புதன், 16 ஏப்ரல், 2014

ஆயுள் பாவக நிர்ணயம், பூர்ண ஆயுள் அற்ப ஆயுள் விளக்கம் !



கேள்வி :

 அய்யா வணக்கம் எனது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், எனது பெற்றோரிடம் இந்த ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமையில்லாமல் இருப்பதால், ஆயுளுக்கு பங்கம் ஏற்ப்படலாம் என்று கூறியுள்ளனர், இதனால் எனது பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுடன் இருக்கின்றனர், என்னையும் மனதளவில் கவலையுற செய்கின்றனர், எனது ஜாதகத்தை சரியாக கணிதம் செய்து ஆயுள் பாவக பலனை நிர்ணயம் செய்து ஜாதக பலன் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

 அன்பு தம்பிக்கு தங்களது ஜாதகத்தை நன்றாக ஆய்வு செய்த வகையில் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன் தங்களுக்கு பூரண ஆயுள், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஏனெனில், தங்களின் சுய ஜாதகத்தில் ஆயுள் வலிமையை குறிக்கும் 8ம் வீடும், உயிர் உடல் அமைப்பை குறிக்கும் லக்கினமும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதே அதற்க்கு காரணம், குறிப்பாக 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும், இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கு எவ்வித சிரமும் வர வாய்ப்பில்லை என்பதால், தாங்கள் எவ்வித கவலையும் அடைய தேவையில்லை.

தங்களது பெற்றோருக்கும் தெளிவாக சொல்லிவிடுங்கள் தங்கள் உயிருக்கும், உடலுக்கும் எவ்வித பாதிப்பும் வர வாய்ப்பில்லை என்று, எனவே தாங்கள் எவ்வித மன கவலையும் கொள்ளாமல் தைரியமாக இருக்கலாம், இதற்க்கு மேலும் உங்களுக்கு ஆயுள் பாவகம் பற்றிய கவலை வருமெனில், நேராக வளர்பிறை திங்கள் அன்று திருமலை திருப்பதி சென்று ஏழு மலையானுக்கு முடி காணிக்கை செய்துவிட்டு, ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் குளித்து ஸ்ரீ வாரி பெருமாளை தரிசனம் செய்து வரவும், தங்களுக்கு 100 சதவித நன்மையை ஆயுள் என்ற அமைப்பில் இருந்து தருவார், மேலும்  தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற அமைப்பில் இருக்கட்டும்.

 மேலும் எக்காரணத்தை கொண்டும் எந்த ஒரு ஜோதிடராலும் ஒருவரின் ஆயுள் பாவகத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாது, இறை அருளின் தன்மைக்கு மட்டுமே இந்த விஷயம் புலப்படும், எனவே தங்களின் ஜாதக அமைப்பில் ஆயுள் என்ற அமைப்பு நல்ல நிலையில் இருப்பது மட்டும் உறுதி  என்பதால் பெரிய அளவில் தாங்கள் மன கவலை கொள்ளாமல் வாழ்க்கையை இனிமையாக வழ கற்று கொள்ளுங்கள், தங்களின் பெற்றோருக்கும் தைரியம் சொல்லுங்கள். வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

1 கருத்து:

  1. அய்யா
    தங்கள் பதிவுகளை இன்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றாகவுள்ளது.

    பதிலளிநீக்கு