வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காற்று தத்துவ ராசிகளின் தன்மை மற்றும் செயல் பாடுகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுனம் ,துலாம்,கும்பம் ஆகிய ராசிகள் காற்று தத்துவ அமைப்பை சார்ந்த ராசிகள் ஆகும். இதில் மிதுனம் உபய காற்று ராசியாகவும்  , துலாம் சர காற்று ராசியாகவும் கும்பம் ஸ்திர காற்று ராசியாகவும் வகை படுத்த படுகிறது , ஒரு ஜாதகருக்கு சுய ஜாதக  அமைப்பில் லக்கினம் எதுவென்றாலும் , மேற்கண்ட ராசிகள் பாதிக்க படாமல் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நடக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .

 

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் காற்று தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருப்பின் , ஜாதகரின் அறிவாற்றல் , சிந்தனை ஆற்றல் , கற்பனை திறன் , கவி புனையும் வல்லமை , புத்தி கூர்மை , பேச்சாற்றல் போன்ற திறமைகள் பிறப்பிலேயே அமைந்துவிடும் , மேலும்  சிறந்த சிந்தனையாளர்கள் , கதை ஆசிரியார்கள் , கற்பனை திறன் கொண்ட கலை துறையை சார்ந்தவர்கள் , மேதாவிகள் , அறிவு ஜீவிகள் என சமுதாயத்தில்  வாழ்க்கையில் இந்த காற்று தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமர்வதால் சிறப்பான இடத்தை பெற்றுத்தரும், ஜாதகர்  தனது அறிவாற்றலால் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவிகரமாக இருப்பார்.

மிதுனம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவு திறன் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும் , பிரதி பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு ஜாதகர் அறிவு வழியில் உதவி செய்யும் தன்மை உண்டாகும் , மேலும் ஜாதகரின் செயல்பாடுகள் சுயநலம் அற்றதாக காணப்படும் , ஜாதகரின் அறிவாற்றல் மற்றவர்  வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் , இதனால் ஜாதகரும் நன்மை பெறுவார் ஜாதகரை சார்ந்தவர்களும் நன்மை பெறுவார்கள் இது மிதுன ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் தரும் பலன் தரும் , இது முயற்ச்சியால் முன்னேற்றம் பெரும் அமைப்பை குறிக்கும் ராசி , சுய ஜாதகத்தில் இந்த ராசி அமைப்பை பெற்றவர்கள் சுயமாக யாருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் .

துலாம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவு திறனும் செயல்பாடுகளும் அளவில்லா வெற்றியை தரும் உலகத்தில் பல மாற்றங்களை புதிதாக, கொண்டுவரும் தன்மை பெற்றது இந்த ராசி. அதிலும் விரைவான நிச்சயக்க பட்ட விதத்தில் அமைவது இந்த ராசியின் சிறப்பு , ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக ஆளுமை செய்யும் தன்மை பெற்றவர்கள் , மிகப்பெரிய விஞ்ஞானிகள் ஜாதக அமைப்பில் இந்த ராசி மிகவும் நல்ல நிலையில் இருக்கும் , குறிப்பாக சிம்ம இலக்கின ஜாதகருக்கு துலாம் ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகர் குவிப்பார், துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றி தரும் , எந்த ஒரு லக்கினம் என்றாலும் அவரது ஜாதகத்தில் இந்த துலாம் ராசி நல்ல நிலையில் இருப்பது மிக மிக அவசியம், ஜாதகருக்கும் அமையும் அறிவாற்றலின் திறனை நாம் இந்த ராசியை வைத்து, தெளிவாக நிர்ணயம் செய்துவிடலாம்.

துலாம் சர காற்று ராசியாக வருவதாலேயே இதற்க்கு இத்துணை சிறப்பு , மேலும் சொல்ல வேண்டும் எனில் இவர்களின் சிந்தனை வேகமும் , அறிவாற்றலின் தனி தன்மையும் வேறு எவருக்கும் அமைய வாய்ப்பில்லை , சிலருக்கு புதையல் மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்க பெறுவார்கள் , துலாம் ராசி சுய ஜாதகத்தில் நன்றாக அமைய பெற்றவர்கள் தனது அறிவு கூர்மையால் புதையலுக்கு ஈடான சொத்து சுகங்களை, பல தலை முறைக்கு சேர்த்து விடுவார்கள் .குறிப்பாக வழக்கறிஞர் , மருத்துவர் , பொறியாளர் , விஞ்ஞானி , புதிய கண்டு பிடிப்பாளர் போன்றவர்கள், ஜாதக அமைப்பில் துலாம் ராசி அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும். சுய ஜாதகத்தில் இந்த துலாம் ராசி நன்றாக அமைய பெற்ற குழந்தைகளை மேற்கண்ட தொழில் சார்ந்த கல்வி பயில வைத்தால், நிச்சயம் அந்த துறைகளில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும்.


கும்ப ராசி நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகரின் அறிவாற்றலுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொள்ளும் , ஜாதகர் செய்யும் தவறான காரியங்கள் கூட மிகுந்த நன்மையே செய்யும் , சமயோசித புத்திசாலித்தனம் இயற்கையாக அமைய பெறுவார்கள் ஜாதகரின் அறிவாற்றல் நிலையான வெற்றிகளை குவிக்கும் , ஜாதகர் கையில் ஒருருபாய் கூட இல்லை என்றாலும் தனது புத்திசாலித்தனத்தால் போகும் இடங்களிலெல்லாம் செல்வங்களையும் , சொத்து சுக சேர்க்கையினையும் பெறுவார், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில்  சிறந்த வியாபார நுணுக்கம் கொண்டவர்கள் , ஜாதகர் அமர்ந்த இடத்தில் கழுதையை கூட குதிரை என நம்பவைத்து விற்பனை செய்யும் அளவிற்கு புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக இவர்கள் அனைவரும் வருமான செய்வதற்கு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை , பலமணிநேரம் உடல் உழைப்பால் பெரும் வருமானத்தை , கும்ப ராசி அமைப்பு நல்ல நிலையில் அமைந்தவர்களுக்கு சில மணி துளிகளில் பெற்றுவிடுவார்கள் தனது அறிவாற்றலால் . அமர்ந்த இடத்தில் இருந்து பல தொழில்களை நிர்வாகிக்கும் தனி திறன் ஜாதகருக்கு பிறப்பிலேயே அமைந்துவிடும் . மேலும் இந்த கும்ப ராசி நல்ல நிலையில் அமைய பெற்றவர்கள் சுய நல வாதிகளாக இருப்பது ஒன்று மட்டுமே குறையாக கருத முடியும் . இந்த ராசி அமைப்பு ஜாதகரின் அறிவாற்றலுடன் அதிர்ஷ்டமும் கைகோர்த்து கொள்ளும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
 
எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் காற்று ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு அறிவு திறன் மேலோங்கி நிற்கும் , தனது அறிவாற்றல் மூலம் ஜாதகர் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக