சனி, 13 டிசம்பர், 2014

விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை !




விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை ! எனும் தலைப்பை காணும் வாசக அன்பர்களுக்கு வியப்பு மேலோங்க வாய்ப்பு உண்டாகலாம், விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஒரு ஜாதகர் என்ன யோக பலன்களை அனுபவிக்க இயலும், இந்த பாவக ஜாதகருக்கு அப்படியென்ன யோக வாழ்க்கையை தந்துவிடும் என்ற எண்ணம் வருவது இயற்கையே, பொதுவாக பாரம்பரிய ஜோதிடமுறையில் 6,8,12ம்  வீடுகள் தீய ஸ்தனமாகவே பாவிக்க பட்டு இருக்கிறது, குறிப்பாக 6,8,12ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் நிச்சயம் தீய பலன்களே அனுபவிக்க நேரும் என்பதாகவே இருக்கின்றது, ஜாதகர் மேற்கண்ட 6,8,12ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாதா ? என்ற கேள்விக்கு உண்டான சிந்தனையே இந்த பதிவு அன்பர்களே ! இனி 12ம் பாவகத்தை பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

வாழ்க்கையில் மனிதனின் செயல்கள் எல்லாம் மனதிருப்தி என்ற இலக்கை நோக்கியே செல்கிறது, இந்த மன திருப்தியை தருவது 12ம் பாவக வலிமையே, மன திருப்திக்காக ஒரு மனிதனை இந்த பனிரெண்டாம் பாவகம் எவ்விதம் ஆட்டி படைக்கிறது என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, ஜாதகர் தனது மனதிற்கு திருப்தியை தருவது எதுவென்று அறியாமல் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, உதாரணமாக ஜாதகர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பு, தனக்கு மன திருப்தியை தருவதாக மற்றவர்கள் சொல்ல கேட்டு, மது பழக்கத்திற்கு அறிமுகமாகிறார், இறுதியில் ஜாதகரின் மனம் திருப்தியை பெறுகிறதா ? என்றால் நிச்சயம் இல்லை, மது பழக்கத்தால் ஜாதகரின் மனம் திருப்தியை பெற்று இருந்தால் உண்மையில் ஜாதகர் அந்த பழக்கத்தில் இருந்து 100% சதவிகிதம் விடுபட்டு அல்லவா இருக்க வேண்டும், ஆனால் நடப்பது என்ன ? ஜாதகர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து மன திருப்தியை தேடுகிறார்.

இதை போன்றே அனைத்து தீய பழக்கத்திற்கும் காரணமாக ஜாதகரின், வலிமை அற்ற 12ம் பாவக நிலை அடிகோலுகிறது, இந்த 12ம் பாவகம் வலிமை அற்று போகும் அன்பர்களின் மனதை, மற்றவர்கள் மிக எளிதில் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றி கொள்கின்றனர், ஒரு அரசியல்வாதி தனது தொண்டனை அடிமையாக வைத்திருக்கவும், ஒரு திரைப்பட நடிகர் தனது ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கவும், ஒரு தீவிரவாத தலைவன் தனக்கு கிழ் சிலரை மூளை சலவை செய்து அடிமைகளாக வைத்திருக்கவும், போலி ஆன்மீகவாதி தனது சீடர்களை தனக்கு கிழ்படிந்து நடக்கும் சீடனாக சில நபர்களை பேச்சில் மயக்கி வைத்திருக்கவும், அவர்களின் 12ம் பாவக வலிமையற்ற தன்மையே காரணமாக அமைகிறது, மனிதர்களை மன ரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் மிக எளிதில் அணுகி அவர்களுக்கு ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி அவர்களை தன்வசபடுத்த அவர்களின் ஜாதகத்தில் 12ம் பாவக நிலை வலிமை அற்ற தன்மையில் இருப்பதே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

12ம் பாவகம் வலிமையற்று போகும் பொழுது அந்த ஜாதகர் தனது மனதிற்கு திருப்தி தருவது எதுவென்று அறியாமல் குழப்பத்தின் நடுவிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலையை தருகிறது , குழப்பம் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் சரியான முடிவு எடுப்பது என்பது குதிரை  கொம்பாகிவிடும், இவருக்கு சரியான முடிவை தருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவர்களது தேவைகளை பூர்த்தி சொய்துகொள்ளும் ஆட்களும் உண்டு, ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவு அறிந்து செயல்பட அவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஆகிறது, மேலும் தனது மனதில் ஏற்ப்படும் குழப்பங்களுக்கு தானே தீர்வை தேடும் வல்லமை பெற 12ம் பாவக வலிமை 100% விகிதம் உதவி புரியும் என்பதில் மற்று கருத்து இல்லை அன்பர்களே, வாழ்க்கையில் சிலர் திடீர் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவது இந்த  12ம்  பாவக வலிமை அற்ற தன்மையே என்றால் அது மிகையில்லை, அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை முடித்துகொள்ளும் எண்ணத்தை ஜாதகருக்கு தருவது இந்த 12ம்  பாவகத்தின் வலிமை அற்ற தன்மையே  காரணமாக அமைகிறது அன்பர்களே !

வாழ்க்கையில் ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவுகள் சரியானதா ? அல்லது தவறானதா என்பதை தனது அறிவுக்கு உற்படுத்தி மன ரீதியான தெளிவை பெற சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஒருவரது மனதில் குழப்பம் வரும் பொழுது உயிர் சக்தி விரையபடுத்த  படுகிறது, தேவையற்ற சந்தேகம், பயம் மற்றும் மன தைரியம் யாவும், ஜாதகரை ஒரே இடத்தில் முடக்கி வைக்கிறது, அயன சயன சுகம் எனும் நிம்மதியான தூக்கம் வராமல் ஜாதார் மனோ ரீதியாக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது, நல்ல தூக்கமே ஒருவரை மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது இது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தீய ஸ்தானமாகவே பாவித்து பலன் காண்பது 
முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது இயல்பு மாறாத தன்மையுடன் விளங்க செய்கிறது, எவ்வித சூழ்நிலையையும் தாங்கும் மன வலிமையை தருகிறது, தனது எண்ணங்களின் வலிமையின் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோக வாழ்க்கையை ஜாதகர் பெற முடிகிறது, ஆன்மீகத்தில் சிறந்து விளங்க ஒருவரின் ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது அவ்ச்சியமாகிறது மேலும் 12ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் அமைவது மோட்ச வாழ்க்கையை 100 சதவிகிதம் வழங்கும் என்பதும், சர நீர் தத்துவத்தில் 12ம் பாவகம் அமைவதும் வலிமை பெறுவதும் ஜாதகர் ஆன்மீகத்தின் மூலம்  முக்தி பெரும் யோகத்தை தரும், திருப்தி அடைவது என்பது 12ம் பாவகத்தின் தன்மை எனும் பொழுது, ஆன்மா முக்தி பெற்று திருப்தியான பூர்ணத்துவத்தை பெறுவது மேற்கண்ட பாவகத்திலே என்றால் அது மிகையில்லை அன்பர்களே.

பொதுவாக காதலில் 100% விகிதம் வெற்றி பெற்று காதல் திருமணத்தின் மூலம் பரிபூரணத்தை அடைவதற்கு 12ம் பாவக வலிமை மிக மிக அவசியம் தேவை, காதலில் தோல்வி அடைவதும், காதல் தோல்வியின் மூலம் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்வது 12ம் பாவகத்தி தன்மையே, இதன் விளைவுகளாக தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதும், ஸ்திர தன்மையில்லாத காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பதும் 12ம் பாவகமே, போதும் என்ற மன நிலையை தாராமல், தொடர்ந்து அடுத்து அடுத்து என்று அலைபாயும் மன நிலையை தருவதும் 12ம் பாவகமே, எதுவும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் வல்லமையை தருவது 12ம் பாவக வலிமையே, ஒருவரின் தேடுதலுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளியை வைப்பது 12ம் பாவக வலிமையே, அது பொருள் சார்ந்தது என்றாலும் சரி அறிவு,மனம் மற்றும் இயக்கம் சார்ந்தது என்றாலும் சரி நிச்சயம் இறுதியில் திருப்தி என்ற மன நிலைக்கு ஜாதகரை அழைத்து செல்லும் வல்லமையை தருவது மேற்கண்ட அயன சயன ஸ்தானமே.

இதை தெளிவாக வேதாத்திரி மகரிஷி அய்யா அவர்கள் " தேடுவதை விட்டுவிட்டால் அனைத்தும் அங்கேயே இருப்பது புலனாகும் " எனும் வேதவாக்கின் மூலம் நமக்கு தெளிவு பட நம் அனைவருக்கு சிந்தனையில் உரைக்கும் வண்ணம் அருளியிருக்கிறார், புலனுக்கு எட்டாத அறிவு ஆற்றலை நமக்கு தருவது 12ம் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, 12ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஒரு ஜாதகரால் தனது அலைபாயும் மன ஆற்றலை ஒருமுகமாக கட்டுபடுத்த இயலாது, ஒன்று படுத்தபட்ட சக்தியை எவ்விதத்திலும் பிரயோகிக்கவும் இயலாது, அருங்குண நலன்களை சீரமைக்கவும்  இயலாது, ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இயலாது, மிக துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தன்னை சுய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரவும், ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய வைக்கவும் 12ம் பாவக உதவி நிச்சயம் தேவை அன்பர்களே.

 ஒருவருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் லக்கினத்திற்கு மேல் இருக்கும் 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜாதகரின் இயக்கத்தை ஆளுமை செய்யும் தன்மையும் 12ம் பாவகத்திற்கு 100% சதவிகிதம் உண்டு, லக்கினம் சிறப்பு பெறுவது ஒரு வகையில் நன்மை என்ற போதிலும் 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை 100% விகிதம் சிறப்பாக செயல்பட வைக்கும், ஒருவரின் மன திருப்தியே பூரணத்துவத்தை தருகிறது என்றால், அவரது ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் வலிமையுடன் இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே, அயன சயன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தன்னிலை உணர்வதும், சுய திருப்தி பெறுவதும் இயற்கையாக நடைபெறும், ஒரு ஆன்மீக வாதியையோ, ஒரு நடிகரையோ, ஒரு அரசியல் தலைவரையோ நாடி செல்லும் சூழ்நிலையை தராது, மேற்க்கண்டவர்கள் உண்மையானவர்களாக இருந்து விடில் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை, அதற்க்கு நேர் மாறாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் மூளை சலவை செய்து நம்ப வைக்கபடுவார், இதற்க்கு காரணமாக விரைய ஸ்தானம் வலிமை அற்ற நிலை காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக