப்பாக வழக்கறிஞர் , மருத்துவர் , பொறியாளர் , விஞ்ஞானி , புதிய கண்டு பிடிப்பாளர் போன்றவர்கள், ஜாதக அமைப்பில் துலாம் ராசி அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும். சுய ஜாதகத்தில் இந்த துலாம் ராசி நன்றாக அமைய பெற்ற குழந்தைகளை மேற்கண்ட தொழில் சார்ந்த கல்வி பயில வைத்தால், நிச்சயம் அந்த துறைகளில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும்.


கும்ப ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவாற்றலுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொள்ளும் , ஜாதகர் செய்யும் தவறான காரியங்கள் கூட மிகுந்த நன்மையே செய்யும் , சமயோசித புத்திசாலித்தனம் இயற்கையாக அமைய பெறுவார்கள் ஜாதகரின் அறிவாற்றல் நிலையான வெற்றிகளை குவிக்கும் , ஜாதகர் கையில் ஒருருபாய் கூட இல்லை என்றாலும் தனது புத்திசாலித்தனத்தால் போகும் இடங்களிலெல்லாம் செல்வங்களையும் , சொத்து சுக சேர்க்கையினையும் பெறுவார், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில்  சிறந்த வியாபார நுணுக்கம் கொண்டவர்கள் , ஜாதகர் அமர்ந்த இடத்தில் கழுதையை கூட குதிரை என நம்பவைத்து விற்பனை செய்யும் அளவிற்கு புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக இவர்கள் அனைவரும் வருமான செய்வதற்கு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை , பலமணிநேரம் உடல் உழைப்பால் பெரும் வருமானத்தை , கும்ப ராசி அமைப்பு நல்ல நிலையில் அமைந்தவர்களுக்கு சில மணி துளிகளில் பெற்றுவிடுவார்கள் தனது அறிவாற்றலால் . அமர்ந்த இடத்தில் இருந்து பல தொழில்களை நிர்வாகிக்கும் தனி திறன் ஜாதகருக்கு பிறப்பிலேயே அமைந்துவிடும் . மேலும் இந்த கும்ப ராசி நல்ல நிலையில் அமைய பெற்றவர்கள் சுய நல வாதிகளாக இருப்பது ஒன்று மட்டுமே குறையாக கருத முடியும் . இந்த ராசி அமைப்பு ஜாதகரின் அறிவாற்றலுடன் அதிர்ஷ்டமும் கைகோர்த்து கொள்ளும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
 
எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் காற்று ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு அறிவு திறன் மேலோங்கி நிற்கும் , தனது அறிவாற்றல் மூலம் ஜாதகர் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

காலசர்ப தோஷம் , களத்திர தோஷம் உண்மை நிலை என்ன ?



கேள்வி :

 அய்யா எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் , களத்திர தோஷம் இருப்பதாக  

சொல்கிறார்கள் , மேலும் இதன் காரணமாகவே எனக்கு திருமணம் தாமதப்படுவதாகவும்  
கூறுகின்றனர், எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் , எனது ஜாதக அமைப்பிற்கு 
 தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் , எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட 
 குணாதிசயம் கொண்டவராக இருப்பார் , ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும்  
என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது என்று  
தெரியவில்லை சரியான வழிகாட்டுங்கள் , பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும் . 

 

பதில் :

 

பொதுவாக லக்கினம் மற்றும் களத்திர பாவக அமைப்பில் ராகு கேது அமர்ந்து ராகு கேது  
கிரகங்களுக்குள் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பை பெற்ற ஜாதகங்களை ,  
காலசர்ப்ப தோஷ ஜாதக நிலை என்று கூறுவார்கள் , இதில் ராகு கேது லக்கினம் மற்றும் 
 ஏழாம் பாவகத்தில் அமர்ந்து அதற்குள் அனைத்து கிரகங்கள் அடைப்படுமாயின் இதற்கும் 
 காலசர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள் , எனவே தங்களுடைய ஜாதக அமைப்பில் 
 மேலோட்டமாக பார்க்கும் பொழுது  லக்கினத்தில் ராகுவும் , ஏழாம் பாவகத்தில் கேதுவும்  
இருப்பதாக கருத்தில் கொண்டுதான் பலன் சொல்வார்கள் , தங்களது  ஜாதகத்தை  
மேலோட்டமாக பார்க்கும் ஜோதிடர்கள்  கருத்து பெரும்பாலும் இதுவாகவே அமையும்,  
மேலும் சிம்மத்தில் ராகுவும் , கும்பத்தில் கேதுவும் அமர்வது ஜாதகருக்கு நன்மை தராது  
என்பது பொது பலன் , இதுவே பல ஜோதிடர்களின் கருத்தாகவும் இருக்கும் உண்மையில் 
 தங்களது ஜாதக அமைப்பின் நிலையை  பற்றி தெளிவாக தங்களுக்கு விளக்குகிறோம் , 
 இதை ஏற்றுக்கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .

 

தங்களது பிறப்பு லக்கினம் சிம்ம லக்கினமாக அமைகிறது, லக்கினம் ஆராம்பம் ஆகும் 
 பாகை ( துல்லிய கணிதப்படி ) சிம்மத்தில் 131 .32 முதல் கன்னியில் 161 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , மேலும் தங்களது களத்திர ஸ்தானமும்  
கும்பத்தில் 311 .32 முதல் மீனத்தில் 346 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , இதன் மூலம் தங்களின் லக்கினம்  
பாவகத்தின் நிலையையும்  களத்திர பாவக நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ள 
 இயலும் , மேலும் இந்த துல்லிய கணிதப்படி பார்க்கும் பொழுது ராகுபகவான் 
 சிம்மத்தில் 126 .20 பாகையில் நிற்கிறார் , கேது பகவான் கும்பத்தில் 306 .20 பாகையில் நிற்கிறார் தங்களின் சுய ஜாதக நிலையில் , எனவே தங்களது சுய ஜாதக 
 அமைப்பில் ராகுவும் கேதுவும் முறையே சிம்மத்தில் உள்ள  12 ம்  பாவகத்திலும் , கும்பத்தில் உள்ள 6 ம் பாவகத்திலும் இருக்கிறார்கள் 
 என்பதே உண்மை . 

ஆக தங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் பாவக அமைப்பின் படி இருக்கும் 

 நிலையையும் தெளிவாக தெரிந்துகொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறோம் , மேலும்
  இந்த பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது இரு கிரகங்களும் தங்களுக்கு என்ன  
விதமான பலனை  தருகிறார்கள் என்பது அடுத்த கேள்வி ? உண்மையில் இந்த  
பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது  இரு கிரகங்களும் தங்களுக்கு 100 சதவிகித  
நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள்  என்பதே முற்றிலும் உண்மை ,  
அப்படி பார்க்கும் பொழுது 6 ம் பாவகம் மற்றும்12 பாவகம் இரண்டும் தங்களுக்கு
 100 சதவிகித நன்மையை செய்துகொண்டு இருக்கிறது , இந்த பாவக வழியில் 
 இருந்து தாங்கள் 100 சதவிகித நன்மையை பெறுவீர்கள் என்பது உறுதியாகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் துர் ஸ்தானம் , மறைவு ஸ்தானம் , கெட்ட பாவகம் என்றும்  இந்தபாவக  வகையில் தங்களுக்கு தீமையான பலன்கள் மட்டுமே நடைபெறும் என்று  

சொல்வது இயற்கையே ,  
ஆனால் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் இரண்டு வித தன்மைகள் உண்டு ஒருவருக்கு ஆறாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் எதிரியால் லாபமும் , எதிரியின் சொத்து கிடைக்கும் யோகமும் ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் சிறு முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும் , எட்டாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் திடீர் என புதையல் கிடைத்தார் போல் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் , எட்டாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத இழப்பு , அதிக முதலீடு செய்வதால் இழப்பு போன்ற நிலைகள் ஏற்ப்படலாம் , 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நல்ல உறக்கம் , நிம்மதியான வாழ்க்கை , தொழில் துறையில் எதிர்பாராத முன்னேற்றம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும், 12 ம் பாவகம் பாதிக்க பட்டால் மன நிம்மதி இழப்பு , அதிக முதலீடுகளால் பாதிப்பு , குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் என்று தீமையான பலனைதரலாம்.

தங்களுடைய ஜாதக அமைப்பில் இந்த மூன்று பாவாகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் தங்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மையே கிடைக்கும் , மேலும் லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் , ராகு கேது கிரகங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது , அடுத்ததாக ராகு கேது கிரகங்கள் தங்களுக்கு ஜாதக ரீதியாக நன்மையே செய்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது , 

அடுத்ததாக தங்களது கேள்வி திருமண தாமதத்திற்கு கரணம் என்ன ?  திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே , இதனால் தங்களுக்கு வந்த நல்ல மணமகளை கூட தங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு , அமைந்த நல்ல வதுவை கூட வேண்டாம் என்று சொல்லி , தங்களின் வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொண்டதே காரணம் , எனவே கனவு உலகத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்து நலம் பெறுங்கள் .

எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் ?
எதிர் வரும் கார்த்திகை மாதத்திற்கு பிறகு நிச்சயம் நடை பெரும் சந்தேகமே இல்லை உறுதி 

 எனது ஜாதக அமைப்பிற்கு தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் ?
இன்னும் சில மாதங்களில் இருந்து தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம் .

எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் ?
மிகவும் நல்ல குணத்துடன் அதிக புத்தி கூர்மை உள்ளவராக இருப்பார் , திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம் உண்டு .

ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும் என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது ?
யார் எதை சொன்னாலும் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது இருகிரகங்களும் 100 சதவிகித நன்மையையே தருகின்றனர் , மேலும் தருவார்கள் , சில ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்கள்  என்பதற்காக ராகு கேது கிரகங்கள் பலனை மாற்றி தர வாய்ப்பில்லை , கால நேர அமைப்பு தங்களுக்கு தர வேண்டிய பலனை தவறாமல் தரவேண்டிய நேரத்தில் சரியாகவும் , உறுதியாகவும் நிச்சயம் தருவார்கள் இதில் மாற்றம் இல்லை , எந்த ஒரு ஜாதகருக்கும் தீமையான பலன்கள் நடக்கும் காலங்களில் விழிப்புணர்வுடன் இருந்தால் அதன் பாதிப்பில்  இருந்து நிச்சயம் விடுபடலாம் , இதை தான் ( விதியை மதியால் அறிவாற்றல் கொண்டு வெற்றி கொள்ளலாம் ) என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.  

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்
9443355696