செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

காலசர்ப தோஷம் , களத்திர தோஷம் உண்மை நிலை என்ன ?



கேள்வி :

 அய்யா எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் , களத்திர தோஷம் இருப்பதாக  

சொல்கிறார்கள் , மேலும் இதன் காரணமாகவே எனக்கு திருமணம் தாமதப்படுவதாகவும்  
கூறுகின்றனர், எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் , எனது ஜாதக அமைப்பிற்கு 
 தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் , எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட 
 குணாதிசயம் கொண்டவராக இருப்பார் , ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும்  
என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது என்று  
தெரியவில்லை சரியான வழிகாட்டுங்கள் , பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும் . 

 

பதில் :

 

பொதுவாக லக்கினம் மற்றும் களத்திர பாவக அமைப்பில் ராகு கேது அமர்ந்து ராகு கேது  
கிரகங்களுக்குள் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பை பெற்ற ஜாதகங்களை ,  
காலசர்ப்ப தோஷ ஜாதக நிலை என்று கூறுவார்கள் , இதில் ராகு கேது லக்கினம் மற்றும் 
 ஏழாம் பாவகத்தில் அமர்ந்து அதற்குள் அனைத்து கிரகங்கள் அடைப்படுமாயின் இதற்கும் 
 காலசர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள் , எனவே தங்களுடைய ஜாதக அமைப்பில் 
 மேலோட்டமாக பார்க்கும் பொழுது  லக்கினத்தில் ராகுவும் , ஏழாம் பாவகத்தில் கேதுவும்  
இருப்பதாக கருத்தில் கொண்டுதான் பலன் சொல்வார்கள் , தங்களது  ஜாதகத்தை  
மேலோட்டமாக பார்க்கும் ஜோதிடர்கள்  கருத்து பெரும்பாலும் இதுவாகவே அமையும்,  
மேலும் சிம்மத்தில் ராகுவும் , கும்பத்தில் கேதுவும் அமர்வது ஜாதகருக்கு நன்மை தராது  
என்பது பொது பலன் , இதுவே பல ஜோதிடர்களின் கருத்தாகவும் இருக்கும் உண்மையில் 
 தங்களது ஜாதக அமைப்பின் நிலையை  பற்றி தெளிவாக தங்களுக்கு விளக்குகிறோம் , 
 இதை ஏற்றுக்கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .

 

தங்களது பிறப்பு லக்கினம் சிம்ம லக்கினமாக அமைகிறது, லக்கினம் ஆராம்பம் ஆகும் 
 பாகை ( துல்லிய கணிதப்படி ) சிம்மத்தில் 131 .32 முதல் கன்னியில் 161 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , மேலும் தங்களது களத்திர ஸ்தானமும்  
கும்பத்தில் 311 .32 முதல் மீனத்தில் 346 .36 பாகை வரை வியாபித்து நிற்கிறது , இதன் மூலம் தங்களின் லக்கினம்  
பாவகத்தின் நிலையையும்  களத்திர பாவக நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ள 
 இயலும் , மேலும் இந்த துல்லிய கணிதப்படி பார்க்கும் பொழுது ராகுபகவான் 
 சிம்மத்தில் 126 .20 பாகையில் நிற்கிறார் , கேது பகவான் கும்பத்தில் 306 .20 பாகையில் நிற்கிறார் தங்களின் சுய ஜாதக நிலையில் , எனவே தங்களது சுய ஜாதக 
 அமைப்பில் ராகுவும் கேதுவும் முறையே சிம்மத்தில் உள்ள  12 ம்  பாவகத்திலும் , கும்பத்தில் உள்ள 6 ம் பாவகத்திலும் இருக்கிறார்கள் 
 என்பதே உண்மை . 

ஆக தங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் பாவக அமைப்பின் படி இருக்கும் 

 நிலையையும் தெளிவாக தெரிந்துகொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறோம் , மேலும்
  இந்த பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது இரு கிரகங்களும் தங்களுக்கு என்ன  
விதமான பலனை  தருகிறார்கள் என்பது அடுத்த கேள்வி ? உண்மையில் இந்த  
பாவகங்களில் அமர்ந்துள்ள ராகு கேது  இரு கிரகங்களும் தங்களுக்கு 100 சதவிகித  
நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள்  என்பதே முற்றிலும் உண்மை ,  
அப்படி பார்க்கும் பொழுது 6 ம் பாவகம் மற்றும்12 பாவகம் இரண்டும் தங்களுக்கு
 100 சதவிகித நன்மையை செய்துகொண்டு இருக்கிறது , இந்த பாவக வழியில் 
 இருந்து தாங்கள் 100 சதவிகித நன்மையை பெறுவீர்கள் என்பது உறுதியாகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் துர் ஸ்தானம் , மறைவு ஸ்தானம் , கெட்ட பாவகம் என்றும்  இந்தபாவக  வகையில் தங்களுக்கு தீமையான பலன்கள் மட்டுமே நடைபெறும் என்று  

சொல்வது இயற்கையே ,  
ஆனால் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் இரண்டு வித தன்மைகள் உண்டு ஒருவருக்கு ஆறாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் எதிரியால் லாபமும் , எதிரியின் சொத்து கிடைக்கும் யோகமும் ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் சிறு முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும் , எட்டாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் திடீர் என புதையல் கிடைத்தார் போல் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் , எட்டாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத இழப்பு , அதிக முதலீடு செய்வதால் இழப்பு போன்ற நிலைகள் ஏற்ப்படலாம் , 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நல்ல உறக்கம் , நிம்மதியான வாழ்க்கை , தொழில் துறையில் எதிர்பாராத முன்னேற்றம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும், 12 ம் பாவகம் பாதிக்க பட்டால் மன நிம்மதி இழப்பு , அதிக முதலீடுகளால் பாதிப்பு , குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் என்று தீமையான பலனைதரலாம்.

தங்களுடைய ஜாதக அமைப்பில் இந்த மூன்று பாவாகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் தங்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மையே கிடைக்கும் , மேலும் லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் , ராகு கேது கிரகங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது , அடுத்ததாக ராகு கேது கிரகங்கள் தங்களுக்கு ஜாதக ரீதியாக நன்மையே செய்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது , 

அடுத்ததாக தங்களது கேள்வி திருமண தாமதத்திற்கு கரணம் என்ன ?  திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே , இதனால் தங்களுக்கு வந்த நல்ல மணமகளை கூட தங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு , அமைந்த நல்ல வதுவை கூட வேண்டாம் என்று சொல்லி , தங்களின் வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொண்டதே காரணம் , எனவே கனவு உலகத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்து நலம் பெறுங்கள் .

எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் ?
எதிர் வரும் கார்த்திகை மாதத்திற்கு பிறகு நிச்சயம் நடை பெரும் சந்தேகமே இல்லை உறுதி 

 எனது ஜாதக அமைப்பிற்கு தொழில் விருத்தி பெரும் காலம் எப்பொழுது வரும் ?
இன்னும் சில மாதங்களில் இருந்து தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம் .

எனக்கு வரும் மனைவி எப்படிபட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் ?
மிகவும் நல்ல குணத்துடன் அதிக புத்தி கூர்மை உள்ளவராக இருப்பார் , திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம் உண்டு .

ராகு கேது கிரகங்களால் அதிக பாதிப்பு வரும் என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் , எதை நம்புவது , எதை விடுவது ?
யார் எதை சொன்னாலும் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது இருகிரகங்களும் 100 சதவிகித நன்மையையே தருகின்றனர் , மேலும் தருவார்கள் , சில ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்கள்  என்பதற்காக ராகு கேது கிரகங்கள் பலனை மாற்றி தர வாய்ப்பில்லை , கால நேர அமைப்பு தங்களுக்கு தர வேண்டிய பலனை தவறாமல் தரவேண்டிய நேரத்தில் சரியாகவும் , உறுதியாகவும் நிச்சயம் தருவார்கள் இதில் மாற்றம் இல்லை , எந்த ஒரு ஜாதகருக்கும் தீமையான பலன்கள் நடக்கும் காலங்களில் விழிப்புணர்வுடன் இருந்தால் அதன் பாதிப்பில்  இருந்து நிச்சயம் விடுபடலாம் , இதை தான் ( விதியை மதியால் அறிவாற்றல் கொண்டு வெற்றி கொள்ளலாம் ) என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.  

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக