ஞாயிறு, 14 டிசம்பர், 2014

குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !


தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும்,  ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.

குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.

 குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.

மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.

மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு "  ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல  தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?

இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது  லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர்  மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர  கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள்  5ம் பாவகத்தின்  வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே  வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக