செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சாயா கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் 1,7ம் பாவகங்களில் அமர்ந்து வழங்கும் யோக பலன்கள் !



கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண பொருத்தம் காண,  ஜாதக ஆலோசனை பெற வந்த அன்பரின் ஜாதகத்தில் ராகு கேதுவின் தன்மையையும், அவர்கள் அமர்ந்த பாவகத்தின் வலிமையை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் ஆகிவிட்டது, ஜாதகர் திருமணத்திற்க்கா எடுத்த முயற்ச்சிகள் யாவையும், ஜோதிடர்கள் ராகு கேது 1,7ம்  பாவகங்களில் அமர்ந்து இருக்கும் நிலையை மேலோட்டமாக கருத்தில் கொண்டு ராகுகேது தோஷம், சர்ப்ப தோஷம், மற்றும் களத்திர தோஷம் இருப்பதாக விளக்கம் தந்து, இது தோஷ ஜாதகம் எனவே இதை போன்ற அமைப்பை கொண்ட ஜாதகத்துடன் இணைப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தி வந்துள்ளனர்.


 இவர்களது பெற்றோர்களும், அதையே வேத வாக்காக எடுத்துகொண்டு வதுவின் ஜாதகத்தை தேடியுள்ளனர், ஜாதகருக்கு சரியான வயதில் தேடிவந்த நல்ல வதுவின் ஜாதகங்களை தோஷத்தை காரணம் காட்டி தவிர்த்து வந்துள்ளனர், நாளடைவில் ஜாதகருக்கு சமதோஷம் கொண்ட பெண்  ஜாதகம் இறுதி வரை கிடைக்கவில்லை, ஜாதகரின் குடும்பமும் இறுதியில் விவாகரத்து அல்லது விதவை  போன்று ஏதாவது ஒரு பெண் அமைந்தால் கூட போதும் என்ற நிலைக்கு வந்து  தற்பொழுது திருமணம் செய்துகொள்ள பெண் கிடைத்தால் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளனர், ஜாதகரும் தனது பெற்றோர்கள் வார்த்தையை மீறாமல் தனது திருமண வாழ்க்கையை பெற்றோர்களின் கைவசமே ஒப்படைத்துவிட்டு பொறுமையுடன் காத்து இருப்பதின் ரகசியம் அவரது ஜாதகத்தில் ராகு பகவான் லக்கனத்தில் அமர்ந்து சிறப்பான நல்ல குணத்தை வழங்கியதும், ரிஷபத்தின் ஸ்திர மண் தத்துவத்திற்கு உண்டான பொறுமை குணத்தை ராகுபகவான் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதை தவிர வேறு என்ன ? சொல்ல இயலும் அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்களில் ராகு கேதுவின் அமர்வை வைத்து தோஷம் என்று நிர்ணயம் செய்வதால் வரும் குழப்பமே அன்றி வேறு எதுவும் இல்லை, மேற்கண்ட பாவகங்களில் ராகு கேது அமர்ந்தாலே குறிப்பிட்ட பாவகங்களுக்கு சாயா கிரகங்கள் தீமையை தான் செய்யும் என்று முடிவுக்கு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் இந்த தவறே கடந்த 7வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது, திருமண தாமதத்திற்கு காரணமாக இவர்கள் சொல்லும் ராகு கேது தோஷமாக ஜோதிடதீபம் கருதவில்லை, இவரது சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்ட அமைப்பே, என்ற போதிலும், ஜோதிடர்களால் முன்னிறுத்த பட்டது ராகுகேது தோஷமே, ஒருவேளை ஜாதகர் குடும்ப ஸ்தானம் வலிமை உள்ள ஒரு வதுவை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து இருந்தால், ஜாதகரின் குடும்ப வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக அமைந்திருக்கும், உண்மையில் இந்த ஜாதகருக்கு சாயா கிரகங்கள் எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிவு செய்த கட்டுரைகளின் உண்மை நிலைக்கு ஏற்ப ஒருவரது சுய ஜாதகத்தில் சம வீடான லக்கினத்தில் அமரும் சாய கிரகங்கள் 100% விகித நன்மையே செய்யும் என்பதிற்கு இணங்க, ரிஷப லக்கினத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு, சிறந்த நல்ல குணத்தையும், பொறுமையான மன பக்குவத்தையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட  ஆயுளையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறார், லக்கினத்தில் ராகு அமரும் பொழுது ஜாதகர் சிறந்த அறிவாளியாகவும், நுணுக்கமான அறிவு திறனையும், ஆய்வு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகமும், யாரையும் எதிர்பாரமால் வாழ்க்கையில் முன்னேறி செல்லும் தன்மையை பெற்று இருப்பார், புகழ் கீர்த்தி மற்றும் மற்றவர்கள் போற்றும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதிற்கு ஏற்றார் போல் ஜாதகருக்கு புனிதமான மருத்துவ துறையில் உயர் பதவியை பெற்று தந்தது ராகு பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் மருத்துவ துறையில் உயர் நிலை பட்டம் பெற்றவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், மேலும் ராகு பகவானின் வலிமை இந்த ஜாதகருக்கு ஒரு "அருள் கொடையை" வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது, அதாவது ஜாதகர் இதுவரை மேற்கொண்ட அறுவை சிகிச்சை அனைத்திலும் வெற்றியே  கண்டுள்ளார், இவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள் அனைவரும் பூர்ண குணம் அடைந்துள்ளனர்.

7ல் கேது அமர்ந்து நல்ல நிலையில் உள்ள ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்களை வாழ்க்கை துணையாக பெரும் யோகத்தை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லாம், ஏனெனில் தனது வாழ்க்கை துணையை  உயிரினும் மேலாக நேசிக்கும் அளப்பரிய இல்லற வாழ்க்கையை தரும், குறிப்பாக இவரது ஜாதகத்தில் விருச்சிகத்தில் அமர்ந்த கேதுபகவான் ஜாதகரின் வாழ்க்கை துணையை உளமார நேசித்து இல்லற வாழ்க்கையில், மன மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தும் அழகை சிறப்பாக எடுத்து காட்டுகிறது, மேலும் விருச்சிகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை குறிக்கும் 8ம் பாவகமாக வருவது, ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் அதிர்ஷ்ட வாழ்க்கையை கட்டியம் கூறுகிறது, ஆக மொத்தத்தில் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகாவான் ஜாதகருக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை வழங்குகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் 7ல் அமர்ந்த கேது ஜாதகரின் வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் செல்வாக்கு ஆகியவற்றை குறிப்பதால், ஜாதகர் பொதுமக்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர், இவரது பேச்சில் மற்றவர்களின் மன கவலை கூட மறந்து போகும் விதத்தில் அமையும் என்பது, இவருடன் பழகிய நண்பர்களுக்கும், இவரிடம் மருத்துவம் பார்த்துகொண்ட அன்பர்களுக்கும் நிச்சயம் தெளிவாக தெரியும், ஜாதகர் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல சிறந்த மன நல ஆலோசகரும் கூட, இந்த தனி திறமை ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்ததிற்கு காரணம் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேதுபகவானின் வலிமையே என்றால் அது மிகையில்லை.

ரத்தினசுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் மேற்கண்ட ஜாதகருக்கு ரிஷப லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் ( ஸ்திர மண் ராசி ) இயக்க நிலையில் உள்ள மண் தத்துவமான மனித உடலின் தன்மைகளை தெள்ள தெளிவாக புரிந்துகொள்ளும் ஆற்றலை தந்து, ஜாதகரை புனிதமான மருத்துவ துறையில் பிரகாசிக்க செய்தது.

விருச்சிக ராசியில் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான் ( ஸ்திர நீர் ராசி ) கண்ணிற்கு தெரியாத மற்றவர்களின் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களை தெள்ள தெளிவாக புரிந்துகொள்ளும் வல்லமையை தந்தது, ஜாதகர் இந்த சிறப்பு இயல்பு ஜாதகரை தனது துறையில் சிறந்து விளங்க மிக மிக உதவிகரமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை, எனவே இந்த ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகுகேது கிரகங்கள் ஜாதகருக்கு 100% விகித பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்குகிறது என்பதே ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக