வெள்ளி, 5 டிசம்பர், 2014

1 நிமிடம் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் ஜாதகத்தில் வேறுபாடும் பாவக பலன்கள் !


சுய ஜாதகத்தில் பாவகத்தின் தன்மை என்பது தனிப்பட்ட வகையில் அமையும் என்பதற்கு கிழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்தாலே நிச்சயம் புலப்படும், பொதுவாக இரட்டையர்கள் ஜாதகத்தில் பலன் காண முற்படும் பொழுது, இருவருக்கும் ஒரே ராசி, ஒரே லக்கினம், ஒரே நட்சத்திரமாக இருந்த போதிலும் பாவகம் என்பது ஒருவரின் சுய ஜாதகத்தை எவ்வாறு ஆளுமை செய்கிறது, பாவகத்தின் வலிமை எவ்வாறு இரட்டை குழந்த்தைகளுக்கு அமைகிறது, அதன் அடிப்படையில் சுய ஜாதக ரீதியாக இரட்டையர்கள் இருவரும் மாறுபட்ட பலாபலன்களை அனுபவிக்கின்றனர், என்பதை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

பொதுவாக சில வினாடிகளோ, சில நிமிடங்களோ வித்தியாசம் பெற்று பிறக்கும் இரட்டை குழந்தைகள் என்றால் பாரம்பரிய முறையில் ஜாதக பலன் காண முற்படும் பொழுது, ஜோதிடர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேருகிறது, குறிப்பாக இரட்டையர்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையில் இருவருக்கும் ஒரே லக்கினம், ஒரே ராசி, ஒரே நட்சத்திரம், நடப்பு திசை மற்றும் புத்திகள் ஒன்றாக இருந்த போதிலும், இருவரின் குணாதிசயங்கள் வெகுவாக மாறுபடும், இருவருக்கும் ஜாதக பலாபலன்களும் வெகுவாக வித்தியாசம் இருக்கும், இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான ஜாதக பலன்களை சொல்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக பாரம்பரிய முறையில் இரட்டையர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து பலன் காணும் ஜோதிடர்கள், ஒரே மாதிரியான பலன்களையே கூறும் சூழ்நிலைக்கு தள்ளபடுகின்றனர், மேலும் வித்தியாசமான பலன்களை அவர்களுக்கு ஜோதிடர்களால் சொல்ல இயலவில்லை என்பதே 100% உண்மை, ஆக இவர்களுக்கு எந்த அமைப்பில் ஜாதக பலன்கள் கணிதம் செய்வது என்ற கேள்வி வருவது இயற்கையே.

மேற்கண்ட கேள்விக்கு சரியான பதில் அவர்களது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை தெரிந்தால் மட்டுமே சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ( பொதுவாக எவர் ஜாதகம் என்றாலும் அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் தன்மை மற்றும் வலிமையை உணர்ந்தால் மட்டுமே, அந்த ஜாதகருக்கு சரியான ஜாதக பலன்கள் சொல்ல இயலும், இல்லை எனில் குத்து மதிப்பாக அந்த ஜாதகருக்கு ஜாதகத்தில் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,நட்பு,பகை,சமம் போன்ற அமைப்பை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசைக்கு புத்திக்கு உண்டான கிரகம் எங்கு அமர்ந்து இருக்கிறது என்ற அடிப்படையிலும், சந்திரனுக்கு சனி,குரு,ராகுகேது ஆகிய கிரகங்களின் கோட்சார பலன்களை அடிப்படையாக கொண்டும், தனது கற்பனை வளத்திற்கு ஏற்றார் போலவும் ஜாதக பலன் சொல்லும் சூழ்நிலையே ஏற்ப்படும் ) ஆக ஒருவரின் சுய ஜாதக பலன்களை காண முற்படும் முன் அந்த ஜாதகருக்கு லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பாவக வலிமை சரியாக நிர்ணயம் செய்து, நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை உணர்ந்தும், அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் யோக அவயோக பலன்களை கருத்தில் கொண்டும் ஜாதக பலன் காணுவதே சரியான முறையாக இருக்கும், ஏனெனில் பாவக வலிமை என்பது நிச்சயம் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் 100% வித்தியாசம் பெற்றே அமைந்திருக்கும், ஒருவருக்கு இருப்பது போல் மற்றொருவருக்கு இருக்காது என்பதை முதலில் ஜோதிடர்கள் உணர்வது அவசியம்.

உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் என்பர்களே !

கிழ்கண்ட இரட்டையர்கள் 1 நிமிட வித்தியாச அமைப்பில் பிறந்தவர்களே! 

அதாவது முதலில் பிறந்தது பெண்:

ஜாதகியின் பிறந்த தேதி : 17/08/1999
ஜாதகியின் பிறந்த நேரம் : 10:55 காலை 
ஜாதகியின் பிறந்த இடம் : பவானி 
ஜாதகியின் லக்கினம் : துலாம் 
ஜாதகியின் ராசி : துலாம் 
ஜாதகியின் நட்சத்திரம் : சுவாதி 1ம் பாதம் 


இரண்டாவது பிறந்தது ஆண் :

ஜாதகரின் பிறந்த தேதி : 17/08/1999
ஜாதகரின் பிறந்த நேரம் : 10:56 காலை 
ஜாதகரின் பிறந்த இடம் : பவானி 
ஜாதகரின் லக்கினம் : துலாம் 
ஜாதகரின் ராசி : துலாம் 
ஜாதகரின் நட்சத்திரம் : சுவாதி 1ம் பாதம் 


மேற்கண்ட அமைப்பில் இருவரது ஜாதகமும் ஒரே மாதிரியான இலக்கினம்,ராசி,நட்சத்திரம் பெற்று இருக்கின்றது ஆனால் இருவரின் ஜாதகத்திலும் பாவகங்களின் தன்மையும், வலிமையையும் முற்றிலும் வேறுவிதமாக அமைந்திருப்பது, இருவருக்கும் நடை முறையில் ஜாதக பலாபலன்களும், நடைபெறும் திசை தரும் பலாபலன்களும் நிறைய வித்தியாசமான பலன்களை தருவது கவனிக்க தக்கது.

இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் தன்மை :

ஜாதகிக்கு 

1,2,3,4,5,8,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும்.
9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித யோக பலன்களையும்.
6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும்.
7ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 60% விகித அவயோக பலன்களையும்.
10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும் தருகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 07/09/2013 முதல் 07/09/2029 வரை ) 1,3,5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

ஜாதகருக்கு 

1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையும்.
2,4,7,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும்.
9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித யோக பலன்களையும்.
6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும் தருகிறது .

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 03/09/2013 முதல் 03/09/2029 வரை ) 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையே வாரி வழங்குகிறது.

எனவே இந்த ஜாதகி தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் குரு திசை ஜீவன பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் பொழுது, இவரது சகோதரரான ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் குரு திசை பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, 

இவர்களுக்கு லக்கினம்,ராசி,நட்சத்திரம் ஆகியவை ஒன்றாக அமைந்த போதிலும் பாவக வலிமையின் தன்மைக்கு ஏற்ப யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகிறது, பொதுவாக பாரம்பரிய முறையில் ஜாதக பலன் காணும் பொழுது இந்த விஷயம் நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, ஏனெனில் பாரம்பரியத்தில் கிரகங்களுக்கு முக்கியத்துவம் தருவார்களே அன்றி, 12 பாவகங்களின் நிலையை பற்றி சிறிதேனும் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதால், ஜாதகத்திற்கு உண்டான துல்லியமான பலன்களை எடுக்க வாய்ப்பு சிறிதும் இல்லை, நவகிரகங்கள் அனைவருக்கும் பொதுவான அமைப்பிலேயே ஜீவ காந்த அலைகளை தருகிறது, ஒவ்வொருவரின் பாவகத்தின் தன்மையே நவகிரகங்கள் தரும் ஜீவ காந்த அலைகளை பெற்று, ஜாதகருக்கு வினை பதிவிற்கு ஏற்றார் போல் யோக அவயோக பலன்களை வழங்குகிறது என்பது ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக