திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ராகு கேது கிரகத்தின் தனித்தன்மை வாய்ந்த செயல்திறன் !




" உன்நண்பன் யார் என்று சொல் " " நான் உன்னை பற்றி சொல்கிறேன்"  என்பது முது மொழி.

 

  ஒருவரது  ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது என்று தெளிவாக தெரிந்தால்  " அவருடன் சேரும் நண்பர்கள் , உறவுகள் , தொழில் கூட்டாளிகள் , பொது மக்களுக்கும், ஜாதகருக்கும் உள்ள தொடர்புகள், இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு , வெளிநபர்களுடன் ஜாதகரின் உறவு நிலை , தனக்கு வரும் வாழ்க்கை துணையின் குணாதிசியம்"  போன்றவற்றை தெளிவாக நிர்ணயம் செய்து சொல்ல இயலும் என்பது " ஜோதிட மொழி " இதன் அடிப்படையில் ராகு கேது கிரகத்தின் அருமை மற்றும் வலிமை  நமக்கு புரியும் என்று நினைக்கிறோம்.

 

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று இறைவனை சொல்வது போல் , ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களின் உதவி இன்றி நமக்கு நல்ல பெற்றோர் , நல்ல ஆசிரியார் , நல்ல நண்பர்கள் , நல்ல உறவுகள் , மக்களிடம் நல்லுறவு மற்றும் அவர்களின் ஆதரவு போன்ற நன்மையான தொடர்புகள் அமையாது . நமக்கு அமையும் தீமையான உறவுகள் , நண்பர்கள் , இவர்களின் வழியில் இருந்து வரும் இன்னல்கள் , இழப்புகளை நிர்ணயம் செய்வது ராகு கேது என்றால் அது மிகையாகாது , குறிப்பாக கர்மவினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்து நன்மை தீமை பலன்கள் நிர்ணயம் செய்வது, இந்த சாயா கிரகங்களே . பல ஜென்மமாக வினை பதிவினை கரு மையத்தில் பதியவைத்து , சரியான நேரம் காலம் வரும்பொழுது பலனை சரியாக செய்ய நமது ஆன்மாவை தூண்டி வினை பதிவை அனுபவிக்க வைப்பதில் ராகு கேது கிரகங்களுக்கு அதி முக்கிய பங்கு உண்டு .

 

சாயா கிரகங்களின் ஆற்றல் பற்றி சொல்லும் பொழுது ஒருவருடைய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமருகிரார்களோ , அந்த பாவகத்திர்க்கு உண்டான முழுமையான பலனை தான் மட்டுமே எடுத்து கொண்டு  செய்வார்கள் என்பதில் இருந்து இவர்களின் ஆற்றல் தெளிவாக தெரிந்து  கொள்ளலாம் , இதில் வியப்பு என்னவென்றால் இவர்கள் உடன் சேரும் கிரகத்திற்கும் எந்த ஆற்றலும் இருக்காது , ராகு கேது அமர்ந்த பாவத்தை பார்க்கும் கிரகமும் சம்பந்த பட்ட பாவத்திற்கு  எவ்வித நன்மை தீமை பலனை  தர முடியாது, ( அதாவது ராகு கேது கிரகம் அமர்ந்த பாவகத்திர்க்கு ) எனவே இறைநிலை  இந்த கிரகங்களுக்கு அளப்பறியா ஆற்றலை தந்து ஜாதக அமைப்பின் படி நம்மையெல்லாம் கர்ம வினைபதிவினை அனுபவிக்க வைத்து விடுகிறது , அதாவது ஒருவருடைய ஜாதக அமைப்பில் ராகு கேது கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையை செய்கிறது என்றால் 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்யும் , ஒருவேளை தீமை செய்யும் அமைப்பை பெற்றால் 100 சதவிகிதம் தீமையை மட்டுமே செய்யும் , பலன் தருவதில் எவ்வித பார பட்சமும் காட்ட இந்த சாயா கிரகங்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை .

 

ஒருவரின் பெற்றோரை நிர்ணயம் செய்வதில் இருந்து , ஜாதகனுக்கு அமையும் ஆசிரியார் , நண்பர்கள் , கூட்டாளிகள் ,வாழ்க்கை துணை , பிறக்கும் குழந்தைகள் அவர்கள் வழி நன்மை தீமை , மக்கள் தொடர்பு , ஜாதகன் மற்றவர்கள் மூலம்  சேர்க்கும் சொத்து சுகங்கள் , வாழும் மதிப்பு மிக்க வாழ்க்கை , இறுதியில் போகும் இடத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள் வரை தொடர்பு படுத்து கிரகங்கள் இந்த சாயா கிரகங்களே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , வாழ்க்கைக்கு பிறகும் ஜாதகனின் பெயரையும் புகழையும் நெடுங்காலம் சரித்திரத்தில் இடம்பெற செய்யும் பெருமை , இந்த  ராகு கேது கிரகத்தின் சக்தியினாலே என்பதே முற்றிலும் உண்மை .

 

சில அன்பர்களின் ஜாதக நிலையை காணும்பொழுது ஆச்சரியாமாக இருக்கும், காரணம் சாயா கிரகங்களின் ஆளுமை மிகவும் அதிசயிக்க வகையில் அமைந்து இருக்கும் குறிப்பாக மேஷம் , கடகம் ,துலாம் , மகரம் போன்ற ராசிகளில் அமர்ந்து ஜாதகனுக்கு 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கும் , ஜாதகரின் தகப்பனார் உறவினர் வரிசையில் செய்த தான தர்ம  புண்ணிய பதிவின் காரணமாக இந்த நிலை அமைந்து இருக்கும் ,  இதில் நெருப்பு தத்துவம் எனில் முன்னோர்களின் சமயோசித  செயல்களாலும் , நீர் தத்துவம் எனில் முன்னோர்களின் உயர்ந்த மன நிலையாலும் , காற்று தத்துவம் எனில் முன்னோர்களின் அறிவுபூர்வமான செயல்களாலும் , மண் தத்துவம் எனில் முன்னோர்களின் சொத்து , உடல் , ஆன்ம  அர்ப்பனிப்பாலும் , அவர்களது ஜாதக நிலையில் ராகு கேது அமைப்பு சிறப்பாக செயலாற்றி கொண்டு இருக்கும் , மேலும் இவர்களுக்கு கருமையம் மிகவும் பரிசுத்தமாக அமைந்திருக்கும் , இதன் காரணமாக ஜாதகர்  மனதில் நினைக்கும் அனைத்து நன்மையான நினைவுகளையும், செயல் வடிவம் கொடுக்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் ,  இந்த நிலையை சரியாக அமைய பெறாதவர்களே, வாழ்க்கையில் அதிகம் போராட வேண்டி இருக்கிறது .

 

எனவே ஒரு ஜாதக அமைப்பில் நல்லவர் தீயவர் சேர்க்கையினையும், நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்வதில், அதிக பங்கு வகிப்பது இந்த சாயா கிரக அமைப்பே என்றால் அது மிகையாகாது .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக