செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஜோதிட ஆலோசனை : கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக ஜாதக நிலை !



கேள்வி :

எனது சுய ஜாதக ரீதியாக சுய தொழில் தனியாக செய்யலாமா ? கூட்டாக செய்யலாமா ? வாழ்க்கையில் தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டா ?

பதில் :

தங்களுடைய ஜாதக அமைப்பில் களத்திரம் , மற்றும் பூர்வ புண்ணியம் இரண்டும் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது இருப்பினும் அது உபய தத்துவமாக இருப்பதால் அதிக நன்மை இல்லை என்பதே உண்மை , மேலும்  கூட்டு தொழில் மூலம் வரும் வருமானத்தை குறிக்கும் 8 ம் பாவகம்  8 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது 100 சதவிகித தீமையான பலனை தரும் , அதாவது கூட்டு தொழில் மூலம் வரும் வருமானம் அனைத்தும் ஒருநாள் இழக்கும் சூழ்நிலையை ஏற்ப்படலாம், எனவே கூட்டு தொழில் செய்யும் பொழுது பண விஷயத்தில் அதிக கவனம் தேவை ,  தங்களுடைய ஜாதக அமைப்பில் லக்கினம் மட்டும் தொழில் ஸ்தானம் இரண்டும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் கூட்டு தொழில் செய்வதை விட , தனித்து தொழில் செய்வது அபரிவிதமான வெற்றியை தரும் , கூட்டு தொழில் 33 சதவிகிதம் மட்டுமே நன்மை செய்யும் , தனித்து சுய தொழில் செய்வது 66 சதவிகிதம் யோக பலனை செய்யும் என்பது தங்களது ஜாதக அமைப்பில் உள்ள ஒரு சிறப்பான யோக நிலை , எனவே தனியாக தொழில் செய்வதே தங்களுக்கு அதிக  நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் வெற்றி பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம் பெற வேண்டுமெனில் சுய ஜாதக அமைப்பில் , களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடும் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , இதில் களத்திர பாவகம், ஜாதகரின் தொழில் முறை கூட்டாளியின் தன்மையையும், ஜாதகருக்கு தொழில் முறை கூட்டாளியால் கிடைக்கும் ஆதரவினை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் , மேலும் கூட்டாளி ஜாதகருடன் எப்படிபட்ட உறவினை கையாளுவார் என்பது களத்திர பாவக வழியில் இருந்து துல்லியாமாக தெரிந்து கொள்ள இயலும் , ஜாதகருடன் கூட்டு சேரும்பொழுது எவ்விதத்தில் தொழில் முதலீடு செய்வார் ( அதாவது பொருளாதார உதவியா? அறிவு வழியில் உதவியா? சொத்து அமைப்பில் உதவியா ? ) என்பதை தெரிந்து கொள்ளவும் களத்திர பாவகத்தின் நிலையை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் .

ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் , இதில் களத்திர பாவகம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது மிகசிறந்த யோகபலனை வாரிவழங்கும் , குறிப்பாக மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியாக அமைவது மிகப்பெரிய வெற்றிகளை தரும் , மேலும் இந்த ராசிகள் ஜாதகருக்கு 11 ம் வீடாக வருவது மிகவும் சிறப்பான விஷயம். இந்த அமைப்பில் ஒரு ஜாதகருக்கு களத்திர பாவகம் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று , அது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து விட்டால்  ஜாதகரின் கூட்டு தொழில் 
நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிட வாய்ப்பு உண்டு , இந்த அமைப்பை பெற்றவர்கள் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் பக்கம் தலை வைத்தும் கூட படுக்க கூடாது , இந்த அமைப்பு மேற்கண்ட சர லக்கினத்தை பிறப்பு லக்கினமாக கொண்டவர்களுக்கே பொருந்தும் , அதாவது மேஷம் , கடகம் , துலாம், மகர ராசியை இலக்கணமாக கொண்டவர்களுக்கு , களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது எக்காரணத்தை கொண்டும் ஜாதகருக்கு கூட்டு தொழில் ஆகவே ஆகாது , தனித்து தொழில் செய்வதே சாலசிறந்தது .

எந்த ஒரு இலக்கின அமைப்பை சார்ந்தவராக இருந்தாலும் களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் , அந்த ஜாதகர் கூட்டு தொழிலுக்கு ஏற்றவர் அல்ல , மேலும் இவருடன் கூட்டு தொழில் செய்பவரையும் இது பாதிக்கும் , தொழில் பின்னடைவை விரைவில் சந்திக்க வேண்டிவரும் , மேலும் சுய ஜாதகத்தில் இந்த நிலையை பெற்றவர்கள் கூட்டு தொழில் செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு தண்ணீர் இல்லா கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது. இதில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் முதலீடு செய்த தொகை திரும்ப கிடைக்கலாம் , ஒருவேளை பூர்வ புண்ணியமும் பாதிக்க பட்டிருந்தால் முதலீடு செய்த தொகை நிச்சயம் 100 சதவிகிதம் கிடைக்க வாய்ப்பே இல்லை, எனவே கூட்டு தொழில் செய்யுமுன்னர் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை தெளிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது அதிக நன்மையை தரும் .

கூட்டு தொழில் மூலம் யோகமான வாழ்க்கையினை பெரும் அமைப்புள்ள ஜாதக நிலை :

சுய ஜாதக அமைப்பில் நண்பர்கள் கூட்டாளிகளை குறிக்கும், களத்திர பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , களத்திர பாவகத்திர்க்கு இரண்டாம் வீடான ௮ ம் வீடு ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வருமானத்தை குறிக்கும் , களத்திர பாவகத்திர்க்கு பதினொன்றாம் வீடான பூர்வ புண்ணியம் எனும் 5 ம் வீடு நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் தனது நண்பர்கள் , மற்றும் கூட்டாளிகள் மூலம் அடையும் நன்மை மற்றும் லாபத்தை குறிக்கும் , ஒரு ஜாதக அமைப்பில் மேற்கண்ட மூன்று பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் துணிந்து கூட்டு தொழில் செய்யலாம் , இதனால் ஜாதகருக்கு 100 சதவிகிதம் கூட்டு தொழில் மூலம் யோகமான பலனே நிச்சயம் நடக்கும் .

மேற்கண்ட பாவகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் சர ராசிகளுடனோ , ஸ்திர ராசிகளுடனோ தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , உபய ராசிகளுடன் தொடர்பு பெறுவது சராசரியான தொழில் வளர்ச்சியினை மட்டுமே தரும் , ஆனால் இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது .

சுய ஜாதக நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு கூட்டு தொழில் செய்து வெற்றி பெறுங்கள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக