ஒருவரின் சுய ஜாதக நிலையை வைத்து பலன் காண முற்படும் ஜோதிடர்கள் அனைவரும், கிரக சேர்க்கையை வைத்தும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையை வைத்தும், கிரகங்களின் தன்மையை வைத்தும், பாவகங்களின் வலிமையை வைத்தும், யோக அவயோக நிலைகளை நிர்ணயம் செய்வதுண்டு, பொதுவாக பலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும் உண்டு, அவயோக அமைப்புகளும் உண்டு, இந்த யோக/அவயோக நிலைகள் ஜாதகருக்கு எப்பொழுது தனது பலாபலன்களை வழங்குகிறது என்பதை காண்பதே, சரியான ஜோதிடருக்கு முன்னாள் இருக்கும் சவால், சிலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும், அவயோக அமைப்புகளும் இருந்த போதிலும், நடை பெரும் திசா புத்திகள் யோக/அவயோக பலன்களை ஏற்று நடத்தாமல் போய்விடின், ஜாதகருக்கு யோகம் இருந்தும் பலன் இல்லை என்பதே வருத்தத்திற்கு உரியது, இது யோக/அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும் அன்பர்களே !
நமது ஜோதிட முறையில் யோக அவயோகத்தின் தன்மைகளை பாவக வலிமை மூலம் நிர்ணயம் செய்வதால், ஒருவருக்கு நடைபெறும் திசை மற்றும் புத்திகளிலேயே ஜாதகத்தில் உள்ள யோக/அவயோக பலன்கள் நடைமுறையில் வருகின்றதா என்பதை மிக எளிதில் அறிந்துகொள்ள இயலும், ஒரு ஜாதகருக்கு வலிமை பெற்ற அல்லது யோகங்களை வழங்க கூடிய பாவகங்களின் பலன்களை, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு குறிப்பிட்ட பாவகத்தின் நன்மைகளும், யோகத்தின் பலன்களும் நடைமுறைக்கு வரும், மாறாக நடைபெறும் திசை புத்திகள் யோகங்களை தரும் பாவக பலன்களை ஏற்று நடத்த வில்லை எனில், ஜாதகருக்கு இதனால் எவ்வித நன்மையையும் நடைபெற வாய்ப்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, ஆக சுய ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்த போதிலும், நடைமுறையில் ஜாதகருக்கு பலன்களை தருகிறத என்பதை தெளிவு பட தெரிந்துகொண்டு ஜாதகருக்கு பலன் சொல்ல முற்படுவதே சரியான ஜோதிட கணித முறை அன்பர்களே!
கிழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !
ஜாதகியின் லக்கினம் : ரிஷபம்
ஜாதகியின் ராசி : கடகம்
ஜாதகியின் நட்சத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்.
ஜாதகிக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சுய ஜாதக அமைப்பின் படி 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கி கொண்டு இருக்கிறது, பொதுவாக பெண்கள் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்க படுவது அவ்வளவு சிறப்பான விஷயமாக கருத இயலாது ஏனெனில், அயன சயன அமைப்பில் இருந்தும், மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகிக்கு எவ்வித நன்மையையும் தாராது, குறிப்பாக மன நிம்மதி என்ன விலை என்று கேட்க்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேலும் ஜாதகியின் 12ம் பாவகம் அமைவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லக்கினம் ) சர மேஷ ராசியாக இருப்பதால் ஜாதகி 12ம் பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய இன்னல்களை 100% விகிதம் அனுபவிக்கும் தன்மையை தந்தது, சர நெருப்பு தத்துவ அமைப்பில் அமர்ந்த 12ம் பாவகம், காட்டு தீயின் தன்மையுடன் ஜாதகிக்கு தரவேண்டிய இன்னல்களை எவ்வித குறைபாடும் இன்றி வாரி வழங்கியது.
பொதுவாக சுக்கிரன் திசை ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் என்பர், ஜாதகிக்கு இது நேர்மாறாக அமைந்துவிட்டது, சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் வாழ்க்கையை பெரிய புயலுக்கு ஒப்பாக கலங்கடித்தது, 12ம் பாவகம் சர ராசியான மேஷத்தில் 26 பாகையில் ஆரம்பித்து ஸ்திர ராசியான ரிஷபத்தில் 26 பாகை வரை வியாபித்து இருந்தது சர ஸ்திர ராசிகள் அமைப்பில் இருந்து விரைவான நீடித்த அவயோக பலன்களை அனுபவிக்க வைத்தது, 12ம் பாவகம் மேஷத்தில் ஆரம்பித்த போதிலும், ரிஷபத்திலேயே அதிக பாகைகளை கொண்டு இருப்பதும், ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தான அமைப்பில் வருவதும், ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியது, நடைபெறும் சுக்கிரன் திசையும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லை என்ற சூழ்நிலை உருவானது, வருமானம் என்ற விஷயத்தையும் பதம் பார்த்தது, ஜாதகியின் பேச்சுக்கு சிறிதும் மதிப்பில்லாமல் போனது, ஆக மொத்தத்தில் ஜாதகிக்கு 12ம் பாவகம் தான் தரவேண்டிய அவயோக பலன்களை தங்குதடையின்றி சுக்கிர திசையில் ( சிலர் லக்கினாதிபதி திசை தீமை தாரது என்பர் ) வாரி வழங்கியது.
ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பை பெற்று பலனை தருவது 6ம் பாவக வழியில் இருந்து மறை முக எதிர்ப்பு, மற்றும் உடல் சார்ந்த தொந்தரவுகள், எதிரிகளால் மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் யாவும் நடைபெறாமல் போகும் தன்மை, முன்னேற்றத்திற்க்காக பல வகையில் போராடும் தன்மை, எதிர்பாராத சில இழப்புகள், கடன் கொடுப்பது பெறுவதால் இன்னல்கள், வாழ்க்கை துணையே எதிரியாக மாறும் சூழ்நிலை, தேவையில்லா பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போராடவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் தன்மையை தருகிறது, யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட இயலாத சூழல், நம்பியவர்களால் ஏமாற்றப்படும் தன்மை, எதிர்பார்க்கும் சில விஷயங்கள் ஏமாற்றப்படும் தன்மையும், விரக்தி மனபான்மையையும் தரும்.
9ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் உறவினர்கள் அல்லது பெரியவர்களின் ஆதரவை பெற இயலாத சூழ்நிலையை தந்தது, இறை அருளின் கருணையை பெற இயலாமல் வாழ்க்கையில் போராடும் சூழ்நிலையை தந்தது, எவ்வளவு நல்லவராக இருந்த போதிலும் ஜாதகிக்கு நற்பெயர் கிடைப்பது அரிதானது, தன்னை சார்ந்தவர்களின் உதவிகளையும் பெற முடியாத தன்மையை தந்தது, எந்த ஒரு பிரச்சனைகளையும் ஜாதகி ஒருவராகவே தனித்து நின்று எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்தது, தனது முன்வினை பதிவின் பலன்களை முழுவதும் அனுபவிக்கும் தன்மையை இந்த பிறவியிலேயே அனுபவிக்க நேர்ந்தது.
12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகி குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை, எதிர்பாராத இழப்புகள், வீண் விரையம், அதிக மன போராட்டம், எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்கத தெரியாத தன்மை, விபத்து, உடல் தொந்தரவுகள், பண விரையம், எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறாமல் ஜாதகியை அலைகழிக்கும் தன்மை, சாதரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு கூட ஜாதகி அதிகம் போராடும் தன்மையை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை, உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலை, சூழ்நிலையில் கட்டுண்டு வாழவேண்டிய சந்தர்ப்பத்தை தரும்.
இதுவெல்லாம் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை வரையில்தான் அதாவது 07/12/2015 வரையில் மட்டுமே, இதற்க்கு பிறகு வரும் சூரியன் திசை ஜாதகிக்கு பூர்வ புண்ணியமான 5ம் வீடு, 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வெகுவான யோக பலன்களை வாரி வழங்குகிறது, தனது குழந்தைகள் மூலமும் தனது சுய அறிவு திறன் மூலமும் ஜாதகி மிகப்பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க இயலும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் திசையும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால் இனி வரும் எதிர்காலம் ஜாதகிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஜோதிடடீபம் கருதுகிறது, வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696