பின்தொடர...

Tuesday, December 16, 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - விருச்சிகம்சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


விருச்சிக லக்கினம் : 


லக்கினத்தில் அமர்ந்த சனி பகவான் தங்களுக்கு மனோ ரீதியான போராட்டங்களை தந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானத்தை தரும் வாய்ப்பை தருகிறார், குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், தன்னம்பிக்கை மேலோங்கும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் வாழ்க்கை பிரகாசிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு திடீரென சென்றுவரும் யோகத்தை தரும், எதிர்பாராத உதவிகள் திடீரென கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தனது சிந்தனையும் மனதையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் ஒருமுகபடுத்துவது சால சிறந்தது, தெளிவான சிந்தனையும் செயல்பாடுகளுமே ஜாதகருக்கு வெற்றியை தரும் என்பதால் தனது சுய முன்னேற்றத்தில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது நல்லது, நல்ல வேலையாட்கள் கிடைக்கும் யோக காலம் இதுவென்பதால், ஜாதகர் தான் செய்துவரும் தொழில்களில் விருத்தியை பெறுவதற்கு உண்டான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு எதிராக செயல்படும் அன்பர்கள் மூலமாகவே நன்மையை பெறுவார், மேலும்  ஜாதகருக்கு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து வருமான வாய்ப்பை தந்த வண்ணமே இருப்பார் என்பதை கவனத்தில் கொள்வது சால சிறந்தது, சனி பகவான் தரும் வருமான வாய்ப்புகள் யாவும் சனி பெருக்கம் போல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்து ஜாதகர் தனது செயல்பாடுகளை அமைத்துகொல்வது சிறந்த நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், ஜாதகரை தேடி பண உதவிகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது மிகுந்த நன்மையை தரும், புதிய பொருட்கள் இயந்திர பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு 100% விகித வெற்றியை தரும், உடல் நிலையில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, ஏனெனில் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும், மருத்துவ சிகிச்சை தவிர்க்க இயலாது, சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது பெரிய தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றும்.

7ம் பார்வையாக களத்திர பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஆதரவை வாரி வழங்குகிறார், குடும்ப வாழ்க்கையில் எவ்வித தொந்தரவும் இன்றி சுமுகமான உறவுகள் நீடிக்கும், பிரிவு வரை சென்ற தம்பதியரை சேர்த்து வைக்கும் வல்லமையை சனிபகவான் தனது பார்வையின் மூலம் தருகிறார், வருமான வாய்ப்புகள் என்பது ஸ்திரமான தன்மையுடன் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, கை நிறைவான வருமானம் மூலம் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், புதிய வீட்டிற்கு தேவையான உபகரணங்களையும், வழக்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், கல்வியில் ஏற்ப்பட்ட தடைகள் நீங்கி, கல்வியில் வெற்றியும் உயர் கல்விக்கு உண்டான வாய்ப்பும் உண்டாகும், ஜாதகருக்கு குடும்பம், வாழ்க்கை துணை, வருமானம் என்ற அமைப்பில் இருந்து 100% விகித வெற்றி நிச்சயம் உண்டு என்பதால், இனிவரும் காலங்களை விரிச்சிக லக்கினம் கொண்டவர்கள் சிறப்பாக கையாண்டு நன்மை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக ஜீவன ஸ்தான அமைப்பை வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் ஜீவன மேன்மையை எதிர்பாராத வண்ணம் ஸ்திர தன்மையுடன் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, ஜாதகரின் குல தெய்வ அருளால் புதிய தொழில் துவக்கம், புதிய தொழில் வாய்ப்புகள், சிறந்த வேலைவாய்ப்பை பெரும் யோகம் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெகு விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், தனது அறிவார்ந்த செயல்திறனால் சமுகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்தை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தன்னிறைவான பெருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான சரியான நேரம் இதுவே என்று ஜாதகர் செயலாற்றும் தருணம் என்பதால், வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி நிலையான வெற்றி காண்பது இவர்களது கடமை, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள், நிச்சயம் தாங்கள் ஆற்றிய கடமைக்கு 100% விகித பலன்கள் உறுதியாக கிடைக்கும்.

விரிச்சிக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment